முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » உயிர்ப்பழி முதல் - உரம்போடுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - உயிர்ப்பழி முதல் - உரம்போடுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உயிருதவி | கேட்டில் உதவுகை , பெருந்துன்பமடைந்தபொழுது செய்யும் உதவி ; உயிர் கொடுத்து உதவுகை . |
| உயிரெடுத்தல் | உயிரை வாங்கிவிடுதல் ; துன்புறுத்துதல் . |
| உயிரெழுத்து | உயிர்போல் தனித்து இயங்கக் கூடிய எழுத்து ; 'அ ' முதல் ' ஔ ' வரை ஈறான 12 உயிரெழுத்துகள் . |
| உயிரைவாங்குதல் | கொலை செய்தல் ; துன்பப்படுத்தல் . |
| உயிரொடுங்குதல் | உயிராற்றல் குறைதல் ; சாதல் . |
| உயில் | சாவு முறி ; மரண சாசனம் . |
| உயிறு | இலாமிச்சம்புல் . |
| உரககேதனன் | பாம்புக் கொடியையுடையவனாகிய துரியோதனன் . |
| உரககேது | பாம்புக் கொடியையுடையவனாகிய துரியோதனன் . |
| உரகடல் | கொந்தளிக்கும் கடல் . |
| உரகதம் | பாம்பு . |
| உரகம் | பாம்பு ; நாகமல்லிகை . |
| உரகமல்லி | நாகமல்லிகை . |
| உரகர் | நாகர் ; நாக சாதியார் ; சமணர் . |
| உரகவல்லி | வெற்றிலைக்கொடி . |
| உரகன் | பாம்பு ; ஆதிசேடன் . |
| உரகாதிபன் | ஆதிசேடன் . |
| உரகாரி | கருடன் ; மயில் . |
| உரகேந்திரன் | காண்க : உரகாதிபன் . |
| உரங்காட்டுதல் | அன்பு பாராட்டல் ; வலிகாட்டல் . |
| உரங்குத்துதல் | மரத்தைச் சுற்றி மண் கெட்டித்தல் . |
| உரங்கொள்ளுதல் | கெட்டியாதல் , பலமாதல் , மிகுதல் , கடினமாதல் . |
| உரசுதல் | உராய்தல் , தேய்த்தல் , துடைத்தல் . |
| உரஞ்சுதல் | உராய்தல் , தேய்த்தல் , துடைத்தல் . |
| உரஞ்செய்தல் | உறுதிகொள்ளுதல் ; வலியுறுதல் . |
| உரஞ்சொல்லுதல் | உறுதி கூறுதல் . |
| உரண்டம் | காகம் . |
| உரண்டை | காகம் . |
| உரணம் | ஆட்டுக்கடா ; முகில் . |
| உரத்தல் | இறுகுதல் , பலத்தல் , வலியுறல் , கொந்தளித்தல் , மிகுதல் , முருடாதல் , கடுமையாதல் , எடுப்பாதல் . |
| உரப்பம் | பெருங்காயம் . |
| உரப்பல் | உரப்புதல் ; சத்தமிட்டு அதட்டுதல் , அடரொலி ; திரட்டோசை . |
| உரப்பித்தல் | பலமுறச் செய்தல் . |
| உரப்பியடித்தல் | பேச்சால் வெல்லுதல் . |
| உரப்பிரம் | வெள்ளாடு . |
| உரப்பு | பேரொலி ; அதட்டு ; கடினம் ; முருடு ; வலி ; மனத்திண்மை . |
| உரபடி | உரப்பு , திடம் . |
| உரபிடி | உரப்பு , திடம் . |
| உரம் | வலிமை ; திண்மை ; திடம் ; மரவயிரம் ; எரு ; மார்பு ; அறிவு ; ஊக்கம் ; படைவகுப்பின் முன்னணி ; குழந்தைகளுக்கு விழும் சுளுக்கு வகை ; மதில் ; உள்ளத்தின் மிகுதித் தன்மை ; விரைவு . |
| உரம்போடுதல் | எருப்போடுதல் ; பலப்படுத்தல் ; திடப்படுத்தல் . |
| உயிர்ப்பழி | உயிர்க் கொலை ; உயிர்க் கொலை செய்த குற்றம் ; கொலை செய்தவனைத் தொடரும் பழி , பிரமகத்தி . |
| உயிர்ப்பனவு | உயிரின் தன்மை ; செழிப்பு ; பச்சென்றிருக்கும் தன்மை . |
| உயிர்ப்பாங்கி | விட்டு நீங்காத தோழி ; அணுக்கமாகப் பழகும் தோழி . |
| உயிர்ப்பித்தல் | பிழைப்பித்தல் . |
| உயிர்ப்பு | உயிர்த்தெழுதல் ; புதுவன்மையடைதல் ; தெய்வத்திருமேனியினுள் தெய்வ ஆற்றலை வருவிக்கை ; மூச்சு ; காற்று ; நறுமணம் ; இளைப்பாறுகை . |
| உயிர்ப்புவீங்குதல் | நெட்டுயிர்ப்பு ; பெருமூச்சு விடுதல் . |
| உயிர்ப்புனல் | குருதி , இரத்தம் . |
| உயிர்ப்பொறை | உடம்பு . |
| உயிர்மருந்து | சோறு , உணவு . |
| உயிர்மெய் | ஒற்று முன்னும் உயிர் பின்னுமாய் இணைந்து ஒலிக்கும் எழுத்து . 'க' முதல் 'னௌ' ஈறான 216 எழுத்து . |
| உயிர்வாழ்க்கை | உயிரோடு கூடிவாழும் வாழ்க்கை , சீவனம் . |
| உயிர்வாழ்தல் | உயிரோடு கூடியிருத்தல் , சீவித்தல் . |
| உயிர்விடுதல் | ஒருவருக்காகவோ ஒரு நற்செயலுக்காகவோ ஒருவன் தன் உயிரைத் தானே விடுதல் ; மிகப் பாடுபடுதல் . |
| உயிர்விளக்கம் | ஆன்ம வடிவத்தை அறிகை . |
| உயிர்வேதனை | உயிருக்குத் துன்பம் விளைவிப்பவை ; அவை பன்னிரண்டு ஏதுக்களால் நேரும் ; அனல் , குளிர்ச்சி , இடி , புனல் , காற்று , ஆயுதம் , நஞ்சு , நச்சுமருந்து , பசி , நீர்வேட்கை , பிணி , முனிவு அறாமை . |
| உயிர்வைத்தல் | இறத்தல் |
| உயிரடங்குதல் | மூச்சு ஒடுங்குதல் ; இறத்தல் |
| உயிரவை | உயிர்த் தொகுதி ; உயிர்களின் கூட்டம் |
| உயிரளபு | தனக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கும் நெட்டுயிரெழுத்து . |
| உயிரளபெடை | தனக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கும் நெட்டுயிரெழுத்து . |
| உயிரிலங்கி | உயிர்த் தீ . |
| உயிருண்ணுதல் | உயிரைப் போக்குதல் ; பரவசப்படுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 162 | 163 | 164 | 165 | 166 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிர்ப்பழி முதல் - உரம்போடுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கொலை, பாம்பு, உரப்பு, தன்மை, எழுத்து, திடம், காற்று, உயிர்க், விடுதல், தோழி, மூச்சு, இறத்தல், மிக்கொலிக்கும், நெட்டுயிரெழுத்து, மாத்திரையின், தனக்குரிய, உயிர்த், உயிரோடு, துடைத்தல், கொடியையுடையவனாகிய, துரியோதனன், பாம்புக், செய்தல், உயிர், ஈறான, நாகமல்லிகை, ஆதிசேடன், தேய்த்தல், உதவுகை, உராய்தல், மிகுதல், உரகாதிபன், காகம்

