தமிழ் - தமிழ் அகரமுதலி - உபவேட்டிதம் முதல் - உமண்பகடு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உபாசகை | பௌத்தருள் இல்லறத்தாள் . |
| உபாசங்கம் | காண்க : அம்பறாத்தணி . |
| உபாசனம் | ஆராதனை வழிபாடு ; வில்வித்தை . |
| உபாசனை | ஆராதனை வழிபாடு ; வில்வித்தை . |
| உபாசி | தெய்வ வழிபாட்டால் அருள் பெற்றவன் . |
| உபாசித்தல் | வழிபடுதல் . |
| உபாஞ்சு | ஏகாந்தம் ; இரகசியம் ; மந்தமாகச் செபித்தல் . |
| உபாத்தி | ஆசிரியன் , கற்பிப்போன் , புரோகிதன் . |
| உபாத்தியாயன் | ஆசிரியன் , கற்பிப்போன் , புரோகிதன் . |
| உபாத்தியாயினி | ஆசிரியை , கற்பிப்பவள் . |
| உபாதாயம் | பற்றப்படுவது . |
| உபாதாயவுரு | வலி , இரதம் , வன்னம் , சந்தம் என்னும் நால்வகைப்பட்ட உருவவகை |
| உபாதானகாரணம் | முதற்காரணம் . |
| உபாதானம் | முதற்காரணம் ; அரிசிப்பிச்சை ; அன்னதானம் ; ஐம்புலனடக்குகை ; பற்று . |
| உபாதி | கடமை ; வேதனை ; வாதை ; நோய் ; இடையூறு ; வருத்தம் ; தடை ; பாதை . |
| உபாதேயம் | ஏற்றுக்கொள்ளத்தக்கது . |
| உபாந்தியம் | கடைக்கண் ; ஈற்றயல் ; அண்மை . |
| உபாம்சு | ஏகாந்தம் ; மந்தமாகச் செபித்தல் ; தனது செவி கேட்க வாய்க்குட் செபிக்கை . |
| உபாயம் | வழி ; சூழ்ச்சி ; சொற்பம் ; அரசர்க்குரிய உபாயம் . அவை : இன்சொற் கூறல் , வேறுபடுத்தல் , ஈதல் , ஒறுத்தல் (சாமம் , பேதம் , தானம் , தண்டம் ) முறைகளால் செயல் முடித்தல் . |
| உபாயி | சூழ்ச்சியுள்ளவன் . |
| உபாலம்பனம் | இகழ்தல் , நிந்திக்கை . |
| உபானம் | கோபுரத்தின் அடிச் சித்திர வரிசை ; மிதியடி . |
| உபானவரி | கோபுரத்தின் அடிச் சித்திர வரிசை ; மிதியடி . |
| உபுக்குதல் | பெருகுதல் . |
| உபேட்சித்தல் | பொருட்படுத்தாமை ; வெறுத்துவிடுதல் ; கைவிடல் . |
| உபேட்சை | புறக்கணிப்பு ; அசட்டை ; அருவருப்பு . |
| உபேந்திரன் | இந்திரனுக்குத் தம்பி ,திருமால் . |
| உபோதம் | பேய்ப்பசளைக்கீரை , பேய்ப்பசளை . |
| உபோற்காதம் | தொடக்கம் , ஆரம்பம் ; பாயிரம் ; நூன்முகம் . |
| உம் | ஓரிடைச்சொல் , அசைநிலை ; விகுதி . |
| உம்கொட்டுதல் | உடன்படல் ; ஒப்புக்கொள்ளல் ; ' உம் 'மொலி எழுப்பிப் பிறர் கூறுவதைக் கேட்டல் . |
| உம்பர் | மேலிடம் ; வானம் ; தேவர் ; வானோர் ; தேவலோகம் ; உயர்ச்சி ; பார்ப்பார் . |
| உம்பரான் | உயர்ந்தோன் ; உயர்நிலையிருப்பவன் ; காமதேனு . |
| உம்பல் | வழித்தோன்றல் ; குலம் ; குடி ; ஆண்விலங்கு ; யானை ; எழுச்சி ; ஆணாடு ; வலிமை ; புதல்வன் ; முறைமை . |
| உம்பளம் | உப்பளம் ; மன்னனால் கிடைத்த பொருள் ; உதவி ; கொடை ; முற்றூட்டு ; மானியநிலம் . |
| உம்பன் | உயர்ந்தோன் ; கடவுள் . |
| உம்பி | உன் தம்பி . |
| உம்பிடிக்கோல் | நில அளவுகோல்வகை . |
| உம்பிளிக்கை | மானியம் , அரசனாற் கொடுக்கப்பட்ட இறையிலி நிலம் ; இலவசப் பொருள் . |
| உம்மச்சு | கம்பியிழுக்கும் சட்டம் . |
| உம்மாண்டி | பூச்சாண்டி ; வெருட்டுஞ்சொல் . |
| உம்மெனல் | சம்மதத்தைக் காட்டும் ஒலிக்குறிப்பு ; சினக்குறிப்பு ; ஓர் அனுகரண ஓசை . |
| உம்மை | ' உம் ' என்னும் இடைச்சொல் ; முற்பிறப்பு ; வருபிறப்பு ; உங்களை ; மறுமை . |
| உம்மைத்தொகை | ' உம் ' என்னும் இடைச்சொல் தொக்குவருந் தொடர் . |
| உமட்டியர் | நுளைச்சியர் , உப்பு விற்கும் மகளிர் , உமணச் சாதிப் பெண்மக்கள் . |
| உமண் | உமணர் , உப்பு விளைக்கும் சாதியர் . |
| உமண்பகடு | உப்பு வாணிகரது மூட்டை சுமந்து செல்லும் எருது . |
| உபவேட்டிதம் | கைவட்டணை நான்கனுள் ஒன்று , அபிநயவகை . |
| உபவேதம் | அப்பிரதான வேதம் ; நான்கு வேதங்களை அடுத்து மதிக்கப்பெறும் ஆயுர்வேதம் முதலிய நான்கு வேதங்கள் ; அவை : ஆயுர்வேதம் , தனுர்வேதம் , காந்தர்வவேதம் , அர்த்தவேதம் . |
| உபாக்கியானம் | கதை சொல்லுகை ; முற்காலத்திலே நிகழ்ந்ததை அறிவிக்கும் கதை ; கிளைக்கதை ; இதிகாசம் . |
| உபாகமம் | மூல ஆகமங்களின்வழித் தோன்றிய சைவ ஆகமங்கள் ; சார்பாகமம் , பழைய ஏற்பாட்டில் ஐந்தாவது புத்தகம் . |
| உபாகிதம் | உற்கை ; எரிகொள்ளி ; நெருப்பினால் வரும் அழிவு . |
| உபாங்கதாளம் | தாளவகை . |
| உபாங்கம் | சார்புறுப்பு ; வேதாகமங்களுக்கு அங்கமாகிய நூல்கள் ; மார்க்கத்துக்குரிய குறி ; ஒருவகைத் தோற்கருவி ; பக்க வாத்தியம் ; உபாங்க தாளம் . |
| உபாங்கராகம் | ஒரு பண்வகை . |
| உபாசகன் | உபாசனை செய்வோன் ; தெய்வ வழிபாடு உடையவன் ; பௌத்தருள் இல்லறத்தான் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 159 | 160 | 161 | 162 | 163 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உபவேட்டிதம் முதல் - உமண்பகடு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உப்பு, வழிபாடு, என்னும், மிதியடி, வரிசை, சித்திர, அடிச், தம்பி, பொருள், ஆயுர்வேதம், நான்கு, இடைச்சொல், கோபுரத்தின், உயர்ந்தோன், முதற்காரணம், தெய்வ, ஏகாந்தம், உபாசனை, வில்வித்தை, ஆராதனை, மந்தமாகச், செபித்தல், பௌத்தருள், புரோகிதன், கற்பிப்போன், ஆசிரியன், உபாயம்

