தமிழ் - தமிழ் அகரமுதலி - ஏது முதல் - ஏமாந்த கொங்கை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஏமந்த ருது | பனிக்காலம் ; முன்பனிப் பருவம் . |
| ஏமந்தாசலம் | இமயமலை . |
| ஏமபத்திரம் | மலையாத்திமரம் . |
| ஏமபுட்பம் | அசோகமரம் ; செண்பகமரம் ; பொன்முல்லை . |
| ஏமபுட்பி | ஆவிரை . |
| ஏமம் | இன்பம் ; களிப்பு ; மயக்கம் ; காவல் ; இரவு ; பொன் ; திருநீறு ; இடுதிரை ; பாதுகாவல் ; வலிமை ; சேமநிதி . |
| ஏமமணல் | பொன்மணல் . |
| ஏமருதல் | திகைத்தல் ; களிப்புறுதல் ; காக்கப்படுதல் . |
| ஏமல் | முதிரை ; மனக்கலக்கம் . |
| ஏமவஞ்சம் | காண்க : ஏமதவஞ்சம் . |
| ஏமவதி | கடுக்காய் ; வசம்பு . |
| ஏமன் | யமன் . |
| ஏமாங்கம் | கருடன் ; சிங்கம் ; பொன்னிறம் ; மேருமலை . |
| ஏமாசலம் | மேருமலை . |
| ஏமாத்தல் | அரணாதல் , பாதுகாவலாதல் ; விரும்புதல் ; இன்புறுதல் ; செருக்கடைதல் ; கலக்கமடைதல் ; உறுதிசெய்தல் . |
| ஏமாந்த கொங்கை | விம்மிய முலை . |
| ஏது | யாது ; காரணம் ; ஏன் ; எங்கிருந்து ; எப்படி ; முதற்காரணம் ; துணைக்காரணம் ; ஏதுநிகழ்ச்சி ; ஏதம் ; நிமித்தம் ; ஓரணி ; செல்வம் ; எடுத்துக்காட்டு ; சம்பந்தம் . |
| ஏதுக்கருத்தன் | ஏவுதற் கருத்தா . |
| ஏதுக்கருத்தா | ஏவுதற் கருத்தா . |
| ஏதுகரப்படுதல் | பயனுடையதாதல் . |
| ஏதுகரம் | வழி , வகை , ஆயத்தம் : சாதனம் . |
| ஏதுங்கெட்டவன் | பயன்றறவன் . |
| ஏதுநிகழ்ச்சி | கன்மங்களாகிய காரணங்கள் தத்தம் பயனைக் கொடுத்தற்குத் தோற்றுகை . |
| ஏதுப்பண்ணுதல் | வகைசெய்தல் . |
| ஏதுப்போலி | ஏதுவுக்கு உரிய இலக்கணம் இன்றி ஏதுப்போலத் தோன்றுவது . |
| ஏதும் | யாதொன்றும் ,சிறிதும் , எதுவும் . |
| ஏதுவின் முடித்தல் | முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று , காரணங்காட்டி முடித்தல் , முன்னர் முடிவு விளங்கப் பெறாததைப் பின்னர்க்காரணத்தால் முடியவைத்தல் . |
| ஏதை | பேதை ; வறியன் . |
| ஏந்தல் | உயர்ச்சி ; மலை ; மேடு ; பெருமையிற் சிறந்தோன் ; தேக்கம் ; அரசன் ; ஆழமின்மை ; முதல் ; இளமை ; எளிதில் செய்து முடிக்கும் தன்மை , ஏந்துதல் , தாங்குதல் , கையேந்துதல் . |
| ஏந்தல் வண்ணம் | விளக்கத்தின் பொருட்டும் வற்புறுத்தற் பொருட்டும் ஒரு சொல்லே மிகுந்து வருஞ் சந்தம் . |
| ஏந்தி | தாங்குபவன் . |
| ஏந்திசை | செய்யுளோசை . |
| ஏத்திசைச் செப்பல் | வெண்சீர் வெண்டளையாற் பிறக்கும் ஓசை . |
| ஏந்திசைத் துள்ளல் | கலித்தளையால் பிறக்கும் ஓசை . |
| ஏந்திசைத் தூங்கல் | ஒன்றிய வஞ்சித்தளையால் பிறக்கும் ஓசை . |
| ஏந்திசையகவல் | நேரொன்றாசிரியத் தளையால் பிறக்கும் ஓசை . |
| ஏந்திரம் | எந்திரம் , மா அரைக்கும் திரிகை ; கரும்பாலை ; கண்கட்டு வித்தை ; மதிலுறுப்பு . |
| ஏந்திரவச்சு | வண்டியச்சு ; திரிகையச்சு . |
| ஏந்திலை | வேல் . |
| ஏந்திழை | அழகிய அணிகலன் . |
| ஏந்து | வசதி , சௌகரியம் . |
| ஏந்து | (வி) ஏந்துஎன் ஏவல் ; கையேந்து ; தாங்கு . |
| ஏந்துகுழந்தை | கைக்குழந்தை . |
| ஏந்துகொம்பன் | வளைந்த கொம்புடைய யானை ; நிமிர்ந்து முன்வளைந்த ; கொம்புள்ள மாடு . |
| ஏந்துகொம்பு | யானைக்கொம்பு ; தாங்கு கொம்பு . |
| ஏந்துதல் | கைந்நீட்டுதல் ; கையில் எடுத்தல் ; தாங்குதல் ; பூணுதல் ; மிகுதல் ; சுமத்தல் . |
| ஏந்தெழில் | மிகுந்த அழகு . |
| ஏப்பம் | தேக்கெறிவு , எதிரெடுத்தல் , ஏப்பமிடல் . |
| ஏப்பம்விடுதல் | தேக்கெறிவு , எதிரெடுத்தல் , ஏப்பமிடல் . |
| ஏப்பாடு | அம்புவிழும் எல்லை . |
| ஏப்பியன் | பேதை , அறிவில்லாதவன் . |
| ஏப்புழை | அம்பெய்வதற்காக மதிலில் அமைக்கப்படும் துளை . |
| ஏம் | இன்பம் , மகிழ்ச்சி , களிப்பு ; மயக்கம் ; பொன் . |
| ஏம்பல் | ஆரவாரம் ; மகிழ்ச்சி ; வருத்தம் . |
| ஏம்பலித்தல் | மிகுந்த அவாக் கொள்ளுதல் , பேராசை கொள்ளுதல் , அங்கலாய்த்தல் . |
| ஏம்புதல் | களித்தல் , மனம் கலங்குதல் , வருந்துதல் , மயக்கமடைதல் . |
| ஏமகரம் | பொன் . |
| ஏமகூடம் | எண்வகை மலைகளுள் ஒன்றாகிய பொன்மலை , மேருமலை . |
| ஏமங்கோலா | ஒரு மீன்வகை . |
| ஏமசிங்கி | மிருதாரசிங்கி என்னும் நஞ்சு . |
| ஏமத்தி | பொற்றொட்டிப் பாடாணம் . |
| ஏமத்தூரி | பொன்னூமத்தை . |
| ஏமதவஞ்சம் | போகபூமி ஆறனுள் ஒன்று . |
| ஏமந்தம் | பனி ; பனிக்காலம் ; ஏமந்த ருது . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 208 | 209 | 210 | 211 | 212 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏது முதல் - ஏமாந்த கொங்கை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பிறக்கும், பொன், மேருமலை, தாங்கு, ஏந்து, ஏந்திசைத், பொருட்டும், தாங்குதல், மிகுந்த, மகிழ்ச்சி, கொள்ளுதல், ஏப்பமிடல், எதிரெடுத்தல், தேக்கெறிவு, ஏந்துதல், பேதை, களிப்பு, மயக்கம், இன்பம், பனிக்காலம், ருது, ஏமதவஞ்சம், ஏதுநிகழ்ச்சி, ஒன்று, ஏமந்த, முடித்தல், கருத்தா, ஏவுதற், ஏந்தல்

