தமிழ் - தமிழ் அகரமுதலி - உமணத்தி முதல் - உயர்ச்சி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உய்யானம் | உத்தியானம் ; பூந்தோட்டம் ; சோலை ; சிங்காரவனம் ; அரசர் விளையாடுஞ் சோலை . |
| உய்வனவு | ஈடேற்றம் , பிழைப்பு , வாழ்வு . |
| உய்விடம் | பிழைக்குமிடம் . |
| உய்வு | உய்தி ; உயிர் தப்புகை ; பிழைப்பு ; ஈடேற்றம் ; இடுக்கண்களினின்றும் நீங்கும் வாயில் ; உய்தல் . |
| உயக்கம் | வருத்தம் , வாட்டம் , துன்பம் . |
| உயங்குதல் | வருந்துதல் ; வாடுதல் ; துவளுதல் ; மெலிதல் ; மனந்தளர்தல் . |
| உயர் | உயர்ச்சி ; குன்றிக்கொடி . |
| உயர் | (வி) உயர்என் ஏவல் ; வளர் ; மேலெழு ; மேன்மையுறு ; இறுமாப்புறு . |
| உயர்குடி | மேற்குலம் ,மேலான குடும்பம் . |
| உயர்குலம் | மேற்குலம் ,மேலான குடும்பம் . |
| உயர்ச்சி | உயரம் ; மேன்மை ; ஏற்றம் . |
| உமம் | கப்பற் சரக்குகளை இறக்குமிடம் , நகரம் . |
| உமர் | உம்மவர் ; குதிர் ; இகழ்ச்சிச்சொல் . |
| உமரி | ஒரு பூண்டு ; பவளப் பூண்டு ; நத்தை . |
| உமரிக்காசு | பலகறை ; தூரி . |
| உமரிக்கீரை | கோழிப்பசளை . |
| உமல் | ஓலைப் பை , மீன் பிடிக்கிறவர்களின் ஓலைப் பை . |
| உமலகம் | அரிதாரம் . |
| உமற்கடம் | தருப்பைப் புல் . |
| உமா | குன்றிக்கொடி . |
| உமாகடம் | சணற்கொத்து . |
| உமாதசி | சணல் . |
| உமாபட்சி | ஒருவகைப் பறவை . |
| உமாபதி | சிவன் . |
| உமாமகேசன் | உமையோடு கூடிவிளங்கும் ஈசனாகிய சிவன் . |
| உமாமகேசுவரன் | உமையோடு கூடிவிளங்கும் ஈசனாகிய சிவன் . |
| உமி | தவசங்களின் மேல்தோல் . |
| உமிக்கரப்பான் | குழந்தைகட்கு வருஞ் சிரங்கு . |
| உமிக்கரி | உமி எரிந்ததனாலாகிய கரி . |
| உமிக்காந்தல் | உமியினால் உண்டாகும் தழல் , உமி எரிந்த துகள் . |
| உமிக்கூர் | உமிமூக்கு . |
| உமிச்சிரங்கு | சிறுசிரங்கு . |
| உமித்தல் | பதராதல் ; சாரமறுத்தல் ; கொப்புளங் கொள்ளுதல் ; அழிதல் . |
| உமித்தேக்கு | பெருங்குமிழ் . |
| உமிதல் | கொப்புளித்து உமிழ்தல் ; துப்புதல் ; உறிஞ்சுதல் . |
| உமிநகம் | மெல்லிய நகம் . |
| உமியல் | வசம்பு . |
| உமிரி | உமரிப் பூண்டு , உமரிச் செடி ; நத்தை . |
| உமிவு | உமிழ்நீர் ; துப்புகை . |
| உமிழ்தல் | கொப்புளித்தல் ; துப்புதல் ; கக்கல் ; சத்திபண்ணுதல் ; வெளிப்படுத்துதல் ; சொரிதல் ; தெவிட்டுதல் ; காறுதல் . |
| உமிழ்நீர் | வாயில் ஊறும் நீர் ; துப்பல் . |
| உமிழ்வு | உமிழப்படுவது ; துப்புகை . |
| உமேசன் | சிவன் . |
| உமேதுவார் | சம்பளமின்றி வேலை பழகுவோன் ; விண்ணப்பதாரன் . |
| உமை | பார்வதி ; மஞ்சள் ; புகழ் ; காந்தி ; நெல்வகை ; சணல் . |
| உமைகரநதி | பார்வதியின் கையிலிருந்து வருவதாகிய கங்கை . |
| உமைத்தல் | தினவு ; வருந்துதல் ; நிரம்புதல் ; தின்னுதல் . |
| உமையவள் | பார்வதி ; சவர்க்காரம் ; மயிலிறகு . |
| உமையாள் | பார்வதி ; சவர்க்காரம் ; மயிலிறகு . |
| உய்கதியால் | உண்டாகும் தடி ; உய்தடி . |
| உய்கை | துன்பம் நீங்குதல் ; உய்தி ; ஈடேறுதல் . |
| உய்த்தல் | செலுத்துதல் ; கொண்டுபோதல் ; சேர்த்தல் ; நடத்துதல் ; அமிழ்த்தல் ; நுகர்தல் ; கொடுத்தல் ; அனுப்புதல் ; குறிப்பித்தல் ; அறிவித்தல் ; ஆணை செலுத்துதல் ; ஆயுதத்தைச் செலுத்துதல் ; உய்யச் செய்தல் ; நீக்குதல் . |
| உய்த்தலில்பொருண்மை | ஓர் அணி , கருதிய பொருள் தெளிவாகப் புலப்படுமாறு எளிய சொல்லுடைமையாகிய குணம் . |
| உய்த்தறிதல் | உய்த்துணர்தல் , ஊகித்தறிதல் . |
| உய்த்துக்கொண்டுணர்தல் | முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று , ஒரு பொருளைச் சொல்லும்போது அதனிடமாக மற்றொரு பொருளையும் விளங்கச் செய்தல் . |
| உய்த்துணர்தல் | காண்க : உய்த்தறிதல் . |
| உய்த்துணர்மொழி | செய்யுட் குற்றங்களுள் ஒன்று . |
| உய்த்துணரவைப்பு | காண்க : உய்த்துக்கொண்டுணர்தல் . |
| உய்தடி | உண்டாகுந் தடி ; கிளைக்கும் வேலிக்கொம்பு . |
| உய்தல் | உயிர்வாழ்தல் , பிழைத்தல் , ஈடேறுதல் , நீங்குதல் ; தப்புதல் . |
| உய்தி | ஈடேற்றம் , உயிர் வாழ்தல் , தப்பிப் பிழைத்தல் , நீங்குகை . |
| உய்யக்கொண்டான் | பிழைக்குமாறு அருள் செய்தவன் ; எருமைமுல்லை ; கொய்யாமரம் ; ஓர் ஆறு . |
| உய்யல் | ஏறுதல் ; செல்லல் ; கேட்டல் ; வாழ்தல் . |
| உமணத்தி | உமணப்பெண் , உப்பு விற்கும் மகள் . |
| உமணன் | உப்பமைப்போன் , உப்பு விற்கும் ஆடவன் , உப்பு வாணிகன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 160 | 161 | 162 | 163 | 164 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உமணத்தி முதல் - உயர்ச்சி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சிவன், பூண்டு, செலுத்துதல், உப்பு, பார்வதி, உய்தி, ஈடேற்றம், நீங்குதல், உமிழ்நீர், உய்தடி, மயிலிறகு, ஈடேறுதல், சவர்க்காரம், துப்புகை, உய்த்தறிதல், பிழைத்தல், வாழ்தல், விற்கும், காண்க, ஒன்று, துப்புதல், உய்த்துணர்தல், உய்த்துக்கொண்டுணர்தல், செய்தல், ஈசனாகிய, வருந்துதல், உயர், உயர்ச்சி, குன்றிக்கொடி, துன்பம், உய்தல், பிழைப்பு, உயிர், வாயில், மேற்குலம், மேலான, கூடிவிளங்கும், சோலை, உண்டாகும், உமையோடு, சணல், குடும்பம், நத்தை, ஓலைப், உமிழ்தல்

