தமிழ் - தமிழ் அகரமுதலி - ஏட்டுப்பொறி முதல் - ஏதீடு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஏதீடு | காரணமிட்டுரைத்தல் ; தோழி அறத்தொடு நிற்கையில் தலைவி தலைவனை மணத்தற்கு அவன் செய்த உதவிகளைக் காரணமாக இட்டுரைக்கை . |
| ஏடாகூடம் | தாறுமாறு , ஒழுங்கின்மை ; ஏற்றத்தாழ்ச்சியான நடை . |
| ஏடாகோடம் | தாறுமாறு , ஒழுங்கின்மை ; ஏற்றத்தாழ்ச்சியான நடை . |
| ஏடாசிரியன் | ஆசிரியன் இன்றி ஏட்டின் உதவி கொண்டே கற்றோன் . |
| ஏடி | தோழி முதலிய பெண்பாலரை விளிக்கும் சொல் ; இழிந்தாளை விளிக்கும் சொல் . |
| ஏடு | இதழ் ; பூவிதழ் ; மலர் ; பனையேடு ; ஏட்டுப்புத்தகம் ; புத்தகவிதழ் ; கண்ணிமை ; வாழையிலைத் துண்டு ; உடல் ; பாலாடை ; பாலேடு ; மேன்மை ; குற்றம் ; உலகம் ; பாதத்தின் அடிப்பக்கம் . |
| ஏடுகம் | கல்லறை . |
| ஏடுககோளாளன் | கணக்கன் . |
| ஏடுசேர்த்தல் | பனையோலைகளை ஏடுகளாகச் சீவிப் புத்தகமாக்குதல் . |
| ஏடுதூக்குதல் | ஆசிரியரிடம் ஏட்டையெடுத்துப் படித்தல் . |
| ஏடுபடுதல் | பாலில் ஆடை உண்டாதல் ; பாசி படிதல் . |
| ஏடுவாருதல் | ஓலை வாருதல் , எழுதும் பொருட்டுப் பனையோலைகளைச் சீவிச் செப்பஞ்செய்தல் . |
| ஏடை | ஆசை , விருப்பம் . |
| ஏண் | எல்லை ; வலிமை ; திண்ணம் ; உயர்ச்சி ; செருக்குப் பேச்சு ; பெருமைப் பேச்சு ; வளைவு . |
| ஏண்கோண் | ஒழுங்கின்மை , நேரின்மை . |
| ஏண்டாப்பு | இறுமாப்பு . |
| ஏணகம் | கருமை நிறம் கொண்ட ஒருவகை மான் ; ஒருவகை மருந்துச் சரக்கு . |
| ஏணம் | மான் ; மான்தோல் ; வலிமை ; நிலைபேறு . |
| ஏணல் | வளைவு ; கோணல் . |
| ஏணல்கோணல் | ஒழுங்கின்மை . |
| ஏணி | எண் ; அடுக்கு ; ஏறுதற்குரிய கருவி ; எல்லை ; நாடு ; மான் ; மான்கன்று . |
| ஏணிக்காணம் | மரத்தீர்வை . |
| ஏணிச்சீகு | ஒரு புல்வகை . |
| ஏணிப்படிகால் | மேகலை என்னும் அணி . |
| ஏணிப்படுகால் | மேகலை என்னும் அணி . |
| ஏணிப்பந்தம் | தோளில் சுமக்கும் ஒருவகைத் தீவட்டி . |
| ஏணிப்பழு | ஏணிப்படி , கண்ணேணியில் பொருத்தப்பட்டுள்ள குறுக்குக் கழி . |
| ஏணிமயக்கம் | கோட்டைக்கு உள்ளும் புறமும் உள்ளார் ஏணிமிசை நின்று போர் செய்தலைக் கூறும் புறத்துறை . |
| ஏணிமிசைமயக்கம் | கோட்டைக்கு உள்ளும் புறமும் உள்ளார் ஏணிமிசை நின்று போர் செய்தலைக் கூறும் புறத்துறை . |
| ஏணுக்குக்கோண் | எதிரிடையான பேச்சு . |
| ஏணை | புடைவைத் தொட்டில் ; நிலை ; ஆடு . |
| ஏணைக்குக்கோணை | காண்க : ஏணுக்குக்கோண் . |
| ஏத்தம்வாழை | நேந்திரம் வாழை . |
| ஏத்தாளி | புகழ்வோன் . |
| ஏத்தியலாளன் | புகழ்வோன் . |
| ஏத்திரி | சாதிபத்திரி . |
| ஏத்திவாபாசம் | ஏதுப்போலி , எடுத்துக்கொண்ட நோக்கத்திற்கு இயைபில்லாத ஏதுக்களைக் கூறுதல் . |
| ஏத்துதல் | துதித்தல் , புகழ்தல் , உயர்த்திக் கூறுதல் ; வாழ்த்துதல் . |
| ஏதடை | எதிரிடை , போட்டி , பகைமை . |
| ஏதண்டை | பலகைத் தூக்கு ; கட்டடங்களுக்குக் கட்டும் சாரம் ; நீர்த்துறையில் கட்டும் பரண் . |
| ஏதப்பாடு | குற்றம் ; குற்றம் உண்டாகுகை . |
| ஏதம் | துன்பம் , குற்றம் , கேடு . |
| ஏதர் | தீயோர் , கெட்டவர்கள் , குற்றமுடையோர் . |
| ஏதலன் | பகைவன் . |
| ஏதிலன் | பகைவன் . |
| ஏதலிடுதல் | பொறாமையைப் பேசுதல் . |
| ஏதன் | மூலகாரணன் , ஆதிகாரணன் , முதல்வன் , கடவுள் . |
| ஏதனம் | மூச்சுவிடுதல் . |
| ஏதி | ஆயுதப்பொது ; வாள் ; துண்டம் . |
| ஏதிலர் | அயலார் ; பகைவர் ; பரத்தையர் . |
| ஏதிலார் | அயலார் ; பகைவர் ; பரத்தையர் . |
| ஏதிலாள் | பிற மாது ; மாற்றாள் ; சக்களத்தி . |
| ஏதிலாளன் | அயலான் ; பிறன் . |
| ஏதின்மை | அயலாந்தன்மை , அன்னியம் ; பகைமை . |
| ஏட்டுப்பொறி | ஓலைப் பத்திரத்தில் பதித்த முத்திரை . |
| ஏட்டை | ஆசை , விருப்பம் ; வறுமை ; இளைப்பு , தளர்வு ; ஒருசார் விலங்கேற்றின் பெயர் . |
| ஏடகணி | ஓலையீர்க்கு . |
| ஏடகம் | பூவிதழ் ; பூ ; தென்னைமரம் ; பனைமரம் ; பலகை ; ஆட்டுக்கடா ; ஒருவகைத் துகில் ; வையையாற்றில் ஏடு கரையேறிய ஒரு சிவத்தலம் ; திருவேடகம் . |
| ஏடணாத்திரயம் | மூவகையான விருப்பம் ; உலகம் , பொன் , புதல்வன் என்னும் மூன்றன் மேல் கொள்ளும் பற்று . |
| ஏடணை | ஆசை , விருப்பம் ; பற்று . |
| ஏடமூகன் | ஆற்றலற்றவன் , கோழை . |
| ஏடல் | கருத்து , எண்ணம் ; மனம் ; விருப்பம் . |
| ஏடலகம் | அதிமதுரம் ; குன்றி . |
| ஏடன் | தோழன் ; தொழும்பன் ; செவிடன் . |
| ஏடா | தோழன் முன்னிலை ; தாழ்ந்தவரை விளிக்கும் சொல் . |
| ஏடாகுடம் | தாறுமாறு , ஒழுங்கின்மை ; ஏற்றத்தாழ்ச்சியான நடை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 207 | 208 | 209 | 210 | 211 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏட்டுப்பொறி முதல் - ஏதீடு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், விருப்பம், ஒழுங்கின்மை, சொல், குற்றம், என்னும், மான், பேச்சு, தாறுமாறு, விளிக்கும், ஏற்றத்தாழ்ச்சியான, புகழ்வோன், தோழன், ஏணுக்குக்கோண், புறத்துறை, செய்தலைக், கூறும், கூறுதல், பரத்தையர், போர், அயலார், பகைவன், கட்டும், பகைமை, பற்று, பகைவர், கோட்டைக்கு, வலிமை, வளைவு, எல்லை, உலகம், தோழி, பூவிதழ், ஒருவகை, மேகலை, உள்ளார், ஏணிமிசை, புறமும், உள்ளும், ஒருவகைத், நின்று

