தமிழ் - தமிழ் அகரமுதலி - கந்தாலி முதல் - கப்பு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கப்பியம் | உண்ணத்தக்கது . |
| கப்பியல் | கயிறிழுக்குங் கருவி . |
| கப்பு | கவர்கொம்பு ; கிளை ; பிளவு ; சிறுதூண் ; தோள் ; ஆதாரம் ; கவர்ச்சி ; சாயத்தின் அழுத்தம் ; செஞ்சாயவகை ; மயிர்க்கு ஊட்டுஞ்சாயம் ; கமுக்கம் ; உயரம் . |
| கந்திற்பாவை | தூணில் பெண் வடிவாய் அமைந்த தெய்வம் . |
| கந்து | தூண் ; யானை கட்டும் தறி ; ஆதீண்டு குற்றி ; தெய்வம் உறையும் தூண் ; பற்றுக் கோடு ; யாக்கையின் மூட்டு ; சந்து ; கழுத்தடி ; வண்டியுளிரும்பு ; வண்டி இருசு ; வண்டி ; மாடு பிணைக்குந் தும்பு ; வைக்கோல் வரம்பு ; பொலிப் புறத்தடையும் பதர் . |
| கந்துகட்டுதல் | காய்கறிகளைக் கொதிக்கவைக்கும்போது நீரில் அவை ஒதுங்கி மிதத்தல் ; களத்தைச் சுற்றி வைக்கோல் சேர்தல் . |
| கந்துகம் | பந்து ; குதிரை ; குறுநில மன்னரின் குதிரை . |
| கந்துகவரி | மகளிர் பந்தாட்டுப் பாட்டு . |
| கந்துகளம் | நெல்லும் பதரும் கலந்த களம் . |
| கந்துகன் | தான்றிமரம் . |
| கந்துதல் | கெடுதல் ; கூச்சமடைதல் . |
| கந்துமாறிக்கட்டுதல் | நுகத்தில் மாடுகளை மாற்றிக்கட்டுதல் ; தந்திரம் செய்து புரட்டுதல் . |
| கந்துமாறுதல் | இணைத்ததை மாற்றிவிடல் , நுகத்திற் பூட்டிய மாடுகளை வலமிடம் மாற்றிக் கட்டுதல் . |
| கந்துவட்டி | பிடிப்புவட்டி . |
| கந்துவான் | பிணைகயிறு . |
| கந்துள் | கரி . |
| கந்துளம் | பெருச்சாளி . |
| கந்தேறு | கோடகசாலை என்னும் ஒருவகைப் பூடு . |
| கந்தை | கிழிந்த ஆடை , பீற்றல் துணி , சிறு துகில் ; கருணைக்கிழங்கு . |
| கந்தோடம் | குவளைவகை . |
| கந்தோதம் | தாமரை ; குவளை . |
| கப்பங்கட்டுதல் | திறைசெலுத்தல் . |
| கப்பச்சு | கம்மாளர் கருவியுள் ஒன்று . |
| கப்படம் | கந்தைச்சீலை ; சீலை ; ஆடை . |
| கப்படா | அரைக்கச்சை . |
| கப்படி | கொடுக்கு . |
| கப்படிமரம் | வேரில் இருந்து கிளைத்தெழும்பும் ஒருவகை மரம் . |
| கப்பணம் | இரும்பால் ஆனைநெருஞ்சி முள்போலப் பண்ணிய கருவி ; ஒருவகைக் கழுத்தணி ; கைவேல் ; காப்புக்கயிறு ; கொச்சைக் கயிறு . |
| கப்பம் | திறைப்பொருள் ; சிற்றரசர் பேரரசருக்குக் கொடுக்கும் திறை ; கற்பம் . |
| கப்பரை | பிச்சைக் கலம் ; மட்கலம் ; திருநீற்றுக் கலம் ; கிடாரம் . |
| கப்பல் | மரக்கலம் . |
| கப்பல்மிளகு | மிளகாய் . |
| கப்பல்வாழை | ரசதாளி , வாழைவகை . |
| கப்பலேற்றுதல் | தண்டனையாகத் தொலைவிலுள்ள நாட்டிற்கு அனுப்புதல் , நாட்டைவிட்டு வெளியேறுதல் ; அம்பலப்படுத்துதல் . |
| கப்பலோட்டி | மாலுமி ; கப்பலின் வேலையாள் . |
| கப்பலோட்டுதல் | மரக்கலஞ் செலுத்துதல் . |
| கப்பலோடுதல் | நாவாய் செல்லுதுல் ; கடல் கடந்து வாணிகம் செய்தல் . |
| கப்பற்கடலை | பட்டாணிக்கடலை . |
| கப்பற்கதலி | வாழைவகை . |
| கப்பற்காரன் | கப்பல் தலைவன் ; கப்பலில் வேலை செய்வோன் . |
| கப்பற்கால் | படகு . |
| கப்பற்படை | கடற்படை ; கப்பலுக்குரிய பொருள் . |
| கப்பற்பாட்டு | கப்பற்காரர் பாடும் ஓடப்பாடல் , ஏலேலோப் பாட்டு . |
| கப்பற்பாய் | கப்பலிற் காற்றை வாங்குவதற்காகச் சீலையால் அமைத்த பாய் . |
| கப்பறை | தாய விளையாட்டில் ஒரு கணக்கு . |
| கப்பாசு | தூய்மை செய்யாத பருத்தி . |
| கப்பி | தவசம் ; சிறுநொய் ; கயிறிழுக்குங் கருவி ; நெய்வோர் கருவியுள் ஒன்று ; பொய்யுரை ; சல்லி . |
| கப்பிக்காய் | பருவமல்லாக் காலத்தில் காய்க்கும் காய் . |
| கப்பித்தல் | கிளைவிடல் ; பெருத்தல் ; முகையரும்பல் . |
| கப்பிப்பிஞ்சு | இளம்பிஞ்சு ; பருவம் அலலாக் காலத்தில் தோன்றிய பிஞ்சு . |
| கப்பிப்பூ | உரிய காலத்தில் ஒருசேர இலுப்பைப்பூ விழுகை . |
| கந்திவாருணி | பேய்த் தும்மட்டி . |
| கந்தாலி | கச்சோலம் . |
| கந்தாவகன் | காண்க : கந்தவகன் . |
| கந்தி | மணப்பொருள் ; ஆரியாங்கனை என்னும் தவப்பெண் , கமுகு ; துவரை ; மரகதம் ; கந்தகம் , கந்தக பாடாணம் . |
| கந்திகை | சிறுதேக்கு . |
| கந்தித்தம் | சீலை |
| கந்தித்தல் | மணத்தல் . |
| கந்திரி | ஒரு முகமதியப் பண்டிகை , நாகூரில் துருக்கர் கொண்டாடும் சிறப்புப் பண்டிகை ; பிச்சைக்காரன் ; வண்டி . |
| கந்திருவர் | கந்தருவர் , யாழ்வல்லோர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 262 | 263 | 264 | 265 | 266 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தாலி முதல் - கப்பு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காலத்தில், வண்டி, கருவி, சீலை, ஒன்று, கலம், வாழைவகை, கருவியுள், பண்டிகை, கப்பல், மாடுகளை, தூண், தெய்வம், வைக்கோல், குதிரை, கயிறிழுக்குங், பாட்டு, என்னும்

