முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » இருப்பிடம் முதல் - இரும்புச்சலாகை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - இருப்பிடம் முதல் - இரும்புச்சலாகை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இருபிறப்பாளன் | பார்ப்பனன் ; உபநயனத்திற்கு முன் ஒரு பிறப்பும் பின் ஒரு பிறப்புமாகவுள்ளவன் ; சந்திரன் ; சுக்கிரன் . |
| இருபிறப்பு | இரண்டு வகையான பிறப்பு ; பல் ; பார்ப்பனர் ; சந்திரன் ; பறவை . |
| இருபிறவி | இருசாதி சேர்ந்து பிறக்கும் உயிரினம் . |
| இருபுட்சன் | இடியேறு ; இந்திரன் ; துறக்கம் . |
| இருபுட்சி | இந்திரன் . |
| இருபுடைமெய்க்காட்டு | ஒன்றே இருவேறு வகையாகத் தோற்றுவது . |
| இருபுரியாதல் | மாறுபாடாதல் . |
| இருபுலன் | மலசலங்கழிநிலை . |
| இருபுறவசை | வசைபோன்ற வாழ்த்து . |
| இருபுறவாழ்த்து | வாழ்த்துப்போன்ற வசை . |
| இருபுனல் | கீழ்நீர் மேல்நீர்கள் . |
| இருபூ | இருபோகம் , ஆண்டுக்கு இருமுறை பெறும் விளைச்சல் . |
| இருபூலை | பூலா ; வெள்ளைப் பூலாஞ்சி . |
| இருபெயரொட்டு | பொதுவும் சிறப்புமாக வரும் இரு பெயர்கள் 'ஆகிய' என்னும் பண்புருபு இடையே தொக்குநிற்ப இணைந்து வருவது . |
| இருபேருரு | இரு வேறு வடிவம் ஒருங்கிணைந்து காண்பது ; குதிரை முகமும் ஆள் உடலுங்கொண்ட சூரன் ; நரசிங்கன் ; ஆண்டலைப்புள் ; மாதொருகூறன் . |
| இருபொருள் | கல்வியும் செல்வமும் ; வெவ்வேறு வகையான இரண்டு கருத்து . |
| இருபோகம் | இருமுறை விளைவு ; நிலமுடையோனுக்கும் குடிகளுக்கும் உரிய பங்கு . |
| இருபோது | காலை மாலைகள் . |
| இரும் | இருமல் ; பெரிய ; கரிய . |
| இரும்பலி | செடிவகைகளுள் ஒன்று . |
| இரும்பிலி | செடிவகைகளுள் ஒன்று . |
| இரும்பன் | அகழெலி . |
| இரும்பாலை | பாலை மரவகை ; இரும்புத்தொழிற்சாலை . |
| இரும்பினீர்மை | இழிந்தநிலை . |
| இரும்பு | கரும்பொன் ; ஆயுதம் ; பொன் ; செங்காந்தள் ; கிம்புரி ; கடிவாளம் . |
| இரும்புக்காய்வேளை | வேளைவகை . |
| இரும்புக்கொல்லன் | கருங்கொல்லன் . |
| இரும்புச்சலாகை | அறுவைச் சிகிச்சைக் கருவிவகை ; இருப்பு நாராசம் . |
| இருப்பிடம் | வாழும் இடம் ; இருக்கை ; பிருட்டம் . |
| இருப்பு | இருக்கை ; மலவாய் ; இருப்பிடம் ; குடியிருப்பு ; நிலை ; கையிருப்பு ; பொருண்முதல் . |
| இருப்புக்கச்சை | வீரர் அணியும் இருப்புடை . |
| இருப்புக்கட்டி | வரிவகை . |
| இருப்புக்கட்டை | சாவியின் தண்டு ; சுத்தியல் . |
| இருப்புக்கம்பை | வண்டி ஓட்டுபவனுக்கு வண்டியின்முன் அமைக்கப்பட்ட இருக்கை . |
| இருப்புக்காய்வேளை | இரும்புக்காய்வேளை என்னும் செடி . |
| இருப்புக்கிட்டம் | இரும்பு உருகிய கட்டி . |
| இருப்புக்கொல்லி | சிவனார்வேம்பு . |
| இருப்புக்கோல் | நாராசம் ; அறுவை மருத்துவனின் கருவியுள் ஒன்று . |
| இருப்புச்சட்டம் | காண்க : இருப்பணிச்சட்டம் . |
| இருப்புச்சலாகை | இரும்பினால் ஆன நீண்ட கோல் . |
| இருப்புச்சிட்டம் | காண்க : இருப்புக்கிட்டம் . |
| இருப்புச்சில் | சிறுவர் விளையாட்டுக் கருவி . |
| இருப்புச்சீரா | இரும்பினாலான சட்டை . |
| இருப்புச்சுவடு | இரும்பினாலான சட்டை . |
| இருப்புச்சுற்று | இரும்புப் பூண் . |
| இருப்புத்தாள் | இருப்புக்கோல் . |
| இருப்புத்திட்டம் | செலவு நீக்கி மீதியுள்ள தொகை . |
| இருப்புநகம் | வெற்றிலை கிள்ளும் கருவி . |
| இருப்புநாராசம் | ஓர் இரும்பு ஆயுதம் ; ஓலையில் கோக்கப்படும் இருப்புக்கோல் . |
| இருப்புநெஞ்சு | இரக்கமில்லாத நெஞ்சு , வன்மனம் . |
| இருப்புப்பத்திரம் | இரும்புத் தகடு . |
| இருப்புப்பாதை | இரயில் பாதை , தண்டவாளவழி . |
| இருப்புப்பாரை | குழி தோண்டுங் கருவி . |
| இருப்புப்பாளம் | இரும்புக்கட்டி . |
| இருப்புமணல் | இரும்பு கலந்த மண் . |
| இருப்புமுள் | தாறு ; யானை அல்லது குதிரையைக் குத்தும் கோல் . |
| இருப்புமுறி | செடிவகை . |
| இருப்புயிர் | நரகர் உயிர் . |
| இருப்புலக்கை | இரும்பாலான உலக்கை . |
| இருப்புலி | துவரை . |
| இருப்பூறல் | இரும்புக் கறை . |
| இருப்பூறற்பணம் | கலப்பு வெள்ளிநாணயம் . |
| இருப்பெழு | உழலை ; குறுக்காக இடும் இரும்புக் கம்பி . |
| இருப்பை | இலுப்பைமரம் . |
| இருப்பைப்பூச்சம்பா | நெல்வகை . |
| இருபது | இரண்டு பத்து . |
| இருபஃது | இரண்டு பத்து . |
| இருபன்னியம் | சேங்கொட்டை . |
| இருபால் | இருமை ; இம்மை மறுமை ; இரண்டு பக்கம் . |
| இருபாவிருபஃது | பிரபந்தவகை , வெண்பா அகவல் மாறிமாறி இருபது பாடல் அந்தாதியாய் வருவது ; மெய்கண்ட சாத்திரத்துள் ஒன்று . |
| இருபான் | இருபது . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 125 | 126 | 127 | 128 | 129 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இருப்பிடம் முதல் - இரும்புச்சலாகை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், இரண்டு, ஒன்று, இரும்பு, இருக்கை, இருப்புக்கோல், கருவி, இருபது, இருப்புக்கிட்டம், பத்து, காண்க, இரும்புக், இருப்பிடம், கோல், சட்டை, இரும்பினாலான, இருப்பு, இருமுறை, இருபோகம், இந்திரன், வகையான, என்னும், வருவது, சந்திரன், இரும்புக்காய்வேளை, ஆயுதம், செடிவகைகளுள், நாராசம்

