முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » இரும்புத்துப்பு முதல் - இருளன் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - இரும்புத்துப்பு முதல் - இருளன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இருமுற்றிரட்டை | ஒரு செய்யுளில் ஓரடி முற்றெதுகையாய் மற்றையடி மற்றொரு முற்றெதுகையாய் வருவது . |
| இருமுறி | இருப்புமுறி என்னும் செடி . |
| இருமை | பெருமை ; கருமை ; இருதன்மை ; இருபொருள் ; இம்மை மறுமைகள் . |
| இருலிங்கவட்டி | சாதிலிங்கம் . |
| இருவகை அறம் | இல்லறம் துறவறம் . |
| இருவகை ஏது | ஞாபகஏது காரகஏது . |
| இருவகைக் கூத்து | சாந்தி விநோதம் . |
| இருவகைத்தோற்றம் | இயங்கும்பொருள் இயங்காப் பொருள் , சரம் அசரம் . |
| இருவகைப்பொருவு | உறழ்பொருவு உவமைப் பொருவு . |
| இருவகைப்பொருள் | கல்விப்பொருள் செல்வப்பொருள் . |
| இருவணைக்கட்டை | வண்டியின் முகவணை . |
| இருவயிற்பற்று | அகப்பற்று புறப்பற்று . |
| இருவருந்தபுநிலை | எயிலின் அகத்தும் புறத்தும் நின்ற வேந்தரிருவரும் பொருது வீழ்ந்தமை கூறும் புறத்துறை . |
| இருவல் நொருவல் | இடிந்தும் இடியாதது ; நன்றாக மெல்லப்படாத உணவு . |
| இருவல் நொறுவல் | இடிந்தும் இடியாதது ; நன்றாக மெல்லப்படாத உணவு . |
| இருவாட்சி | கருமுகைச் செடி . |
| இருவாட்டித்தரை | மணலும் களியுமான நிலம் . |
| இருவாடி | காணக : இருவாட்சி . |
| இருவாம் | நாமிருவரும் . |
| இருவாய்க்குருவி | ஒருவகை மலைப்பறவை . |
| இருவாய்ச்சி | காண்க : இருவாட்சி . |
| இருவாரம் | மேல்வாரமும் குடிவாரமும் . |
| இருவி | தினை முதலியவற்றின் அரிதாள் ; வச்சநாபி என்னும் நச்சுப்பூண்டு . |
| இருவிக்காந்தம் | ஒரு நச்சு மூலிகை . |
| இருவில் | கரிய ஒளி . |
| இருவிள | பனையோலை ; வேணாட்டகத்து ஓர் ஊர் ; கருவூரினகத்து ஒரு சேரி . |
| இருவினை | நல்வினை தீவினைகள் . |
| இருவினையொப்பு | புண்ணிய பாவங்களை ஒரு தன்மையாகச் செய்துவிடுகை . |
| இருவீடு | ஒருவகை மரம் . |
| இருவுதல் | இருக்கச்செய்தல் . |
| இருவேம் | இருவராகிய நாம் . |
| இருவேரி | வெட்டிவேர் . |
| இருவேலி | வெட்டிவேர் . |
| இருவேல் | பர்மா நாட்டு மரவகை . |
| இருள் | அந்தகாரம் ; கறுப்பு ; மயக்கம் ; அறியாமை ; துனபம் ; நரகவிசேடம் ; பிறப்பு ; குற்றம் ; மரகதக்குற்றம் ; எட்டனுள் ஒன்றாகிய கருகல் ; மலம் ; யானை ; இருவேல் ; இருள்மரம் . |
| இருள்தல் | ஒளிமங்குதல் ; கறுப்பாதல் ; அறியாமை கொள்ளுதல் . |
| இருளுதல் | ஒளிமங்குதல் ; கறுப்பாதல் ; அறியாமை கொள்ளுதல் . |
| இருள்பாலை | ஏழிலைப் பாலை . |
| இருள்மரம் | ஒருவகைப் பெரிய மரம் . |
| இருள்வட்டம் | எழுநரகத்துள் ஒன்று . |
| இருள்வரை | கிரௌஞ்சமலை . |
| இருள்வலி | சூரியன் . |
| இருள்வாசி | காண்க : இருவாட்சி |
| இருள்வீடு | நூக்கமரம் ; சோதிவிருட்சம் . |
| இருள்வேல் | காண்க : இருவேல் . |
| இருளடித்தல் | இருளால் தீங்குண்டாதல் ; வெளிப்படாது மறைத்தல் . |
| இருளடைதல் | பொலிவின்றியிருத்தல் . |
| இருளல் | காண்க : இருள்(ளு)தல் . |
| இருளறை | ஆணவமலம் . |
| இருளன் | ஒருசார் வேடச் சாதியான் ; ஒரு சிறு தேவதை ; வரிக்கூத்துவகை . |
| இரும்புத்துப்பு | மண்டூரம் ; இருப்புக்கிட்டம் . |
| இரும்புத்துரு | மண்டூரம் ; இருப்புக்கிட்டம் . |
| இரும்புப்பெட்டி | உருக்கால் அமைந்த பேழை . |
| இரும்புப் பொடி | அரப்பொடி . |
| இரும்புயிர் | நரகருயிர் . |
| இரும்புலி | ஒருவகைச் செடி ; துவரை . |
| இரும்புள் | மகன்றில் பறவை . |
| இரும்புளி | மரவகை . |
| இரும்பை | காண்க : இருப்பை ; குடம் ; பாம்பு . |
| இரும்பொறை | மிகுந்த பொறுமை ; சேரர் பட்டப் பெயர்களுள் ஒன்று . |
| இருமடங்கு | இரட்டித்த அளவு . |
| இருமடி | இருமடங்கு ; இருவேறு முறையில் மாறிவருகை . |
| இருமடியாகுபெயர் | ஆகுபெயர்வகை ; 'கார்' என்னும் கருமையின் பெயர் முதலில் மேகத்தையும் , பின் அம் மேகம் மழை பொழியும் கார் காலத்தையும் உணர்த்துதல் போல்வது . |
| இருமடியேவல் | ஈரேவல் ; பிறவினையின்மேற் பிறவினை ; 'கற்பிப்பி ' என்றாற்போல வருவன . |
| இருமரபு | தாய்வழி தந்தை வழிகள் . |
| இருமருந்து | சோறும் தண்ணீரும் . |
| இருமல் | கக்கல் ; காசம் ; ஆட்டு நோய்வகை . |
| இருமனப்பெண்டிர் | பரத்தையர் . |
| இருமனம் | வஞ்சகம் ; துணிபின்மை . |
| இருமா | பத்தில் ஒரு பங்கு . |
| இருமாவரை | அரைக்கால் , எட்டில் ஒரு பங்கு . |
| இருமான் | எலிவகை . |
| இருமிமலைத்தகி | பூனைக்கண் குங்கிலியம் . |
| இருமு | இருமல் . |
| இருமுதல் | கக்குதல் |
| இருமுதுகுரவர் | பெற்றோர் . |
| இருமுதுமக்கள | பெற்றோர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 126 | 127 | 128 | 129 | 130 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரும்புத்துப்பு முதல் - இருளன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, இருவாட்சி, அறியாமை, இருவேல், செடி, என்னும், கொள்ளுதல், ஒன்று, கறுப்பாதல், இருள்மரம், ஒளிமங்குதல், இருப்புக்கிட்டம், பங்கு, பெற்றோர், இருமல், கார், இருமடங்கு, மண்டூரம், இருள், மெல்லப்படாத, உணவு, நன்றாக, இடியாதது, இடிந்தும், இருவகை, ஒருவகை, மரவகை, முற்றெதுகையாய், வெட்டிவேர், மரம், இருவல்

