தமிழ் - தமிழ் அகரமுதலி - உந்துதல் முதல் - உபசங்காரம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உபகற்பம் | திருநீறு , காட்டுத்தீ முதலியவற்றால் வெந்த சாம்பலைக் கொண்டு முறைப்படி அமைத்த திருநீறு . |
| உபகாரகன் | உதவிசெய்வோன் . |
| உபகாரம் | ஈகை ; உதவி ; காணிக்கை ; மகிழ்ச்சி . |
| உபகிரகம் | பெருங்கோளைச் சுற்றியோடுஞ் சிறுகோள் ; சிறை . |
| உபகிரமணிகை | முகவுரை ; பாயிரம் . |
| உபகிரமம் | தொடக்கம் : முயற்சி செய்தல் ; ஆராய்ந்து தெளிதல் ; அணுகுதல் ; விக்கிரமம் . |
| உபகிருதம் | உதவி . |
| உபகிருதன் | உதவி செய்யப் பெற்றவன் ; தானாகவே ஒருவனிடம் தத்துப் புகுந்தவன் . |
| உபகிருதி | காண்க : உபகிருதம் . |
| உபகுஞ்சிகை | கருஞ்சீரகம் ; ஏலம் . |
| உபகுல்லம் | சுக்கு . |
| உபகுல்லியை | திப்பிலி ; அகழி ; கிளை வாய்க்கால் . |
| உபசங்காரம் | முடிவு ; அழிவு ; ஒடுக்கம் ; சுருக்கம் ; மீட்டுக்கொள்ளுதல் ; விலக்குதல் ; அத்திரத்தைத் தடுக்கும் மந்திரம் . |
| உந்துதல் | தள்ளுதல் ; வீசியெறிதல் ; அம்பு முதலியன செலுத்துதல் ; வீழவித்தல் ; யாழ் நரம்பு தெறித்தல் ; கடைதல் ; நகர்தல் ; ஒளிவீசல் ; பொருந்துதல் ; நீங்குதல் ; அனுப்புதல் . |
| உந்துரு | பெருச்சாளி ; எலி . |
| உந்தூழ் | பெருமூங்கில் , மலைமூங்கில் . |
| உந்தை | உம் தந்தை ; உம் அப்பன் . |
| உப்பக்கம் | உந்தப்பக்கம் ; புறப்பக்கம் ; முதுகு , பின்பக்கம் . |
| உப்பங்கழி | காயல் ; உப்பளம் . |
| உப்பங்காற்று | கடற்காற்று . |
| உப்பசம் | காண்க : உப்புசம் . |
| உப்பட்டி | அரிக்கட்டு . |
| உப்பர் | உப்பு அமைப்போர் , உமணர் , உப்பு வாணிகர் . |
| உப்பரம் | வயிற்றுப் பொருமல் . |
| உப்பரவர் | குளம் முதலியன அகழ்வோர் ; குறவரில் ஒரு வகுப்பார் . |
| உப்பரிகை | மேல்மாடம் ; மேல்மாடி . |
| உப்பல் | உப்புதல் ; ஊதிப்பருத்தல் . |
| உப்பளம் | உப்பு விளைநிலம் ; கழிநிலம் . |
| உப்பளவன் | உப்பு விளைப்போன் . |
| உப்பளறு | களிமண்ணும் மணலும் கலந்த களர்நிலம் . |
| உப்பறுகு | உவர்நிலத்திலுள்ள ஒருவகை அறுகு . |
| உப்பாணி | உப்புச் சுமப்பவன் , விளையாட்டில் தோல்வியடைந்து வென்றவனைச் சுமப்பவன் . |
| உப்பாரக்காரன் | சுண்ணாம்பு பூசும் வேலைக்காரன் . |
| உப்பால் | உப்பக்கம் ; மேலிடம் ; புறம்பு ; முதுகு . |
| உப்பிசம் | காண்க : உப்புசம் . |
| உப்பில்லாப்பேச்சு | பயனற்ற பேச்சு . |
| உப்பிலி | இண்டங்கொடி ; ஈர்கொல்லிக் கொடி ; காண்க : புலிதொடக்கி ; உப்பில்லாதது . |
| உப்பு | உவர்ப்பு ; உவர்ப்புள்ள பொருள் ; உவர்க்கடல் ; இனிமை ; பெண்கள் விளையாட்டு ; மணற்குவியல் ; அன்பு . |
| உப்பு | (வி) வீங்கு ; பொங்கு ; ஊது ; பொருமு . |
| உப்புக்கண்டம் | உப்புச் சேர்த்துக் காயவைத்த இறைச்சித் துண்டம் ; உலர்த்திய இறைச்சி . |
| உப்புக்கரித்தல் | உப்பு மிகுதல் . |
| உப்புக்காகிதம் | மரங்களை மெருகிடும் ஒருவகைத் தாள் . |
| உப்புக்கீரை | ஒருவகைக் கீரை . |
| உப்புக்குத்தி | பறவைவகை , ஒரு குருவி . |
| உப்புக்கொள்ளுதல் | ஒரு விளையாட்டுவகை . |
| உப்புக்கோடு | கிளித்தட்டு விளையாட்டு . |
| உப்புச்சீடை | ஒரு பலகாரம் . |
| உப்புச்சுமத்தல் | ஒருவகை விளையாட்டில் வென்றவனைத் தோற்றவன் முதுகில் தூக்கல் ; உப்புத் தூக்குகை . |
| உப்புசம் | வயிற்று வீக்கம் ; வயிற்றுப் பொருமல் ; வயிற்றில் வாயு நிரம்பல் ; நுரையீரல் நோய் . |
| உப்புத்திரி | மலங்கழிக்க ஏற்றுந் திரி ; முள் தைத்த இடத்தில் சுடுவதற்கு உப்பிட்டுப் பயன்படுத்தும் திரி . |
| உப்புதல் | பருத்தல் ; பொங்குதல் ; ஊதுதல் ; வீங்குதல் . |
| உப்புப்பால் | ஈன்றணிமையுள்ள தாயின் பால் . |
| உப்புப்பூத்தல் | உப்புப் பற்றுதல் ; உடம்பில் உப்புப் படர்தல் ; உப்பங்காற்றால் இற்றுப்போதல் . |
| உப்புமண் | உவர்மண் ; உவர்நிலம் . |
| உப்புமா | ஒருவகைச் சிற்றுண்டி ; உடம்பில் பூக்கும் உப்பு . |
| உப்புமாறுதல் | உப்பு விற்றல் ; வஞ்சித்தல் . |
| உப்புவாடி | உப்புக் கொட்டும் மேடை . |
| உப்பேறி | ஒருவகைக் கறி ; பொரியல்வகை . |
| உப | ஒரு வடமொழி முன்னொட்டு ; இரண்டு . |
| உபக்கிரமணம் | தொடக்கம் ; அணுகுகை ; முயலுகை . |
| உபகதை | கிளைக்கதை ; சிறிய கதை ; கட்டுக்கதை . |
| உபகமம் | ஏற்பு ; அணுகுகை . |
| உபகரணம் | துணைக்கருவி ; துணைப்பொருள் ; துணைக்காரணம் . |
| உபகரித்தல் | உதவுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 156 | 157 | 158 | 159 | 160 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உந்துதல் முதல் - உபசங்காரம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உப்பு, காண்க, உப்புசம், உதவி, விளையாட்டில், சுமப்பவன், உப்புச், விளையாட்டு, திரி, அணுகுகை, உடம்பில், உப்புப், ஒருவகை, ஒருவகைக், வயிற்றுப், முதலியன, உபகிருதம், தொடக்கம், உப்பக்கம், முதுகு, பொருமல், திருநீறு, உப்பளம், உப்புதல்

