தமிழ் - தமிழ் அகரமுதலி - அணைமரம் முதல் - அத்தியாபனம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அத்தனை | அவ்வளவு . |
| அத்தாட்சி | சான்று , சாட்சி ; அறிகுறி . |
| அத்தாணி | காண்க : அத்தாணிமண்டபம் . |
| அத்தாணிச்சேவகம் | அரசனுக்கோ தெய்வத்துக்கோ செய்யும் பணிவிடை . |
| அத்தாணிமண்டபம் | அரசன் கொலுமண்டபம் ; அரசவை மண்டபம் ; திருஓலக்க மண்டபம் . |
| அத்தாயம் | கடைசற் சக்கரத்தின் மிதிதடி ; அந்தரம் . |
| அத்தாழம் | காண்க : அகத்தாழம் . |
| அத்தாளம் | இரவு உணவு . |
| அத்தான் | அக்காள் கணவன் ; அத்தை மகன் ; அம்மான் மகன் ; மனைவியின் முன்னோன் ; உடன்பிறந்தாள் கணவன் ; கணவன் . |
| அத்தி | அத்திமரம் ; எலும்பு ; யானை ; கொலை ; கடல் ; திப்பிலி ; பாதி ; உள்ளது ; தமக்கை ; கண்ணில் ஓடும் ஒரு நாடி ; பெண்பால் விகுதி ; ஆசை ; இரவலன் . |
| அத்தி | செய் என் ஏவல் ; பாதிசெய் . |
| அத்திக்கனி | கரிசாலை ; வெருகமரம் . |
| அத்திகாயம் | காண்க : பஞ்சாஸ்திகாயம் . |
| அத்திகோலம் | அழிஞ்சில் . |
| அத்திசஞ்சயம் | தகனத்தின்பின் புண்ணிய தீர்த்தத்தில் போடும்படி எலும்பு திரட்டுகை . |
| அத்திசுரம் | எலும்பைப்பற்றின காய்ச்சல் . |
| அத்தித்திப்பிலி | யானைத்திப்பிலி . |
| அத்திநாத்தி | ' உண்டு இல்லை ' என்னும் சமணசமயக் கொள்கை . |
| அத்திபஞ்சரம் | எலும்புக்கூடு , முழு எலும்பு . |
| அத்திபாரம் | காண்க : அத்திவாரம் . |
| அத்திபேதி | ஒரு மருந்து , யானையின் பேதி மருந்து . |
| அத்திம்பேர் | அத்தை கணவன் ; தமக்கை கணவன் . |
| அத்திமண்டூகி | முத்துச்சிப்பி . |
| அத்தியக்கம் | காண்டல் அளவை . |
| அத்தியக்கன் | தலைவன் ; மேற்பார்வைக்காரன் ; அதிகாரி . |
| அத்தியசணம் | மீதூண் ; அளவுகடந்து உண்ணல் . |
| அத்தியட்சன் | காண்க : அத்தியக்கன் . |
| அத்தியந்தம் | ஓர் எண் ; மிகவும் ; அளவில் மிக்கது ; அறவே . |
| அத்தியந்தாபாவம் | முழுதுமின்மை . |
| அத்தியயம் | அத்தியாயம் ; அழிவு ; குற்றம் ; ஒரு பொருளின் மாறுபாட்டை ஐயத்துடன் நோக்குதல் ; மீறுதல் . |
| அத்தியயனம் | வேதம் ஓதல் , படித்தல் . |
| அத்தியவசாயம் | மனப்போக்கு ; பொருள் துணிவு ; உறுதி . |
| அத்தியற்புதம் | பெருவியப்பு . |
| அத்தியாகாரம் | மிகை ஊண் ; அவாய்நிலையால் வருவித்த சொல் ; தருக்கம் . |
| அத்தியாசம் | ஆரோபம் , ஏறுதல் ; ஒன்றன் குணத்தை மற்றொன்றன்மேல் ஏற்றுதல் ; மாறுபாட்டுணர்வு . |
| அத்தியாசனம் | ஈமச்சடங்கில் ஒரு பகுதி . |
| அத்தியாசை | மிகுந்த விருப்பம் . |
| அத்தியாத்துமம் | பரமாத்மா . |
| அத்தியாத்துமிகம் | தன்னால் வரும் துன்பம் ; கடவுட்கு அடுத்தது . |
| அத்தியாபகன் | வேதமுரைப்போன் ; உபாத்தியாயன் , ஆசிரியன் . |
| அத்தியாபனம் | ஓதுவித்தல் , படிப்பித்தல் . |
| அணைமரம் | கன்று இழந்த பசுவைக் கறத்தற்கு அணைக்கும் கணைமரம் . |
| அணையல் | காண்க : அணைதல் . |
| அணையாடை | பிள்ளைக்கு இடும் துணிப்படுக்கை ; ஏணைத் துகில் , தொட்டிலுக்கான துணி . |
| அணையார் | பகைவர் . |
| அணைவு | சேர்கை , தழுவுகை . |
| அணோக்கம் | மரம் . |
| அத்தக | அதற்கு ஏற்ப ; அத்தன்மையதாக ; அழகு பொருந்த . |
| அத்தகடகம் | கைவளை . |
| அத்தகம் | ஆமணக்கு ; கருஞ்சீரகம் ; கணக்கன் . |
| அத்தகிரி | ( சூரியன் மறையும் இடமான ) மேற்குமலை . |
| அத்தகோரம் | நெல்லி . |
| அத்தங்கார் | அத்தைமகள் . |
| அத்தப்பிரகரம் | அரைச்சாமம் , ஒரு நாளில் பதினாறில் ஒரு பங்கு கொண்ட நேரம் ; ஓர் யாமம் . |
| அத்தப்பிரகரன் | துணைக்கோள்களுள் ஒன்று , புதன்கோளைச் சார்ந்தது . |
| அத்தம் | கண்ணாடி ; பொன் ; பொருள் ; சொற்பொருள் ; பாதி ; வழி ; அருநெறி ; மேற்குமலை ; கை ; காடு ; அத்த நாள் ; சிவப்பு ; ஆண்டு . |
| அத்தமனம் | மறைவு ; சூரியன் மறையுங்காலம் . |
| அத்தமித்தல் | மறைதல் , படுதல் ; உட்புகுதல் ; அற்றுப்போதல் , இல்லாமற்போதல் . |
| அத்தர் | கடவுளர் ; முனிவர் ; காடுறை மாந்தர் ; பூக்களிலிருந்து எடுக்கும் நறுமணத் தைலம் . |
| அத்தவாளம் | போர்வை ; மேலாடை ; முன்றானை ; காடு . |
| அத்தன் | தகப்பன் ; தலைவன் ; கடவுள் ; மூத்தோன் ; குரு ; உயர்ந்தோன் ; செல்வன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணைமரம் முதல் - அத்தியாபனம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கணவன், எலும்பு, தலைவன், அத்தியக்கன், பொருள், சூரியன், காடு, மேற்குமலை, மருந்து, தமக்கை, அத்தை, அத்தாணிமண்டபம், மகன், அத்தி, பாதி, சொல், மண்டபம்

