தமிழ் - தமிழ் அகரமுதலி - அணார் முதல் - அணைப்புத்தூரம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
அணிவடம் | கழுத்தில் அணியும் மாலை . |
அணிவிரல் | மோதிர விரல் . |
அணிவில் | பேரேடு . |
அணிவிளக்குதல் | அலங்கரித்தல் , ஒப்பனை செய்தல் . |
அணு | உயிர் ; நுட்பம் ; சிறுமை ; நுண்ணியது ; நுண்பொருள் ; பொடி ; மிகச்சிறியது ; நுண்ணுடம்பு . |
அணுக்கச்சேவகம் | அரசர் முதலியோரை அடுத்திருந்து புரியும் தொண்டு . |
அணுக்கத்தொண்டன் | அடுத்திருந்து பணிசெய்யும் அடியான் ; அந்தரங்கப் பணியாளன் . |
அணுக்கம் | அணிமை , பக்கம் . |
அணுக்கன் | அண்மையில் இருப்பவன் ; நெருங்கிப்பழகுவோன் ; அந்தரங்கமானவன் ; தொண்டன் ; நண்பன் ; குடை . |
அணுக்கன் திருவாயில் | கருவறை வாயில் ; தன்னை அடைந்தாரைச் சிவன் அருகிருக்கச்செய்யும் வாயில் . |
அணுக்கு | காண்க : அணுக்கம் . |
அணுகம் | நுண்ணியது ; செஞ்சந்தனம் . |
அணுகலர் | பகைவர் . |
அணுகார் | பகைவர் . |
அணுகுதல் | கிட்டுதல் , நெருங்குதல் . |
அணுசதாசிவர் | சாதாக்கிய தத்துவத்தில் இன்பம் துய்க்கும் ஆன்மாக்கள் . |
அணுத்துவம் | அணுத்தண்மை ; சிறுமை . |
அணுமை | அணிமை , பக்கம் ; கருதல் அளவை . |
அணுரூபி | கடவுள் ; ஆன்மா . |
அணுவலி | ஆன்மசக்தி . |
அணை | படுக்கை ; மெத்தை ; கரை , வரம்பு ; அணைக்கட்டு ; பாலம் ; முட்டு ; தறி ; இருக்கை ; தலையணை . |
அணை | (வி) புணர் என்னும் ஏவல் ; சேர் . |
அணைக்கட்டு | செய்கரை ; நீரைத் தடுத்து அமைக்கும் கரை ; நீர்த்தேக்கம் . |
அணைக்கல் | அணையிலுள்ள குத்துக்கல் . |
அணைக்கை | அணைத்தல் . |
அணைகயிறு | பசுவைப் பால் கறக்கப் பின்னங்கால்களைக் கட்டும் கயிறு , கறவைகளின் கால்பிணை கயிறு . |
அணைகோலுதல் | நீர்ப்பெருக்கைத் தடுக்க அணைபோடுதல் ; முன்னெச்சரிக்கையாய் இருத்தல் . |
அணைசு | குழல் வாத்தியத்தின் முகப்பில் அமைப்பது . |
அணைத்தல் | சேர்த்தல் , தழுவுதல் , அவித்தல் . |
அணைதல் | சார்தல் ; சேர்தல் ; அடைதல் ; புணர்தல் ; பொருந்துதல் ; அவிதல் . |
அணைதறி | யாணை கட்டும் தூண் . |
அணைப்பு | தழுவுகை ; ஓர் உழவுச்சால் அளவு . |
அணைப்புத்தூரம் | ஓர் உழவுச்சால் தூரம் . |
அணார் | கழுத்து . |
அணாவுதல் | கிட்டுதல் , சேர்தல் . |
அணி | வரிசை ; ஒழுங்கு ; ஒப்பனை ; அழகு ; அணிகலன் ; முகம் ; படைவகுப்பு ; செய்யுளணி ; இனிமை ; அன்பு ; கூட்டம் ; அடுக்கு ; அண்மை ; ஓர் உவம உருபு . |
அணி | (வி) அணி என்னும் ஏவல் ; தரி , பூண் , அலங்கரி . |
அணிகம் | அணிகலம் ; அணிகலப் பெட்டி ; ஊர்தி ; சிவிகை . |
அணிகயிறு | குதிரையின் வாய்க்கயிறு . |
அணிகலச்செப்பு | ஆபரணப் பெட்டி ; ஒரு சமணநூற்பெயர் . |
அணிகலம் | நகை . |
அணிகலன் | நகை . |
அணிஞ்சில் | அழிஞ்சில் ; கொடிவேலி ; நொச்சி ; முள்ளி . |
அணித்து | அருகில் உள்ளது . |
அணிதல் | சூடல் ; சாத்துதல் ; புனைதல் ; அழகாதல் ; அலங்கரித்தல் ; உடுத்தல் ; பூணுதல் ; பொருந்துதல் ; படைவகுத்தல் ; சூழ்தல் . |
அணிந்தம் | கோபுரவாயிலின் முகப்புமேடை . |
அணிந்துரை | பாயிரம் , முகவுரை ; சிறப்புரை . |
அணிநிலைமாடம் | பல அடுக்கு மாடிவீடு . |
அணிநுணா | சீத்தா என்னும் மரம் . |
அணிமலை | திரண்ட மலை . |
அணிமா | சித்தி எட்டனுள் ஒன்றாகிய அணுப்போல் ஆகுதல் , பெரியதைச் சிறியதாக்குதல் . |
அணிமுகம் | அலங்காரமான வாயில் முகப்பு . |
அணிமை | அண்மை , பக்கம் ; நுட்பம் . |
அணியம் | படைவகுப்பு ; கப்பலின் முற்பக்கம் ; ஆயத்தம் . |
அணியல் | அணிதல் ; அழகுசெய்தல் ; மாலை ; வரிசை ; கழுத்தணி . |
அணியவர் | அழகினையுடையவர் ; அண்மையில் உள்ளவர் . |
அணியன் | நெருங்கினவன் . |
அணியியல் | அணியிலக்கணம் . |
அணியொட்டிக்கால் | தலைப்பக்கம் வேலைப்பாடமைந்த கோயில் கல்தூண் . |
அணில் | அணிற்பிள்ளை . |
அணில்வரிக்கொடுங்காய் | வெள்ளரிக்காய் . |
அணில்வரியன் | வெள்ளரி வகை ; வரிப்பலாப்பழம் ; ஒருவகைப் பட்டு . |
அணிலம் | காண்க : அணில் . |
அணிவகுத்தல் | படைவகுத்தல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணார் முதல் - அணைப்புத்தூரம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பக்கம், வாயில், அணிமை, என்னும், வரிசை, அணிகலன், உழவுச்சால், பொருந்துதல், கயிறு, சேர்தல், படைவகுப்பு, அடுக்கு, படைவகுத்தல், அணில், அணிதல், பெட்டி, அண்மை, அணிகலம், கட்டும், அணைத்தல், ஒப்பனை, அணுக்கன், நுட்பம், அணுக்கம், நுண்ணியது, அடுத்திருந்து, அண்மையில், அலங்கரித்தல், மாலை, ஏவல், அணைக்கட்டு, கிட்டுதல், காண்க, பகைவர், சிறுமை