தமிழ் - தமிழ் அகரமுதலி - அத்தியாயம் முதல் - அதமாதமன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அத்திரி | கழுதை ; கோவேறு கழுதை ; வானம் ; மலை ; ஒட்டகம் ; குதிரை ; அம்பு ; உலைத்துருத்தி ; வீண் . |
| அத்திரு | அரசமரம் . |
| அத்திலை | செருப்படைக்கொடி . |
| அத்திவாரம் | அடிப்படை ; அடியுரம் . |
| அத்தினி | நால்வகைப் பெண்டிருள் ஒருத்தி ; பெண்யானை . |
| அத்து | இசைப்பு ; சிவப்பு ; செவ்வை ; துவர் ; அரைஞாண் ; அரைப்பட்டிகை ; தைப்பு ; அசைச்சொல் , ஒரு சாரியை . |
| அத்து | (வி) தை ; ஒட்டு ; ஒத்து . |
| அத்துகம் | ஆமணக்கு . |
| அத்துகமானி | அரசமரம் . |
| அத்துணை | அவ்வளவு . |
| அத்துதல் | அடைதல் ; இசைத்தல் ; பொருத்தல் ; ஒருநிலைப்படுத்துதல் . |
| அத்துமம் | அரத்தை . |
| அத்துமானி | காண்க : அத்துகமானி . |
| அத்துலாக்கி | கருஞ்சீரகம் . |
| அத்துவசுத்தி | தீக்கை நிகழ்ச்சியில் ஆசாரியன் அத்துவாக்களில் எஞ்சியிருந்த மூலவினைகளை எல்லாம் போக்குகை . |
| அத்துவம் | காண்க : அத்துவா . |
| அத்துவயம் | இரண்டன்மை . |
| அத்துவரியு | வேள்விப் புரோகிதன் ; செயலில் தலைமை வகிப்பவன் . |
| அத்துவலிங்கம் | தத்துவ வடிவமான இலிங்கம் . |
| அத்துவா | கதியடைவிக்கும் வழி ; வழி ; மந்திராத்துவா , பதாத்துவா , வர்ணாத்துவா , புவனாத்துவா , தத்துவாத்துவா , கலாத்துவா என்னும் ஆறு அத்துவாக்கள் ; இரண்டு ஒன்றாயிருப்பது ; ஒன்றிப்பு ; சிவப்பு . |
| அத்துவாக்காயம் | காண்க : அத்துலாக்கி . |
| அத்துவாந்தம் | காலை மாலை வெளிச்சம் . |
| அத்துவானம் | பாழ்ங்காடு ; பாழிடம் ; செவ்வானம் . |
| அத்துவிதம் | இருவிதம் ஆகாமை ; இரண்டற்றது ; பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்று எண்ணும் மதம் . |
| அத்துவைதம் | இருவிதம் ஆகாமை ; இரண்டற்றது ; பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்று எண்ணும் மதம் . |
| அத்துவைதி | அத்துவைத் மதத்தைச் சார்ந்தவன் ; ஏகாத்மவாதி . |
| அத்தூரம் | மரமஞ்சள் . |
| அத்தேயம் | களவு செய்ய நினையாமை ; திருடாமை . |
| அத்தை | தந்தையுடன் பிறந்தாள் ; மனைவியின் தாய் ; மாமி ; கணவனின் தாய் ; தலைவி ; குருவின் மனைவி ; தாய் ; கற்றாழை ; முன்னிலை அசைச்சொல் . |
| அத்தைப்பாட்டி | பாட்டனுடன் பிறந்தாள் . |
| அத்தொய்தன் | ஒப்பற்றவன் . |
| அத்தோ | வியப்பு இரக்கச்சொல் . |
| அத்தோதயம் | ஒரு சிறப்பு நாள் , அறுபது ஆண்டிற்கு ஒருமுறை தை மாதத்து ஞாயிற்றுக்கிழமையில் வரும் அமாவாசையில் சூரியன் மகரராசியிலும் , சந்திரன் திருவோண நாளிலும் ஒன்றாய்த் தோன்றும் நாள் . |
| அதக்குதல் | கசக்குதல் ; குதப்புதல் ; கெடுத்தல் ; அடக்குதல் . |
| அதகம் | மருந்து ; சுக்கு . |
| அதகன் | வலிமையுள்ளவன் . |
| அதங்கம் | ஈயம் . |
| அதட்டம் | அரவுயிர்ப்பு ; பாம்பின் நச்சுப்பல் , பாம்பின் கீழ்வாய்ப் பல் . |
| அதட்டு | வெருட்டும் உரத்தசொல் . |
| அதட்டுதல் | அதட்டல் ; உறுக்குதல் ; வெருட்டுதல் ; ஒலித்து உரப்புதல் ; கண்டித்தல் . |
| அதடம் | செங்குத்து . |
| அதப்பு | வணக்கம் ; மரியாதை ; செருக்கு . |
| அதம் | இறங்குதல் , தாழ்வு ; பள்ளம் ; பாதலம் ; கேடு ; அழிவு ; அத்திமரம் . |
| அதம்புதல் | காண்க : அதட்டுதல் . |
| அதமதானம் | கடைப்படுதானம் ; கைம்மாறு ; அச்சம் முதலியவற்றின் ஏதுவாகச் செய்யப்படுவது . |
| அதமம் | கடைத்தரம் ; கடைப்பட்டது ; இழிந்தது . |
| அதமருணிகன் | கடன்பட்டவன் . |
| அதமன் | தாழ்ந்தவன் ; கடையானவன் . |
| அதமாங்கம் | கால் . |
| அதமாதமம் | மிகவும் கடைப்பட்டது . |
| அதமாதமன் | மிகக் கீழானவன் . |
| அத்தியாயம் | நூலின் கூறுபாடு , நூற்பிரிவு ; இலக்கியச் செய்யுட்பகுதி ; வேதம் . |
| அத்தியாரோகணம் | ஏறுதல் . |
| அத்தியாரோபம் | மாறுபாட்டு உணர்ச்சி ; ஒன்றன் இயல்பை ஒன்றன்மேல் ஏற்றுதல் . |
| அத்தியாவசியகம் | இன்றியமையாதது . |
| அத்தியாவசியம் | இன்றியமையாதது . |
| அத்தியாவாகனிகம் | கணவன் வீட்டுக்குச்செல்லுங்கால் பெண் பெறும் சீர்ப்பொருள் . |
| அத்தியான்மிகம் | ஆன்மாவுக்குரியது ; சைவாகமங்களுள் ஒரு பகுதி ; ஆன்மா பிறரால் அடையும் துன்பம் . |
| அத்திரசத்திரம் | அம்பும் வாளும் ; கைவிடும் படையும் கைவிடாப் படையும் . |
| அத்திரம் | அம்பு ; கழுதை ; குதிரை ; மலை ; நிலையற்றது ; கைவிடும் படை ; கடுக்காய்ப்பூ . |
| அத்திராசம் | அச்சமின்மை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் முதல் - அதமாதமன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கழுதை, தாய், பிறந்தாள், எண்ணும், ஒன்று, மதம், நாள், கைவிடும், படையும், இன்றியமையாதது, கடைப்பட்டது, பாம்பின், அதட்டுதல், சீவான்மாவும், இரண்டற்றது, அத்து, சிவப்பு, அரசமரம், அம்பு, குதிரை, அசைச்சொல், அத்துகமானி, ஆகாமை, இருவிதம், அத்துவா, அத்துலாக்கி, பரமான்மாவும்

