முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கயிறுமுறுக்குதல் முதல் - கர்மிகள் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கயிறுமுறுக்குதல் முதல் - கர்மிகள் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கர்ப்பவோட்டம் | கருக்கொள்ளும் மேகவோட்டம் , மார்கழி மாதத்தில் கருக்கொண்ட மேகத்தின் தென்சார்பான ஓட்டம் . |
| கர்ப்புரை | சாம்பிராணி . |
| கர்ப்பூரசிலாசத்து | ஒருவகை மருந்துக்கல் . |
| கர்ப்பூரத்துளசி | கருப்பூர மணமுள்ள துளசி வகை . |
| கர்ப்பூரத்தைலம் | மணமுள்ள பூச்சுமருந்து ; கருப்பூரத்தினின்று எடுக்குந் தைலம் . |
| கர்ப்பூரதீபம் | கருப்பூரத்தினின்று எரியும் விளக்கு . |
| கர்ப்பூரப்புல் | ஒருவகை மணப்புல் . |
| கர்ப்பூரமரம் | கருப்பூரம் உண்டாதற்குரிய மரம் ; மரவிசேடம் . |
| கர்ப்பூரவல்லி | ஒருவகை மருந்துச் செடி ; ஒரு வகை மணந்தருஞ் செடி . |
| கர்ப்பூரவள்ளி | ஒருவகை மருந்துச் செடி ; ஒரு வகை மணந்தருஞ் செடி . |
| கர்ப்பூரவாழை | வாழைவகை . |
| கர்ப்பூரவிலை | கோயில் நிலங்களுக்குக் கொடுக்கும் விலை . |
| கர்ப்பூரவெற்றிலை | வெற்றிலைவகை . |
| கர்ப்போட்டம் | காண்க : கர்ப்பவோட்டம் . |
| கர்மணிப்பிரயோகம் | செயப்பாட்டுவினை வழக்கு . |
| கர்மம் | செயல் , கருமம் . |
| கர்மாந்தரம் | இறந்தவர் பொருட்டுப் பதினாறாம் நாள் செய்யும் சடங்கு . |
| கர்மிகள் | தொழிலாளிகள் ; காண்க : உலோபி . |
| கயிறுவெட்டுப்புண் | வடத்தால் அறுபட்ட புண் . |
| கயினி | அத்தநாள் ; கைம்பெண் . |
| கர்க்கசம் | கடினமானது . |
| கர்க்கடக சங்கிராந்தி | ஆடிமாதப் பிறப்பு . |
| கர்க்கடகசிங்கி | கடுக்காய்ப்பூமரம் . |
| கர்க்கடகம் | நண்டு ; ஓர் இராசி . |
| கர்க்கரி | கரகம் ; தயிர்கடை தாழி . |
| கர்ச்சித்தல் | முழங்குதல் . |
| கர்ச்சிதம் | முழக்கம் ; மேகம் ; யானை முதலியவற்றின முழக்கம் . |
| கர்ச்சிப்பு | முழக்கம் ; மேகம் ; யானை முதலியவற்றின முழக்கம் . |
| கர்ச்சினை | பேரொலி . |
| கர்ச்சூர் | பேரீந்து ; கழற்கொடி . |
| கர்ச்சூரம் | பேரீந்து ; கழற்கொடி . |
| கர்ணகடோரம் | செவிக்குக் கடுமையானது . |
| கர்ணகடூரம் | செவிக்குக் கடுமையானது . |
| கர்ணகூசிகை | காதுநோய்வகை . |
| கர்ணசூலை | காதுக் குத்து . |
| கர்ணநாதம் | காதிரைச்சல் நோய் . |
| கர்ணபத்திரம் | ஓலையென்னும் காதணி ; தெய்வத் திருமேனிகட்குச் சாத்தும் காதுபோன்ற அணி . |
| கர்ணபரம்பரை | செவிவழியாக வந்த செய்தி . |
| கர்ணம் | காது ; ஊர்க்கணக்கு வேலை ; ஊர்க்கணக்கன் . |
| கர்ணமந்திரம் | காதோடு சொல்லும் இரகசியம் ; இரகசியம் பேசிப் பெறுஞ் செல்வாக்கு ; இறக்கும் நிலையில் இறப்பவரின் காதில் சபிக்கும் வேதமந்திரம் . |
| கர்ணவேதம் | காதுகுத்தல் . |
| கர்ணவேனம் | காதுகுத்தல் . |
| கர்ணா | ஒருவகை வாத்தியம் . |
| கர்ணிகம் | சன்னிவகை . |
| கர்ணிகை | தாமரைப் பொகுட்டு . |
| கர்த்தத்துவம் | கர்த்திருத்துவம் , கடவுள் தன்மை ; தொழில் நடாத்து முதன்மை . |
| கர்த்த துரோகம் | அரச துரோகம் . |
| கர்த்தபம் | கழுதை . |
| கர்த்தவம் | கழுதை . |
| கர்த்தமம் | சேறு ; பாவம் ; இறைச்சி . |
| கர்த்தரிப் பிரயோகம் | செய்வினை வழக்கு . |
| கர்த்தவியம் | செய்யத்தக்கது . |
| கர்த்தன் | செய்வோன் , வினைமுதல் ; கடவுள் ; தலைவன் . |
| கர்த்தா | செய்வோன் , வினைமுதல் ; கடவுள் ; தலைவன் . |
| கர்த்தாக்கள் | படைப்பு முதலிய தொழில் புரியும் ஐங்கடவுளர் ; மதுரை நாயக்க அரசர் பட்டப் பெயர் . |
| கர்நாடகம் | கன்னடம் , ஒரு மாநிலம் ; தென்னாட்டு இசை ; ஒரு பண் ; பழைய மாதிரி . |
| கர்ப்பக்கிருகம் | கருவறை , ஆலயத்திலுள்ள மூலத்தானம் . |
| கர்ப்பக்குழி | காண்க : கர்ப்பப் பை . |
| கர்ப்பகோசம் | காண்க : கர்ப்பப் பை . |
| கர்ப்பகோளகை | காண்க : கர்ப்பப் பை . |
| கர்ப்பங்கரைதல் | கருச் சிதைதல் ; அச்ச மிகுதல் . |
| கர்ப்பங்கலங்குதல் | கருச் சிதைதல் ; அச்ச மிகுதல் . |
| கர்ப்பச்சடங்கு | கருக்கொண்டவளுக்கு இரண்டாமாதம் முதல் பத்தா மாதம்வரை செய்யுஞ் சடங்குகள் . |
| கர்ப்பச்சூடு | பெற்றோர் வழியாக வரும் குழந்தை நோய்வகை ; அச்சரம் . |
| கர்ப்பசிராவம் | கருச்சிதைவு ; வெள்ளைநோய் . |
| கர்ப்பசீமான் | பிறவிச் செல்வன் . |
| கர்ப்பசூலை | சூதகத் தடை ; கருப்பையில் வேதனை . |
| கர்ப்பந்தரித்தல் | கருக்கொள்ளுதல் . |
| கர்ப்பப் பை | கருத்தங்கும் உறுப்பு . |
| கர்ப்பம் | கரு ; கருக்கொள்கை ; உட்கொண்டது ; நாடகச் சந்தி ஐந்தனுள் ஒன்று ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| கர்ப்பமேகம் | வெள்ளைநோய் . |
| கர்ப்பவதி | கருவுற்ற பெண் , கர்ப்பிணி . |
| கர்ப்பவாசம் | கருப்பத்தில் தங்குகை . |
| கர்ப்பவாதை | மகப்பேற்று வலி . |
| கர்ப்பவாயு | சூதகவாயு , குழந்தை பிறக்கும் காலத்தில் ஏற்படும் ஒருவகை நோய் . |
| கயிறுமுறுக்குதல் | காண்க : கயிறுதிரித்தல் . |
| கயிறுருவிவிடுதல் | எருது முதலியவற்றை அவிழ்த்துவிடுதல் ; தூண்டிவிடுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 267 | 268 | 269 | 270 | 271 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கயிறுமுறுக்குதல் முதல் - கர்மிகள் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒருவகை, செடி, கர்ப்பப், முழக்கம், கடவுள், செய்வோன், வினைமுதல், கழுதை, தொழில், துரோகம், தலைவன், கருச், வெள்ளைநோய், மிகுதல், அச்ச, சிதைதல், குழந்தை, ஒன்று, நோய், வழக்கு, மேகம், மணந்தருஞ், மருந்துச், மணமுள்ள, கருப்பூரத்தினின்று, யானை, முதலியவற்றின, கர்ப்பவோட்டம், இரகசியம், கடுமையானது, செவிக்குக், பேரீந்து, கழற்கொடி, காதுகுத்தல்

