தமிழ் - தமிழ் அகரமுதலி - உயர்சொல் முதல் - உயிர்ப்பலி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உயிர்குடித்தல் | உயிரைப் போக்குதல் ; கொல்லல் . |
| உயிர்ச்சூது | சூதாடலில் ஒருவகை ; ஆடு ; கோழி முதலியவற்றைப் போர் செய்யுமாறு விட்டு விளையாடுகை . |
| உயிர்த்தல் | உயிர்பெற்றெழுதல் ; தொழிற்படுதல் ; மூச்செறிதல் ; மூச்சுவிடல் ; ஈனுதல் ; மோத்தல் ; கூறுதல் ; வெளிப்படுத்துதல் ; இறந்துபடுதல் ; சொரிதல் ; இளைப்பாறல் . |
| உயிர்த்தறுவாய் | உயிருக்குக் கேடுவரு நிலை , ஆபத்துச் சமயம் . |
| உயிர்த்துணை | கேட்டில் உதவுவோன் , ஆருயிர் நண்பன் ; கணவன் ; மனைவி ; கடவுள் . |
| உயிர்த்துணைவன் | உயிர்த்தோழன் , நண்பன் ; கணவன் . |
| உயிர்த்துணைவி | உயிர்த்தோழி ; மனைவி ; கலைமகள் . |
| உயிர்த்தெழுதல் | மூர்ச்சித்துப்போன உயிர் வரப்பெற்று எழுதல் ; செத்தவன் மீட்டும் உயிர்பெற்றெழுதல் . |
| உயிர்த்தோழன் | ஆருயிர் நண்பன் . |
| உயிர்த்தோழி | உற்ற துணைவி ; நம்பிக்கையான பாங்கி . |
| உயிர்த்தோற்றம் | உயிரினங்களின் பிறவி : முட்டையிற் பிறப்பன , வியர்வையிற் பிறப்பன ,வித்து வேரிலிருந்து பிறப்பன , கருப்பையிற் பிறப்பன என்னும் நால்வகைப் பிறப்புகள் . |
| உயிர்தருமருந்து | இறப்பைப் போக்கும் மருந்து . |
| உயிர்நிலை | உடல் , உயிர்தங்கும் இடம் ; உயிரின் உண்மை வடிவம் ; பிராணாயாமம் , உட்கருத்து . |
| உயிர்ப்பலி | உயிர்களைத் தெய்வங்களின் பொருட்டுப் பலிகொடுக்கை ; சீவபலி ; வீரன் தன் தலையைக் கொற்றவைக்கு கொடுக்கும் பலி ; உயிர்ப்பிச்சை . |
| உயர்சொல் | உயர்த்துக் கூறும் சொல் , மேன்மைப்படுத்திச் சொல்லும் சொல் . |
| உயர்த்தல் | உயர்த்துதல் ; அதிகப்படுத்துதல் ; மேல்நிலைக்குக் கொணர்தல் . |
| உயர்த்தி | உயர்ச்சி , மேன்மை . |
| உயர்த்துதல் | உயரச்செய்தல் ; அதிகப்படுத்துதல் ; உயர எடுத்தல் ; மேன்மைப்படுத்துதல் ; தூக்குதல் ; இசையெடுத்தல் ; மேலாகச் செய்தல் ; முடித்தல் ; அவித்தல் . |
| உயர்தல் | அதிகப்படல் ; ஏறுதல் ; நிமிர்தல் ; மேற்படல் ; மேலெழுதல் ; வளர்தல் ; இறுமாப்பு அடைதல் ; மேன்மையடைதல் . |
| உயர்திணை | உயர்வாகிய சாதி ; மேற்குலம் ; உயர்ந்த குலம் ; மானிடர் ; தேவர் ; நரகர் ; ஆகியோரைக் குறிக்கும் சொல் . |
| உயர்ந்தவன் | சிறந்தவன் ; நெடியோன் ; காமன் . |
| உயர்ந்தோர் | உயர்ந்தவர் ; அறிஞர் ; சான்றோர் ; வானோர் ; முனிவர் . |
| உயர்நிலத்தவர் | தேவர் . |
| உயர்நிலம் | மேடு ; தேவருலகம் ; உபரிகை . |
| உயர்நிலை | உயர்நிலம் ; மேலான பதவி ; மேன்மை ; மேன்மாடம் ; தெய்வத்தன்மை ; துறக்கம் ; தேவருலகம் . |
| உயர்வு | மிகுதியாதல் ; உயர்ச்சி ; உயரம் ; விருத்தி , மேன்மை ; வருத்தம் ; உயர்வுநவிற்சியணி . |
| உயர்வுநவிற்சியணி | ஒரு பொருளைக் குறித்துக் கூறும் அளவிறந்த கற்பனை ; அதிசயோக்தி அலங்காரம் . |
| உயரம் | அடியிலிருந்து மேல்நோக்கி எழுந்த அளவு ; மிகுதி ; மேல் ; உயர்ச்சி ; உச்சம் . |
| உயராடு | வெள்ளாடு . |
| உயரி | உயரமானது ; உயர்ச்சி . |
| உயல் | தப்புகை ; உளதாதல் ; உயிர்வாழ்தல் . |
| உயலுதல் | அசைதல் . |
| உயவல் | நினைவு ; துன்பம் ; வருத்தம் . |
| உயவற்பெண்டிர் | கைம்பெண்கள் ; கைம்மை நோன்பினால் வருந்தும் மகளிர் . |
| உயவு | உயிர் பிழைக்கச் செய்யும் வழி ; வாழச் செய்யும் மருந்து ; சஞ்சீவி ; வருத்தம் . |
| உயவுத்துணை | நட்புத்துணை ; காண்க : உசாத்துணை . |
| உயாவுத்துணை | நட்புத்துணை ; காண்க : உசாத்துணை . |
| உயவுதல் | வருந்துதல் ; உசாவுதல் ; வினாவுதல் ; வண்டிச் சக்கரத்திற்கு மையிடுதல் . |
| உயவுநெய் | வண்டிக்கு இடும் எண்ணெய் ,மசகு . |
| உயவை | காக்கணங்கொடி ; வெண்கருவிளை ; முல்லைக்கொடி ; காட்டாறு ; துன்பம் ; மேகம் . |
| உயா | உயங்கல் , வருத்தம் . |
| உயிர் | காற்று ; உயிர்வளி ; சீவன் ; ஆதன் ; ஓரறிவுயிர் முதலிய உயிரினம் ; உயிரெழுத்து ; ஓசை ; ஒரு நாழிகையில் 4320-ல் ஒரு கூறு ; சன்ம லக்கினம் . |
| உயிர்க்கட்டை | உடல் , உடம்பு . |
| உயிர்க்கணம் | உயிரெழுத்துக் கூட்டம் . |
| உயிர்க்கயிறு | உறுதியுள்ள கயிறு . |
| உயிர்க்கழு | கழுவில் ஒரு வகை . |
| உயிர்க்கிழவன் | கணவன் . |
| உயிர்க்குயிர் | கடவுள் . |
| உயிர்க்கொலை | உயிர்வதை ; உயிரினங்களைக் கொல்லுகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 161 | 162 | 163 | 164 | 165 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயர்சொல் முதல் - உயிர்ப்பலி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சொல், உயர்ச்சி, பிறப்பன, வருத்தம், நண்பன், மேன்மை, உயிர், கணவன், உயர்நிலம், தேவருலகம், உயரம், உயர்வுநவிற்சியணி, காண்க, உசாத்துணை, நட்புத்துணை, செய்யும், துன்பம், தேவர், உயர்த்துதல், கடவுள், மனைவி, ஆருயிர், உயிர்பெற்றெழுதல், உயிர்த்தோழன், உயிர்த்தோழி, கூறும், உடல், மருந்து, அதிகப்படுத்துதல்

