தமிழ் - தமிழ் அகரமுதலி - ஏமாந்துபோதல் முதல் - ஏல வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஏர்மங்கலம் | பொன்னேர் பூட்டிப் பாடும் மங்கலப்பாட்டு . |
| ஏர்வாரம் | ஏருக்காகக் கொடுக்கும் விளைச்சற்பங்கு . |
| ஏர | ஓர் உவமவுருபு . |
| ஏரகம் | திருவேரகம் என்னும் ஊர் , சுவாமிமலை ; மலைநாட்டிலுள்ள முருகன் தலம் . |
| ஏரங்கம் | ஒரு மீன்வகை . |
| ஏரடம் | இடி . |
| ஏரடித்தல் | ஏரால் உழுதல் . |
| ஏரண்டம் | ஆமணக்கஞ்செடி ; கண்டபேரண்டம் என்னும் செடி ; இருதலைப்புள் ; சித்திரம் . |
| ஏரண்டி | திப்பிலி . |
| ஏரணம் | தருக்கநூல் . |
| ஏரம்பன் | விநாயகன் , ஆனைமுகக் கடவுள் . |
| ஏரல் | கிளிஞ்சில் ; நத்தை . |
| ஏரா | நீராழம் ; மயக்கம் தாராத கள் ; கப்பலின் அடிப்பொருத்து மரம் . |
| ஏராண்மை | உழவு . |
| ஏராப்பலகை | கப்பலின் அடிமரம் . |
| ஏராமரம் | கப்பலின் அடிமரம் . |
| ஏராளம் | மிகுதி . |
| ஏராளர் | உழவர் |
| ஏரி | நீர்நிலை , பெரிய குளம் ; கொழுத்துள்ள பிடர் ; எருத்துத் திமில் . |
| ஏரிசா | கடற்கொந்தளிப்பு . |
| ஏரிப்பாய்ச்சல் | ஏரிநீர்ப் பாசனம் , ஏரிநீர் பாய்ந்து விளையும் நிலப்பகுதி . |
| ஏரிப்பாய்ச்சி | மீன்பிடி வரி . |
| ஏரிவாரியத்தார் | ஏரியை மேற்பார்வையிடும் சபையார் . |
| ஏருந்து | எந்திரக் கலப்பை . |
| ஏருழவர் | ஏர்கொண்டு உழுபவர் , உழவர் . |
| ஏரோட்டுதல் | உழுதல் . |
| ஏரோர் | உழுவோர் , உழுவர் . |
| ஏல் | பொருத்தம் ; உணர்ச்சி , மனவெழுச்சி ; கிளிஞ்சில் ; ஒப்புக்கொளல் ; ஒரு விகுதி . |
| ஏல்வை | காலம் ; நாள் ; பொழுது ; நீர்நிலை ; வரிவகை . |
| ஏல | முன்னமே ; மிக . |
| ஏமாந்துபோதல் | ஏமாறுதல் , மோசம்போதல் ; இழப்படைதல் ; எச்சரிக்கையின்றியிருத்தல் . |
| ஏமாப்பு | பாதுகாப்பு ; அரணாதல் , வலியாகுதல் ; செருக்கு ; கருத்து . |
| ஏமார்த்தல் | ஏமஞ்செய்தல் , காப்புச் செய்தல் , பலப்படுத்தல் . |
| ஏமார்தல் | மனங்கலங்குதல் , ஏங்கல் . |
| ஏமாளி | பேதை , அறிவிலி . |
| ஏமாற்றம் | எத்து , வஞ்சகம் , வஞ்சகத்துள்ளாதல் ; மனக்கலக்கம் . |
| ஏமாற்றுதல் | வஞ்சித்தல் ; ஏமஞ்செய்தல் . |
| ஏமாறுதல் | தடுமாறல் , அலமருதல் ; மோசம் போதல் . |
| ஏமிலாந்தி | அலமந்து பார்ப்போன் , திகைத்து நிற்பவன் , மயக்கமுடையவன் , மதிகேடன் . |
| ஏமிலாந்துதல் | திகைத்து நிற்றல் , மயங்கி நிற்றல் , மனந்தடுமாறுதல் , நினைவு சிதறுதல் . |
| ஏமிலாப்பு | அலமலப்பு , மனத்தடுமாற்றம் . |
| ஏமின்கோலா | பறவைக்கோலா என்னும் மீன் . |
| ஏமுறுதல் | மகிழ்வுறுதல் , களிப்புறல் ; தன்மை திரிதல் ; வருந்துதல் , மனங்கலங்குதல் ; மயக்க முறுதல் ; பொருத்தமுறுதல் . |
| ஏய்த்தல் | ஒத்தல் , உவமித்தல் ; இசையப்பண்ணுதல் , பொருந்தச் சொல்லுதல் ; வஞ்சித்தல் . |
| ஏய்தல் | ஒத்தல் , பொருந்தல் , தகுதல் ; எதிர்ப்படுதல் , சந்தித்தல் |
| ஏய்ப்ப | ஓர் உவமவுருபு . |
| ஏய்ப்பிலேவட்டன் | மதிகேடன் . |
| ஏய்ப்பு | வஞ்சகம் . |
| ஏய்வு | இயைபு ; உவமை . |
| ஏய | ஓர் உவமவுருபு . |
| ஏயம் | தள்ளத்தக்கது . |
| ஏயான் | இசையான் , ஒவ்வான் ; தொழில் செய்யத் தகாதவன் , பொருத்தமற்றவன் . |
| ஏயி | மகள் . |
| ஏயில் | இசை , ஒருவகைப் பாட்டு . |
| ஏயே | எள்ளி நகையாடல் குறிப்பு , இகழ்ச்சிக் குறிப்பு . |
| ஏர் | உழுபடை , கலப்பை ; உழவுமாடு ; உழவுத்தொழில் ; எழுச்சி ; தோற்றப்பொலிவு ; அழகு ; நன்மை ; ஒப்பு ; ஓர் உவமவுருபு . |
| ஏர்க்களம் | நெற்களம் , கதிரடிக்குமிடம் . |
| ஏர்க்களவுருவகம் | போர்க்களத்தை ஏர்க்களமாக உருவகப்படுத்தும் புறத்துறை . |
| ஏர்க்கால் | எருது பூட்டிய நுகத்தில் கொளுவும் கலப்பையின் உறுப்பு ; வண்டியின் ஓர் உறுப்பு . |
| ஏர்கட்டுதல் | உழவுமாட்டைப் பூட்டி உழத்தொடங்குதல் . |
| ஏர்ச்சீர் | உழவுத் தொழிலுக்குரிய கருவிகள் ; வேளாண்மையால் வரும் செல்வச் சிறப்பு . |
| ஏர்த்தாயம் | பருவகாலத்து உழவு |
| ஏர்நாழி | கலப்பையின் ஓர் உறுப்பு |
| ஏர்ப்ப | ஓர் உவமவுருபு . |
| ஏர்ப்பண் | பூட்டாங்கயிறு ; ஏர்ச்சீர் . |
| ஏர்ப்பு | ஈர்ப்பு . |
| ஏர்ப்பூட்டு | முதலுழவு . |
| ஏர்பு | எழுச்சி ; வனப்பு ; அழகு ; கோள்நிலை . |
| ஏர்பூட்டுதல் | பொன்னேர் பூட்டுதல் ; ஏரில் மாட்டைக் கட்டுதல் |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 209 | 210 | 211 | 212 | 213 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏமாந்துபோதல் முதல் - ஏல வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உவமவுருபு, கப்பலின், உறுப்பு, என்னும், ஒத்தல், நிற்றல், மதிகேடன், திகைத்து, குறிப்பு, கலப்பையின், ஏர்ச்சீர், வஞ்சித்தல், அழகு, எழுச்சி, ஏமஞ்செய்தல், அடிமரம், உழவு, கிளிஞ்சில், உழுதல், உழவர், நீர்நிலை, மனங்கலங்குதல், பொன்னேர், ஏமாறுதல், கலப்பை, வஞ்சகம்

