தமிழ் - தமிழ் அகரமுதலி - கம் முதல் - கம்புள் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கம்பளிப்பூச்சி | உடலில் மயிருள்ள ஒருவகைப் புழு . |
| கம்பளியாடு | குறும்பாடு . |
| கம்பன் | காஞ்சிபுரத்துச் சிவபிரான் ; தமிழில் இராமாயணம் இயற்றிய பெரும்புலவர் . |
| கம்பனம் | அசைவு ; நடுக்கம் . |
| கம்பாகம் | கப்பற்கயிறு . |
| கம்பி | பொன் , இரும்பு முதலியவற்றின் கம்பி ; காதணிவகை ; கடிவாளம் ; ஆடையின் ஓரச் சிறுகரை ; சித்திரக் கம்பி ; வெடியுப்பு ; காசு ; நீண்ட கொம்பு ; ஒருவகை மரம்' ; கம்பளிப் பிசின் ; அபின் ; தந்தி . |
| கம்பிகட்டுதல் | ஆடைக்குச் சாயக்கரை யிடுதல் ; எழுதகவேலை செய்தல் ; கம்பியால் அணிகலன்கட்கு முத்து முதலியவை கட்டுதல் ; குடைக் கம்பி கட்டுதல் . |
| கம்பிகாட்டுதல் | காண்க : கம்பிநீட்டுதல் . |
| கம்பித்தல் | அசைதல் ; நடுங்குதல் ; முழங்குதல் ; அசைத்தல் ; நடுங்கச் செய்தல் . |
| கம்பிதம் | அசைவு , நடுக்கம் ; கமகம் பத்தனுள் ஒன்று . |
| கம்பிநீட்டுதல் | ஓடிவிடுதல் , ஓடிமறைதல் . |
| கம்பியச்சு | கம்பியிழுக்கும் தட்டார் கருவி . |
| கம்பிலி | கம்பி ; ஓரு மரவகை . |
| கம்பிவாங்குதல் | கம்பியை நீட்டமாக்கல் ; ஒடி விடுதல் . |
| கம்பிவிளக்கு | மின்சாரவிளக்கு . |
| கம்பீரம் | ஆழம் ; ஆழ்ந்த அறிவு ; வீறு ; செருக்கு . |
| கம்பீரவாக்கு | பொருளாழ்ந்த செய்யுள் ; எடுப்பான குரல் . |
| கம்பீரித்தல் | எடுப்பான குரலாற் பேசுதல் . |
| கம்பு | ஒருவகைத் தவசம் ; கம்பம் ; சிறு தடி ; கழி ; மரக்கொம்பு ; செடிகொடிகளின் சிறு தண்டு ; அளவுகோல் ; கட்டுத்தறி ; சங்கு . |
| கம்புகட்டி | நீர் பாய்ச்சுவோன் . |
| கம்புகம் | அபின் . |
| கம்புள் | சங்கு ; சம்பங்கோழி ; நீர்ப்பறவை ; வானம்பாடி . |
| கம்பளி | ஆட்டுமயிரினாற் செய்யப்பட்ட ஆடை முதலியன ; ஆட்டின் மயிர் ; ஒருவகை ஆடு ; கம்பளிச்செடி ; தாறுமாறு ; ஒருவகைப் பூச்சி . |
| கம்பளிச்செடி | முசுக்கட்டை . |
| கம் | வானம் ; காற்று ; மேகம் ; வெண்மை ; உயிர் ; தலை ; நீர் ; ஆடு ; தொழில் ; கம்மியர் தொழில் ; வீட்டின்பம் ; மண்டையோடு ; பிரமன் . |
| கம்பக்கணை | மனஞ்சலியாதவன் . |
| கம்பக்கூத்தாடி | கழைக்கூத்தன் . |
| கம்பங்கூத்தாடி | கழைக்கூத்தன் . |
| கம்பக்கூத்து | கழைக்கூத்து . |
| கம்பங்களி | கம்புமாவாற் சமைத்த களி . |
| கம்பங்கொளுத்தல் | கம்பவாணத்துக்கு நெருப்புவைத்தல் . |
| கம்பங்கோரை | ஒருவகைப் புல் . |
| கம்பசூத்திரம் | குறிப்புப் பொருள் அடங்கிய கம்பன் கவி ; விடுவிக்க இயலாத புதிர் . |
| கம்பசேவை | கம்பத்தில் திருவிளக்கு ஏற்றிச் செய்யும் பூசை . |
| கம்பஞ்சம்பா | சம்பா நெல்வகை . |
| கம்பட்டக்காரன் | காசு செய்வோன் . |
| கம்பட்டக்கூடம் | நாணயசாலை . |
| கம்பட்டம் | காசு , நாணயம் . |
| கம்பட்டமுளை | நாணய முத்திரை . |
| கம்படி | ஊர்ப்புறத்துக் கம்பு விளைவிக்கும் நிலம் . |
| கம்பத்தக்காரன் | நிலச் சொந்தக்காரன் ; செல்வன் . |
| கம்பத்தம் | சொந்த வேளாண்மை , வேளாண்மை . |
| கம்பத்து | தோணியின் ஓட்டை ; கப்பலில் விழும் ஓட்டை ; பகட்டு . |
| கம்பத்துப்பார்த்தல் | கப்பலின் ஓட்டையை அடைத்தல் . |
| கம்பதாளி | ஒருவகை நோய் . |
| கம்பபாணம் | நீண்ட கம்பத்தில் இணைத்துக் கொளுத்தப்படும் வாணம் . |
| கம்பவாணம் | நீண்ட கம்பத்தில் இணைத்துக் கொளுத்தப்படும் வாணம் . |
| கம்பம் | தூண் ; விளக்குத்தண்டு ; கொடிமரம் ; அசைவு ; நடுக்கம் ; கச்சி யேகம்பர்கோயில் ; பாய்மரம் . |
| கம்பம்புல் | புல்வகை . |
| கம்பரிசி | கம்புத்தவசம் . |
| கம்பல் | ஆடை ; ஆரவாரம் . |
| கம்பலம் | கம்பளி ; இரத்தினக் கம்பளம் ; செவ்வாடை ; மேற்கட்டி ; கம்பலை , ஆரவாரம் . |
| கம்பலை | நடுக்கம் ; அச்சம் ; துன்பம் ; சச்சரவு ; ஆரவாரம் ; மருதநிலம் ; யாழோசை . |
| கம்பலைகட்டுதல் | சச்சரவு செய்தல் . |
| கம்பலைத்தல் | ஆரவாரித்தல் . |
| கம்பலைப்படுதல் | சண்டை செய்தல் . |
| கம்பலைமாரி | சினமுடையவள் ; ஒரு பெண் தெய்வம் . |
| கம்பளத்தான் | ஒரு சாதியான் . |
| கம்பளம் | ஆட்டுமயிரினாற் செய்யப்பட்ட போர்வை முதலியன ; கம்பளிப் போர்வை ; செவ்வாடை ; செம்மறிக்கடா ; மயிர்ப்படாத்தாலாகிய இருக்கை ; தொட்டியச் சாதி ; சருக்கரைப் பூசணி . |
| கம்பளர் | மருதநில மாக்கள் ; தொட்டியச் சாதியார் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 264 | 265 | 266 | 267 | 268 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கம் முதல் - கம்புள் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கம்பி, செய்தல், நடுக்கம், ஒருவகைப், ஆரவாரம், கம்பத்தில், ஒருவகை, அசைவு, காசு, நீண்ட, கழைக்கூத்தன், இணைத்துக், ஓட்டை, வேளாண்மை, கொளுத்தப்படும், கம்பலை, போர்வை, தொட்டியச், சச்சரவு, தொழில், கம்பளம், செவ்வாடை, வாணம், கம்பளி, கம்பிநீட்டுதல், எடுப்பான, கட்டுதல், அபின், கம்பன், கம்பளிப், கம்பு, கம்பம், செய்யப்பட்ட, முதலியன, ஆட்டுமயிரினாற், நீர், சிறு, சங்கு, கம்பளிச்செடி

