முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » ஏகாங்கி முதல் - ஏட்டுப்படிப்பு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - ஏகாங்கி முதல் - ஏட்டுப்படிப்பு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஏகாயம் | ஏகாசம் , உத்தரியம் , மேலாடை ; மேற்போர்வை . |
| ஏகாயனர் | முத்தியின்பொருட்டுத் திருமாலை மட்டுமே வணங்குபவர் , மாத்துவர் . |
| ஏகார்க்களம் | ஏர் பூட்ட நாள் பார்க்கை ; தீய நாள் அறிவதற்குறிய சக்கரம் . |
| ஏகார்ணவம் | ஊழிப் பெருவெள்ளம் . |
| ஏகாரவல்லி | பலா ; பாகல் ; பழுபாகல் . |
| ஏகாலத்தி | வழிபாட்டில் இறைவனுக்கு முன் சுற்றும் ஒற்றைச் சுடர் ; விளக்கு . |
| ஏகாலத்தியம் | வழிபாட்டில் இறைவனுக்கு முன் சுற்றும் ஒற்றைச் சுடர் ; விளக்கு . |
| ஏகாலி | வண்ணான் ; சவர்க்காரம் . |
| ஏகாவல்லி | காண்க : ஏகவல்லி . |
| ஏகாவலி | காண்க : ஏகவல்லி . |
| ஏகான்மவாதம் | பிரமம் ஒன்றைத் தவிர வேறொன்றும் இல்லையென்னும் மதம் . |
| ஏகி | கணவனை இழந்து தனித்திருப்பவள் , கைம்பெண் . |
| ஏகீபவித்தல் | ஒன்றித்தல் , ஒன்றாகப் பொருந்துதல் சேருதல் ; ஒரே தன்மையாதல் . |
| ஏகீபாவம் | ஒருதன்மை ; ஒருமைப் பாவனை ; ஒன்றுபடுகை கூடியிருத்தல் . |
| ஏகீயன் | ஒருவன் ; தோழன் . |
| ஏகுதல் | செல்லுதல் ; போகுதல் ; நடத்தல் ; கழலுதல் . |
| ஏகை | உமை ; வயிரக்குற்றங்களுள் ஒன்று . |
| ஏகோதிட்டம் | இறத்தவர்க்குப் பதினோராம் நாளில் செய்யும் சிராத்தச் சடங்கு . |
| ஏகோபித்தல் | ஒன்றுபடுதல் , ஒன்றாதல் , ஒருமனப்படுதல் ; சேர்தல் . |
| ஏங்கல் | அழுதல் ; மயிற்குரல் ; யாழ்நரம்பின் ஓசை ; ஆரவாரிக்கை ; குழந்தைகளுக்கு வரும் காசநோய் . |
| ஏங்கிப்போதல் | ஏக்கம் பிடித்தல் . |
| ஏங்குதல் | ஒலித்தல் ; அழுதல் ; இரங்குதல் ; திகைத்தல் ; மனம் வாடுதல் ; அஞ்சுதல் ; கவலைப்படுதல் : இளைத்தல் . |
| ஏச்சு | வைவு ; இகழ்ச்சி , பழிப்பு . |
| ஏச்சுரை | பழிப்புரை . |
| ஏச்சோறு | தண்டச்சோறு . |
| ஏசம் | வெண்கலம் |
| ஏசல் | இகழ்தல் ; வைதல் ; பழிமொழி ; பழிச்சொல் ; ஒருவரையொருவர் பரிகாசம் செய்து கொள்ளும் பாட்டுவகை . |
| ஏசறவு | விருப்பம் ; அன்பு ; புகழ்மொழி . |
| ஏசறுதல் | வருந்துதல் ; ஆசைகொள்ளுதல் ; பழித்தல் . |
| ஏசாதவர் | இகழ்ச்சி செய்யாதவர் ; குற்றம் இல்லாதவர் ; தேவர் . |
| ஏசிடாவம் | அதிமதுரம் . |
| ஏசு | இகழ்ச்சி ; குற்றம் ; இயேசு . |
| ஏசுதல் | இகழ்தல் , வைதல் , செலுத்துதல் . |
| ஏட்சி | உதயம் ; திடம் . |
| ஏட்டிக்குப்போட்டி | எதிருக்கெதிர் ; ஆமென்பதற்கு அன்றெனல் ; விதண்டாவாதம் . |
| ஏட்டுச்சுரைக்காய் | உலகவனுபவம் அற்ற கல்வி அறிவு ; வெறும் நூலறிவு மட்டும் உள்ளவர் . |
| ஏட்டுப்படிப்பு | உலகவனுபவம் இல்லாத கல்வி . |
| ஏகாங்கி | தனிமையாயிருப்பவன் ; குடும்பமில்லாதவன் ; பிரமசாரி ; திருமால் அடியாருள் ஒரு வகையார் ; சன்னியாசி . |
| ஏகாசம் | மேலாடை ; போர்வை . |
| ஏகாட்சரி | பிரணவம் ; சத்தி ; ஒருவகைச்செய்யுள் ; ஓரெழுத்தாலாய மந்திரம் . |
| ஏகாட்சி | ஒற்றைக் கண்ணன் ; ஒற்றைக் கண்ணி ; காகம் ; சுக்கிரன் . |
| ஏகாடம் | ஏளனம் , பரிகாசம் . |
| ஏகாண்டம் | வானம் ; முழுக் கூறு . |
| ஏகாதசம் | பதினொன்று ; ஒருவர் பிறந்த இலக்கினத்திற்குப் பதினோராம் இடம் . |
| ஏகாதசர் | பதினோர் உருத்திரர் ; பதினோராம் இடத்தில் உள்ள கோள் . |
| ஏகாதசருத்திரர் | உருத்திரர் பதினொருவர் : மாதேவன் , சிவன் , உருத்திரன் , சங்கரன் , நீலலோகிதன் , ஈசானன் , விசயன் , வீமதேவன் , பவோற்பவன் , கபாலி , சௌமியன் . |
| ஏகாதசி | உவாநாளுக்குப்பின் பதினோராம் நாள் . |
| ஏகாதசிவிரதம் | வைணவ சமய நோன்புகளுள் ஒன்று ; ஏகாதசி நாளில் இருக்கும் பட்டினி நோன்பு . |
| ஏகாதிபத்தியம் | தனியரசாட்சி . |
| ஏகாதிபதி | தனியாட்சி புரிவோன் , பேரரசன் . |
| ஏகாந்தசேவை | தனிச் சேவை ; சில திருவிழாக்களிலே இரவில் தனியாக நிகழும் கடவுள் வழிபாடு . |
| ஏகாந்தநித்திரை | இரவில் கவலையில்லாத தூக்கம் , அமைதியான உறக்கம் . |
| ஏகாந்தம் | தனிமை ; தனியிடம் ; ஒருவரும் இல்லாத இடம் ; கமுக்கம் , இரகசியம் ; உறுதி ; நாடிய ஒரே பொருள் . |
| ஏகாந்தவாதி | ஆருகதரல்லாத சமயி . |
| ஏகாந்தவாழ்வு | தனி வாழ்க்கை ; துறவியின் வாழ்க்கை . |
| ஏகாந்தன் | அந்தரங்க பக்தன் ; அணுக்கத்தொண்டன் . |
| ஏகாம்பரன் | ஏகம்பன் , சிவன் ; காஞ்சிபுரத்தில் திருக்கோயில் கொண்டுள்ள சிவபெருமான் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 206 | 207 | 208 | 209 | 210 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏகாங்கி முதல் - ஏட்டுப்படிப்பு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பதினோராம், நாள், இகழ்ச்சி, உலகவனுபவம், கல்வி, குற்றம், பரிகாசம், வைதல், இல்லாத, ஒற்றைக், இரவில், வாழ்க்கை, ஏகாதசி, சிவன், இடம், உருத்திரர், இகழ்தல், அழுதல், முன், சுற்றும், இறைவனுக்கு, வழிபாட்டில், மேலாடை, ஒற்றைச், சுடர், ஒன்று, நாளில், ஏகவல்லி, காண்க, விளக்கு, ஏகாசம்

