தமிழ் - தமிழ் அகரமுதலி - ஏலக்காய் முதல் - ஏழமை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஏவல் | ஏவுகை , தூண்டுகை ; கட்டளை ; ஏவல் வினைமுற்று ; ஓதுகை ; பணிவிடை ; பணியாள் ; பிசாசை ஏவிவிடுகை ; வறுமை . |
| ஏவல்கேட்டல் | ஏவிய பணிசெய்தல் . |
| ஏவல்கூவல் பணி | ஏவிய சிறு பணிகள் , குற்றேவல் . |
| ஏவல்கொள்ளுதல் | வேலைவாங்குதல் , தொண்டு செய்வித்தல் . |
| ஏவல்விடை | கேட்கும் வினாவுக்கு எதிராக மறுக்கும் வகையில் எதிர் ஏவலாய்க் கூறும் விடை ; 'சாத்தா இது செய்வாயா?' என்ற விடத்து 'நீ செய்' என்பது போன்று தரப்படும் விடை . |
| ஏவல்வினா | ஏவும் நோக்கத்தோடு கேட்கும் வினா . |
| ஏவல்வினை | முன்னின்றாரை ஏவும் வினை ; சூனியத் தொழில் . |
| ஏவலன் | பணிவிடை செய்வோன் . |
| ஏவலாள் | பணிவிடை செய்வோன் . |
| ஏவற்காரப்பேய் | ஏவற்பேய் ; காளிதேவிக்கு ஏவல் செய்யும் பேய் . |
| ஏவற்காரன் | காண்க : ஏவலன் . |
| ஏவற்சிலதி | குற்றேவல் செய்யும் பெண் . |
| ஏவற்பணி | கட்டளையிடப்பட்ட தொழில் . |
| ஏவற்பேய் | தூண்டிவிடப்பட்ட பேய் ; பெரிய பேய்க்கு ஊழியம் செய்யும் குட்டிப்பிசாசு . |
| ஏவறை | ஏப்புழை , மறைந்து அம்பு எய்தற்குரிய மதில் உறுப்பு . |
| ஏவன் | எவன் ; யாவன் . |
| ஏவாகனம் | அசமதாகம் ; ஓமவித்து . |
| ஏவாங்கம் | அசமதாகம் ; ஓமவித்து . |
| ஏவாங்கனம் | அசமதாகம் ; ஓமவித்து . |
| ஏவிளம்பி | அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தோராம் ஆண்டு . |
| ஏவு | ஏ , அம்பு ; வருத்தம் . |
| ஏவு | (வி) கட்டளையிடு ; தூண்டு ; எய் , செலுத்து ; அனுப்பு . |
| ஏவுண்ணுதல் | அம்பு பாயப்பெறுதல் . |
| ஏவுதல் | கட்டளையிடுதல் ; தூண்டிவிடுதல் ; செலுத்துதல் ; சொல்லுதல் ; அனுப்புதல் . |
| ஏவுதற்கருத்தா | வேறொருவரை ஏவி ஒன்றைச் செய்விக்கிறவன் , கட்டளையிடும் தலைவன் ; செய்விக்கும் வினைமுதல் . |
| ஏழ்சுரம் | சட்ஜம் , ரிடபம் , காந்தாரம் , மத்திமம் , பஞ்சமம் , தைவதம் , நிஷாதம் என்பன , |
| ஏழ்நரம்பு | குரல் , துத்தம் , கைக்கிளை , உழை , இளி , விளரி , தாரம் என்னும் ஏழு நரம்புகள் . |
| ஏழ்பரி | சூரியன் தேரில் பூட்டப்படும் ஏழு குதிரைகள் ; காயத்திரி , திருட்டுபு , செகதி , அனுட்டுபு , பந்தி , பிரகதி , முட்டிணுகு . |
| ஏழ்பரியோன் | சூரியன் . |
| ஏழ்பருவம் | காண்க : ஏழுவகைப் பெண்பருவம் . |
| ஏழ்புழை | வேய்ங்குழல்வகை . |
| ஏழ்மை | எழு ; வறுமை . |
| ஏழகத்தார் | படைவகுப்பாருள் ஒருவகையார் . |
| ஏழகம் | ஆடு ; செம்மறிக்கடா . |
| ஏழமை | காண்க : ஏழைமை . |
| ஏலக்காய் | ஒரு மணமுடைய காய்வகை . |
| ஏலக்கோலம் | அணியம் , ஆயத்தம் . |
| ஏலப்பாட்டு | ஏலே ஏலேலோ' எனப் படகு வலிப்போர் பாடும் பாட்டு . |
| ஏலபிலி | கடுகு . |
| ஏலம் | செடிவகை ; மணப்பொருள் ; மயிர்ச்சாந்து ; சடாமாஞ்சில் ; சங்கஞ்செடி ; முதிரை ; மணம் ; போட்டியிற் பலர்முன் ஏற்றும் விலை . |
| ஏலரிசி | ஏலக்கொட்டை , ஏலக்காயின் உள்ளீடு . |
| ஏலவரிசி | ஏலக்கொட்டை , ஏலக்காயின் உள்ளீடு . |
| ஏலவாலுகை | பேரேலம் . |
| ஏலவே | ஏற்கெனவே |
| ஏலா | தோழன் தோழியரை முன்னிலைப்படுத்தும் சொல் . |
| ஏலாதான் | இயலாதவன் ; பகைவன் . |
| ஏலாதி | ஏலம் , இலவங்கப்பட்டை முதலிய மருந்துச்சரக்கு ; பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று . |
| ஏலாதிகடுகம் | ஒரு மருந்துவகை . |
| ஏலாதி சூரணம் | ஏலம் முதலியன கலந்து செய்த மருந்துப்பொடி . |
| ஏலாதி மாத்திரை | மருந்து மாத்திரைவகை . |
| ஏலாப்பு | துன்பம் ; வருத்தம் . |
| ஏலாபத்திரம் | தக்கோலம் . |
| ஏலாபர்ணி | ஒருவகைப் பூண்டு ; பறங்கிச்சக்கை . |
| ஏலாமை | பொருந்தாமை ; இயலாமை . |
| ஏலி | கள் . |
| ஏலு | சங்கஞ்செடி . |
| ஏலுதல் | இயலுதல் ; பொருந்துதல் ; தகுதியாதல் ; கூடுதல் . |
| ஏலேலம் | ஏலப்பாட்டில் வருமொரு சொல் , படகு முதலியன தள்ளுவோர் பாடும் பாட்டில் வரும் ஒரு சொல் . |
| ஏலேலோ | ஏலப்பாட்டில் வருமொரு சொல் , படகு முதலியன தள்ளுவோர் பாடும் பாட்டில் வரும் ஒரு சொல் . |
| ஏலை | ஏலம் . |
| ஏவங்கம் | இனவழிக் கணக்கு . |
| ஏவங்கேட்டல் | ஒருவருக்காக ஏவி விடப்பட்டுப் போய் அதட்டல் ; இடைபுகுந்து விசாரணை செய்தல் . |
| ஏவதும் | எதுவும் ; ஒவ்வொன்றும் ; எல்லாமும் . |
| ஏவம் | இவ்விதம் ; ஏவல் ; ஒருவருக்காக ஏவிவிடப்பட்டு வருதல் ; குற்றம் . |
| ஏவருகன் | அதிமதுரம் . |
| ஏவரும் | யாவரும் , எல்லாரும் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 210 | 211 | 212 | 213 | 214 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏலக்காய் முதல் - ஏழமை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சொல், ஏவல், ஏலம், அசமதாகம், காண்க, அம்பு, பாடும், முதலியன, ஏலாதி, செய்யும், படகு, ஓமவித்து, பணிவிடை, வறுமை, உள்ளீடு, ஏலக்காயின், ஏலக்கொட்டை, ஏலப்பாட்டில், வருமொரு, ஒருவருக்காக, வரும், பாட்டில், தள்ளுவோர், சங்கஞ்செடி, ஏவிய, தொழில், ஏவும், ஏவலன், பேய், செய்வோன், விடை, வருத்தம், குற்றேவல், கேட்கும், ஏலேலோ, சூரியன், ஏவற்பேய்

