முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கமனித்தல் முதல் - கயிறுமாறுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கமனித்தல் முதல் - கயிறுமாறுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கயத்தி | கீழ்மகள் ; கொடியவள் . |
| கயந்தலை | மெல்லிய தலை ; யானைக்கன்று ; மனத்துயர் ; குழந்தை . |
| கயப்பினை | வங்கமணல் . |
| கயப்பு | கசப்பு . |
| கயப்பூ | நீர்ப்பூ . |
| கயம் | மென்மை ; பெருமை ; இளமை ; கீழ்மை ; கீழ்மக்கள் ; கரிக்குருவி ; நீர்நிலை ; நீர் ; கடல் ; ஆழம் ; அகழி ; யானை ; தேய்வு ; குறைபாடு ; கேடு ; காசநோய் . |
| கயமுகன் | யானைத்தலையையுடைய விநாயகன் ; ஓரசுரன் . |
| கயமுனி | யானைக்கன்று . |
| கயமை | கீழ்மை . |
| கயல் | கெண்டைமீன் . |
| கயவஞ்சி | உலுத்தன் . |
| கயவளாகம் | கீழுலகம் . |
| கயவன் | கீழ்மகன் ; கொடியவன் . |
| கயவாய் | கழிமுகம் ; கரிக்குருவி ; எருமை ; பெரியவாய் . |
| கயவாளி | பேராசைக்காரன் ; அயோக்கியன் ; கயையிற் செய்யும் சிராத்தத்தில் உண்ணுதற்குரிய அந்தணன் . |
| கயாவாளி | பேராசைக்காரன் ; அயோக்கியன் ; கயையிற் செய்யும் சிராத்தத்தில் உண்ணுதற்குரிய அந்தணன் . |
| கயவு | பெருமை ; மென்மை ; கழிமுகம் ; களவு ; கரிக்குருவி ; கீழ்மை . |
| கயற்கெண்டை | கெண்டைமீன்வகை . |
| கயிங்கரியபரர் | ஏவல் செய்வார் . |
| கயிங்கரியம் | கைங்கரியம் , ஊழியம் , ஏவல் தொழில் . |
| கயிப்பு | இலாகிரி . |
| கயிரம் | அலரிச்செடி . |
| கயிரவம் | ஆம்பல் ; செவ்வாம்பல் ; வெள்ளாம்பல் . |
| கயிரிகம் | காவிக்கல் . |
| கயில் | தேங்காய்ப்பாதி ; அணிகலக் கடைப் புணர்வு ; பிடரி . |
| கயிலாசம் | காண்க : கயிலை . |
| கயிலாயம் | காண்க : கயிலை . |
| கயிலாயன் | கயிலாய மலைக்குரிய சிவன் . |
| கயிலி | பலவண்ண உடை ; கையொலி . |
| கயிலை | கைலாயமலை . |
| கயிலையாளி | காண்க : கயிலாயன் . |
| கயிலையிற்கடுங்காரி | மாமிசபேதி . |
| கயிற்கடை | கொக்குவாய் . |
| கயிற்றரவு | கயிற்றில் தோன்றும் பாம்புணர்ச்சி . |
| கயிற்றளவு | தவசக் குவியல் முதலியவற்றைக் கயிறுகொண்டு குறிக்கும் அளவு . |
| கயிற்றுக்கோல் | ஒருவகைத் தராசு , காய்கறி முதலியன நிறுக்கும் ஒருவகை நிறைகோல் . |
| கயிற்றுக்கோலாட்டம் | பின்னற் கோலாட்ட விளையாட்டு . |
| கயிற்றுப்பொருத்தம் | கலியாணப் பொருத்தங்களுள் ஒன்றான இரச்சுப் பொருத்தம் . |
| கயிற்றுவலை | ஒருவகை மீன்வலை . |
| கயிற்றேணி | நூலேணி . |
| கயிறடித்தல் | அறுக்கும் மரங்களுக்கு நூல் வைத்துக் காவி முதலியவற்றாற் குறிதட்டுதல் . |
| கயிறு | நூல் முதலியவற்றால் முறுக்கித் திரித்தவடம் , பாசம் ; மங்கலநாண் ; நூல் ; சாத்திரம் . |
| கயத்தல் | வெறுத்தல் , கைத்தல் . |
| கயிறுகட்டிவிடுதல் | பொய்ச்செய்தி உண்டாக்கிப் பரப்புதல் . |
| கயிறுகட்டுதல் | இல்லாததை உண்டாக்கிச் சொல்லுதல் ; நாட்கழித்தல் ; பாசாங்கு செய்தல் ; வஞ்சித்தல் . |
| கயிறுசாத்துதல் | சாத்திரம் பார்க்க ஏட்டிலே கயிறிடுதல் . |
| கயிறுதடி | நெய்வோர் கருவியுள் ஒன்று . |
| கயிறுதிரித்தல் | கயிறு முறுக்குதல் ; கற்பித்துச் சொல்லுதல் . |
| கயிறுபிடித்தல் | கட்டடம் முதலியவற்றுக்காகக் கயிறுபிடித்து நேர்மையறிதல் . |
| கயிறுபிடித்தறிதல் | கட்டடம் முதலியவற்றுக்காகக் கயிறுபிடித்து நேர்மையறிதல் . |
| கயிறுமாறுதல் | மாடு குதிரை போன்றவற்றை விற்பவர் கயிற்றைப் பிடித்து வாங்குவோர் கையில் கொடுத்தல் . |
| கமனித்தல் | போதல் . |
| கமி | மிளகு . |
| கமித்தல் | நடத்தல் ; பொறுத்தல் ; தாங்குதல் . |
| கமுக்கக்காரன் | அடக்கமுள்ளவன் . |
| கமுக்கட்டு | அக்குள் . |
| கமுக்கம் | அடக்கம் , குறையை வெளிப்படுத்தாமை ; இரகசியம் . |
| கமுகம்பூச்சம்பா | ஒருவகை நெல் . |
| கமுகமடல் | கமுகம்பட்டை . |
| கமுகு | பாக்குமரம் . |
| கமுனை | மாதுளை . |
| கமை | பொறுமை ; மலை . |
| கமைத்தல் | பொறுத்தல் , தாங்குதல் . |
| கமைதல் | நிரம்புதல் |
| கமைப்பு | பொறுமை ; அடக்கம் . |
| கய | பெரிய ; மெல்லிய . |
| கயக்கம் | வாட்டம் ; இடையீடு ; கலக்கம் . |
| கயக்கால் | ஊற்றுக்கால் . |
| கயக்கு | மனக்கலக்கம் , சோர்வு . |
| கயக்குதல் | கசக்கச்செய்தல் ; கலங்குதல் . |
| கயங்குதல் | கசங்குதல் ; சோர்தல் ; கலங்குதல் . |
| கயத்தம் | துளசி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 266 | 267 | 268 | 269 | 270 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கமனித்தல் முதல் - கயிறுமாறுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கயிலை, ஒருவகை, நூல், கரிக்குருவி, காண்க, கீழ்மை, கட்டடம், முதலியவற்றுக்காகக், சொல்லுதல், சாத்திரம், கயிறு, கயிறுபிடித்து, நேர்மையறிதல், பொறுமை, கலங்குதல், அடக்கம், தாங்குதல், பொறுத்தல், யானைக்கன்று, மென்மை, கயையிற், செய்யும், அயோக்கியன், பேராசைக்காரன், கழிமுகம், சிராத்தத்தில், உண்ணுதற்குரிய, பெருமை, மெல்லிய, ஏவல், அந்தணன், கயிலாயன்

