தமிழ் - தமிழ் அகரமுதலி - உபசத்தி முதல் - உபநிடம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உபதாளம் | ஐந்து சிறுதாளங்கள் ; ஆதி தாளம் : பார்வதி லோசனம் , குடுக்கம் , சிங்கநந்தம் , திரிமாத்திரை . |
| உபதானம் | துணைக் காரணம் ; அடிப்படை ; கடமை ; தலையணை ; நோன்பு . |
| உபதி | சக்கரத்தின் ஆரம் ; அச்சம் ; வஞ்சனை . |
| உபதிருட்டன் | உடனிருந்து பார்ப்பவன் ; புரோகிதன் . |
| உபதேசகலை | ஆகமவளவைவகை மூன்றனுள் ஒன்று , மத தத்துவ போதனைமுறை . |
| உபதேசம் | கடவுளின் தன்மையைக் கூறுதல் , சமயபோதகம் , ஞான போதனை ; சமயாசார உபதேசம் : மந்திரோபதேசம் : நன்மை கூறல் ; புத்தி புகட்டல் , |
| உபதேசி | போதகன் , குரு . |
| உபதேசித்தல் | போதித்தல் ; மந்திரத்தை அறிவுறுத்தல் . |
| உபதேசியார் | உபபோதகர் . |
| உபதை | அமைச்சர் முதலியோரை அமர்த்துவதற்குமுன் அரசன் செய்யுஞ் சோதனை ; அறவுபதை , பொருளுபதை , இன்பவுபதை , அச்சவுபதை ; ஒருவன் மன இயல்பை ஆராய்ந்து தெளிதல் ; தணிக்கை ; ஈற்றயலெழுத்து ; பரிதானம் ; காணிக்கை . |
| உபநதி | பேராற்றில் வந்துவிழும் சிற்றாறு . |
| உபநயம் | அடைதல் ; அனுமான உறுப்புகள் ஐந்தனுள் ஒன்று ; கொண்டுவருதல் ; பூணூல் தரிக்கும் சடங்கு . |
| உபநயனம் | பூணூல் தரிக்கும் சடங்கு , பூணூல் கலியாணம் ; மூக்குக்கண்ணாடி ; வழிநடத்துதல் . |
| உபநாகம் | புண்ணுக்கிடும் மருந்து ; புண்கட்டிகளில் வைத்துக் கட்டும் மா முதலியன . |
| உபநாயம் | புண்ணுக்கிடும் மருந்து ; புண்கட்டிகளில் வைத்துக் கட்டும் மா முதலியன . |
| உபநிட்கிராமணம் | பிறந்த நான்காமாதம் பிள்ளையை முதன்முதல் வெளிக்கொண்டு செல்லும் சடங்கு . |
| உபநிடதம் | வேத நுட்பம் , வேதத்தின் ஞான காண்டம் ; வேதம் ; தருமம் ; மறைபொருள் . |
| உபநிடம் | வேத நுட்பம் , வேதத்தின் ஞான காண்டம் ; வேதம் ; தருமம் ; மறைபொருள் . |
| உபசத்தி | ஒன்றாந்தன்மை , ஐக்கியம் ; உதவி ; ஈகை ; ஊழியம் . |
| உபசந்தி | சந்தி வேளைக்குச் சற்று முந்தின காலம் . |
| உபசம்மாரம் | காண்க : உபசங்காரம் . |
| உபசமனம் | அமைதி . |
| உபசமித்தல் | உபசாந்தமடைதல் . |
| உபசயசரீரம் | பருவுடல் . |
| உபசர்க்கம் | காண்க : உபசருக்கம் ; நோய்வகை ; துன்பம் . |
| உபசரணை | உபசாரம் ; வழிபாடு . |
| உபசரித்தல் | வழிபாடு செய்தல் ; மரியாதை செய்தல் . |
| உபசருக்கம் | வடமொழி முதனிலையடை ; ஆரிய மொழிகளின் அடையுருபு , பெயர் வினைகளுக்கு முன்வரும் இடைச்சொல் . |
| உபசல்லியம் | ஊரின் அண்மை ; புலைச்சேரி , பறையர் சேரி . |
| உபசாகை | கிளையிலுள்ள கிளை , சிறு கிளை : உட்பிரிவு . |
| உபசாந்தம் | மனவமைதி ; தணிகை ; ஓய்வு ; அருள் . |
| உபசாந்தி | மனவமைதி ; தணிகை ; ஓய்வு ; அருள் . |
| உபசாபம் | வேறுபாடு ; துரோகம் ; ஒற்றுமையின்மை . |
| உபசாரக்கை | இரண்டு கைகளையுங் குவித்து மார்போடணைத்து உபசாரமாகக் காட்டும் இணைக்கைவகை . |
| உபசாரகன் | மரியாதை செய்வோன் . |
| உபசாரஞ் சொல்லுதல் | முகமன் கூறுதல் ; துக்கம் விசாரித்தல் . |
| உபசாரபத்திரம் | ஒருவரைப் போற்றிப் படித்துக் கொடுக்கும் பாராட்டு இதழ் . |
| உபசாரம் | மரியாதை ; புகழ்மொழி ; வாழ்த்து ; உபசார வழக்கு ; ஊழியம் ; வழிபாடு ; காண்க : உபசாரவழக்கு ; போற்றுகை ; உதவி ; சேவை ; காணிக்கை . |
| உபசாரம்கேட்டல் | துக்கம் வினாவல் . |
| உபசாரவசனம் | புகழ்மொழி . |
| உபசாரவழக்கு | ஒன்றன் தன்மையை மற்றொன்றன்மேல் ஏற்றிக் கூறுவது . |
| உபசாரன் | காண்க : உபசாரகன் . |
| உபசாரி | காண்க : உபசாரகன் . |
| உபசாரிகம் | காண்க : உபசாரவழக்கு . |
| உபசீவனம் | பிறரைக் சார்ந்து வாழ்கை ; வாழ்க்கைக்குரிய பொருள் . |
| உபசீவித்தல் | உயிர் பிழைத்தல் ; பிறரையோ பிறிதொன்றையோ சார்ந்திருத்தல் . |
| உபசுருதி | இரவிலே கேட்கும் வானொலி . |
| உபத்தம் | பிறப்புறுப்பு ; பெண்குறி . |
| உபத்தாயம் | உபாயம் ; தவறு ; துன்பம் . |
| உபத்தானம் | சந்தியாவந்தன முடிவில் செய்யும் மந்திரத் துதி . |
| உபத்திரம் | இடுக்கண் , துன்பம் , வேதனை ; கொடுமை ; தொந்தரவு ; வருத்தம் ; வலுக்கட்டாயம் . |
| உபத்திரவம் | இடுக்கண் , துன்பம் , வேதனை ; கொடுமை ; தொந்தரவு ; வருத்தம் ; வலுக்கட்டாயம் . |
| உபதாது | பொன் முதலிய உலோகங்களைப் போலப் தோற்றமளிக்கும் தாழ்ந்த ஏழு உலோகங்கள் : சுவர்ணமாட்சிகம் : தாரமாட்சிகம் , துத்தம் , காஞ்சியம் , ரீதி , சிந்தூரம் , சிலாசத்து . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 157 | 158 | 159 | 160 | 161 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உபசத்தி முதல் - உபநிடம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, துன்பம், உபசாரவழக்கு, உபசாரகன், சடங்கு, மரியாதை, பூணூல், வழிபாடு, உபசாரம், தணிகை, மனவமைதி, ஓய்வு, கிளை, செய்தல், புகழ்மொழி, தொந்தரவு, வருத்தம், வலுக்கட்டாயம், கொடுமை, வேதனை, துக்கம், இடுக்கண், அருள், ஒன்று, புண்கட்டிகளில், வைத்துக், கட்டும், மருந்து, புண்ணுக்கிடும், கூறுதல், காணிக்கை, தரிக்கும், முதலியன, நுட்பம், உதவி, ஊழியம், உபதேசம், மறைபொருள், தருமம், வேதத்தின், காண்டம், வேதம், உபசருக்கம்

