முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » உரம்விழுதல் முதல் - உரிமைசெப்புதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - உரம்விழுதல் முதல் - உரிமைசெப்புதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உரற்கட்டை | உரல் ; உரலமைப்பதற்குரிய மரக்கட்டை . |
| உரற்கல் | வெற்றிலை பாக்கு இடிக்கும் சிறிய உரல் . |
| உரற்களம் | அறிஞரவை ; அறிஞர் கூடிப் பேசுமிடம் ; நெல் முதலிய தவசங்களை உரலிலிட்டுக் குற்றுமிடம் . |
| உரற்குழி | உரலில் குற்றும் குழி ; குற்றுதற்குத் தரையில் அமைத்த குழி . |
| உரற்குற்றி | காண்க : உரற்கட்டை . |
| உரற்பணை | அரிசி தீட்டல் , மாவிடித்தல் காலங்களில் வெளியில் சிந்தாதபடி உரலின்மேல் வைக்கும் கூடு , உரலின்மேல் வைக்கும் வாய்க்கூடு , |
| உரற்பெட்டி | அரிசி தீட்டல் , மாவிடித்தல் காலங்களில் வெளியில் சிந்தாதபடி உரலின்மேல் வைக்கும் கூடு , உரலின்மேல் வைக்கும் வாய்க்கூடு , |
| உரற்றுதல் | பேரொலி செய்தல் , முழங்குதல் . |
| உரறுதல் | முழங்குதல் , ஒலித்தல் , சினங்கொள்ளல் . |
| உரன் | திண்மை ; பற்றுக்கோடு ; வெற்றி ; வலி ; ஊக்கம் , உள்ள மிகுதி ; மார்பு ; அறிவு . |
| உரனர் | உரனுடையோர் , மனவலியுடையோர் . |
| உராஞ்சுதல் | ஒன்றோடொன்று நெருங்கி அழுத்துதல் , உரிஞ்சுதல் , தேய்த்தல் . |
| உராய்ஞ்சல் | உராய்ஞ்சுதல் , உரைதல் . |
| உராய்தல் | காண்க : உராஞ்சுதல் . |
| உரால் | உலாவுதல் ; ஓடுதல் ; விரைந்து செல்லல் . |
| உராவுதல் | பரவுதல் , இடம்விட்டுப் பெயர்தல் ; செல்லுதல் ; வலியடைதல் ; பரத்தல் . |
| உரி | தோல் ; மரப்பட்டை ; உரிச்சொல் ; அரை நாழி ; கொத்துமல்லி ; நாயுருவி . |
| உரி | (வி) உரிதலைச் செய் என்னும் ஏவல் ; களை ; கழற்று . |
| உரிச்சீர் | மூவசைச் சீர் . |
| உரிச்சொல் | நால்வகைச் சொற்களுள் ஒன்று ; காண்க : திரிசொல் ; பெயர் வினைகளைச் சிறப்பிக்கும் அடைமொழி ; குறைச்சொல் வேர்ச்சொல் ; சொற்பொருள் விளக்கும் நிகண்டு நூல் . |
| உரிசை | சுவை ; தீஞ்சுவை . |
| உரிஞ்சல் | தேய்த்தல் , உராய்கை . |
| உரிஞ்சுதல் | உராய்தல் ,தேய்த்தல் , பூசுதல் , இழுத்தல் , வற்றச் செய்தல் . |
| உரித்தல் | ஒரு பொருளில் ஒட்டியிருக்கும் போர்வையைப் பிரித்தெடுத்தல் ; தோல் , பட்டை முதலியவற்றைக் கழற்றுதல் ; களைதல் , |
| உரித்தாளி | உரித்தானவன் ; சொத்துக்குரியவன் . |
| உரித்திரம் | மஞ்சள் ; மரமஞ்சள் . |
| உரித்து | உரியது , உரிமை , உற்ற நட்பு . |
| உரித்துவைத்தல் | வெளிப்படுத்தி வைத்தல் ; நேரொப்பாதல் . |
| உரிதல் | தோல் முதலியவை கழலுதல் ; ஆடை களைதல் ; பறித்தல் . |
| உரிப்பொருட்டலைவன் | கிளவித்தலைவன் , அகப்பாடலில் கூற்று நிகழ்த்துவோன் . |
| உரிப்பொருள் | ஐந்திணைகளுக்குமுரியனவான புணர்தல் , பிரிதல் , இருத்தல் , ஊடல் , இரங்கல் ஆகியவையும் அவற்றின் நிமித்தங்களும் . |
| உரிமை | உரிய தன்மை ; ஒருவனுடைய பொருளை அவனுக்குப்பின் அடைதற்காகுந் தன்மை ; மனைவி ; நட்புப்பற்றிய சுதந்தரம் ; அடிமை ; கடமை ; பாத்தியதை ; பிரியம் ; சொத்து . |
| உரிமைக்கஞ்சி | சாகுந்தறுவாயில் வார்க்குங்கஞ்சி ; ஒருவர் இறந்த அன்று அவருடைய சுற்றதாருக்குப் படைக்கும் உணவு . |
| உரிமைக்கட்டு | இனக்கட்டுப்பாடு ; திருமணத்திற்கு உரிய இனமுறை உறவு . |
| உரிமைக்கடன் | உரிமைபற்றிச் செய்யும்கடமை ; பிணத்திற்குரியவர்கள் செய்யுங்கடமை . |
| உரிமைக்காணி | தாய பாகமாக வந்த நிலம் . |
| உரிமைக்காரன் | சொத்துக்குரியவன் ; பொறுப்பு ஏற்றற்குரியவன் . |
| உரிமைச்சுற்றம் | அடிமைக் கூட்டம் . |
| உரிமைசெப்புதல் | மணம் பேசுதல் . |
| உரம்விழுதல் | கைக்குழந்தை தரையில் புரளுவதனால் உண்டாகும் ஒரு பிடிப்புநோய் ; கவனமின்றிக் குழந்தையைத் தூக்குவதால் குழந்தைக்கு உண்டாகும் சுளுக்கு . |
| உரமடித்தல் | பயிரிடும் நிலத்திற்கு வேண்டும் உரங்களைக் கொண்டுசேர்த்தல் . |
| உரமெடுத்தல் | குழந்தையின் சுளுக்கைப் போக்குதல் . |
| உரல் | நெல் முதலியன குற்றும் உரல் ; இடிப்பதற்குரிய கருவி ; இடியப்பம் , தேன்குழல் முதலிய பணிகாரம் பிழியும் அச்சு . |
| உரலடி | யானை . |
| உரலாணி | உரலின் அடிக்கிடும் மரவாணி , உரலின் அடிக்கிடும் மரத்துண்டு ; உலக்கை . |
| உரவக்காடு | மலைப்பயிர் . |
| உரவம் | வலிமை ; அறிவு . |
| உரவர் | வலியுடையோர் ; அறிவுடையோர் ; சமணர் . |
| உரவன் | வலியோன் ; அறிஞன் ; அருகன் . |
| உரவு | வலிமை ; மனவலிமை ; மிகுகை ; நஞ்சு . |
| உரவுதல் | உலாவுதல் ; வலியடைதல் . |
| உரவுநீர் | கடல் ; ஆறு . |
| உரவோன் | வலிமையுடையவன் ; மூத்தோன் ; சாவில்லான் ; ஊக்கமுடையோன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 163 | 164 | 165 | 166 | 167 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உரம்விழுதல் முதல் - உரிமைசெப்புதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வைக்கும், உரல், உரலின்மேல், தோல், காண்க, தேய்த்தல், உலாவுதல், உரிஞ்சுதல், உராய்தல், உரிச்சொல், வலியடைதல், சொத்துக்குரியவன், உரலின், அடிக்கிடும், வலிமை, உண்டாகும், தன்மை, உராஞ்சுதல், உரிமை, உரிய, களைதல், செய்தல், தரையில், அரிசி, தீட்டல், குழி, குற்றும், நெல், முதலிய, மாவிடித்தல், காலங்களில், உரற்கட்டை, முழங்குதல், வாய்க்கூடு, கூடு, வெளியில், சிந்தாதபடி, அறிவு

