தமிழ் - தமிழ் அகரமுதலி - உதாரகுணம் முதல் - உந்து வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உதானன் | தசவாயுவுள் ஒன்று , நாபியில் நிற்கும் வாயு . |
| உதி | காண்க : ஒதி ; வித்தை ; உலைத்துருத்தி . |
| உதி | (வி) பிற , உதித்தலைச் செய் ; உதயமாகு ; அவதரி ; காலந்தொடங்கு . |
| உதிட்டிரன் | போர்த்திறமுள்ளவன் ; தருமபுத்திரன் . |
| உதித்தல் | உதயமாதல் , தோன்றுதல் , பிறத்தல் , பருத்தல் . |
| உதிதன் | தோன்றினவன் ; பாண்டிய மன்னன் . |
| உதிப்பு | தோற்றம் ; பிறப்பு ; அறிவு . |
| உதியன் | சேரன் ; பாண்டியன் . |
| உதிர் | கோரைக்கிழங்கு ; துகள் . |
| உதிர்த்தல் | உதிரச் செய்தல் ; வீழ்த்துதல் ; பொடியாக்கல் ; உதறுதல் . |
| உதிர்தல் | கீழ்விழுதல் ; சிந்துதல் ; சொரிதல் ; பிதிர்தல் ; அழிதல் ; சாதல் ; குலைதல் . |
| உதிரக்கட்டு | இரத்தத்தை நிறுத்துகை ; பூப்புப்படாமை . |
| உதிரக்கல் | மாணிக்கவகை . |
| உதிரக்குடோரி | கருடன்கிழங்கு . |
| உதிரங்களைதல் | இரத்தம் வடிதல் ; இரத்தம் நீக்குதல் . |
| உதிரசூலை | கருப்ப நோய்வகை . |
| உதிரபந்தம் | மாதுளை . |
| உதிரம் | இரத்தம் . |
| உதிரமண்டலி | நச்சுயிரிவகை . |
| உதிரல் | உதிர்ந்த பூ . |
| உதிரன் | செவ்வாய் . |
| உதிரி | உதிர்ந்தது ; கதிரிலிருந்து உதிர்ந்த நெல் ; பெரியம்மை நோய் ; பிட்டு ; சிறுகீரை ; செவ்வாழை . |
| உதிரிக்குத்து | பெரியம்மையால் உண்டாகும் நோவு . |
| உதிரித்தழும்பு | அம்மைவடு . |
| உதீசம் | குறுவேர் . |
| உதீசி | வடக்கு . |
| உது | உஃது , சேய்மைக்கும் அண்மைக்கும் நடுவிலுள்ளதைக் குறிக்கும் ஒரு சுட்டுப்பெயர் ; முன்னிலையானிடமுள்ள பொருள் . |
| உதும்பரம் | அத்திமரம் ; எருக்கஞ்செடி ; செம்பு ; நெற்களம் ; வாயிற்படி ; செங்குட்ட நோய் . |
| உதூகலம் | உரல் . |
| உதை | அடி ; முட்டுக்கால் . |
| உதைகால் | தாங்கு ; முட்டுக்கால் ; உதைக்குங்கால் ; முட்டுக்கால் . |
| உதைகாலி | உதைக்கும் குணமுள்ள மாடு . |
| உதைகொடுத்தல் | உதைத்தல் ; முட்டுக்கொடுத்தல் ; ஊஞ்சலை ஆட்டிக்கொள்ளுதல் . |
| உதைசுவர் | முட்டுச்சுவர் , அணைசுவர் . |
| உதைத்தல் | காலாலெறிதல் ; தாக்கல் ; பொருட்படுத்தாமை ; செலுத்துதல் ; அடித்தல் ; மாறுபடுதல் ; நடுங்குதல் . |
| உதைப்பளவு | கைந்நொடிப் பொழுதளவு . |
| உதைப்பான் | தள்ளுகருவி . |
| உதைப்பு | உதைக்கை ; தாக்குகை ; அச்சம் ; திகில் . |
| உதைபு | கதவு ; புதவு . |
| உதைமானம் | முட்டு ; உதைகால் . |
| உதோள் | உவ்விடம் , மத்திமம் . |
| உதோளி | உவ்விடம் , மத்திமம் . |
| உந்த | உங்கேயுள்ள . |
| உந்தரம் | வழி ; எலி . |
| உந்தல் | உயர்ச்சி ; யாழ்நரம்பு தடவுகை . |
| உந்தி | கொப்பூழ் ; வயிறு ; நீர்ச்சுழி ; உயர்ச்சி ; யாற்றிடைக்குறை ; கடல் ; தேருருளை ; மகளிர் விளையாட்டுவகை ; யாழினுறுப்பு ; நீர் ; ஆன்கோட்டம் ; பரப்பு ; யாழ்ப் பத்தர் ; நடு ; ஆறு ; துணை ; பறப்பன . |
| உந்திச்சுழி | கொப்பூழ்ச்சுழி ; நீர்ச்சுழி . |
| உந்திடம் | உவ்விடம் , |
| உந்திநாளம் | கொப்பூழ்க் கொடி . |
| உந்திபறத்தல் | உந்தி விளையாட்டு ஆடுதல் , மகளிர் கூடிக் குதித்துப் பாடி விளையாடுதல் . |
| உந்திபூத்தோன் | உந்தியில் தாமரையுடையான் ; திருமால் ; பிரமன் . |
| உந்தியில் வந்தோன் | திருமாலின் கொப்பூழ்த் தாமரையில் தோன்றியவன் , பிரமன் . |
| உந்தியிலுதித்தோன் | திருமாலின் கொப்பூழ்த் தாமரையில் தோன்றியவன் , பிரமன் . |
| உந்து | பசுவையழைக்கும் ஒரு குறிப்புச் சொல் ; கச்சோலம் ; ஒரு விகுதி ; உம்மின் திரிபு ; ஏலக்காய்த்தோல் . |
| உதாரகுணம் | வள்ளன்மை ; பெருங்கொடைத்தன்மை . |
| உதாரணம் | எடுத்துக்காட்டு , மேற்கோள் ; எதிர்நியாயம் ; துணைக் காரணம் . |
| உதாரத்துவம் | கொடுக்குங் குணம் ; பெருங்கொடைத்தன்மை . |
| உதாரதை | உதாரத் தன்மை ; பெருங்கொடை , காண்க : உதாத்தம் . |
| உதாரம் | தருமம் , ஈகை , கொடை ; மேம்பாடு , பெருமை ; குறிப்பினால் ஒரு பொருள் சிறப்புப் படத் தோன்றுவதாகிய குணம் ; தாராளம் ; மேட்டிமை . |
| உதாரன் | கொடையாளி ; பேச்சுத்திறமை உள்ளவன் . |
| உதாரி | கொடையாளி ; பேச்சுத்திறமை உள்ளவன் . |
| உதாவணி | கண்டங்கத்தரிச்செடி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 155 | 156 | 157 | 158 | 159 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உதாரகுணம் முதல் - உந்து வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பிரமன், உவ்விடம், முட்டுக்கால், இரத்தம், தாமரையில், கொப்பூழ்த், திருமாலின், உள்ளவன், தோன்றியவன், கொடையாளி, குணம், உந்தியில், பெருங்கொடைத்தன்மை, பேச்சுத்திறமை, உந்தி, பொருள், நோய், உதிர்ந்த, காண்க, உதைகால், உதைத்தல், நீர்ச்சுழி, சொல், உயர்ச்சி, மத்திமம், மகளிர்

