தமிழ் - தமிழ் அகரமுதலி - இருளி முதல் - இல்லகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இல்பொருள் | அசத்து ; இல்லாத பொருள் . |
| இல்பொருள் உவமை | இல்லாத ஒன்றனைக் கற்பித்துக்காட்டும் உவமை , அபூத உவமை . |
| இல்லக்கிழத்தி | மனைவி . |
| இல்லகம் | வீடு . |
| இரேகி | ஒன்றுபடு ; நற்பேறுடையவன்(ள்) ; கீழ்மகன்(ள்) . |
| இரேகித்தல் | ஒன்றுபடுதல் ; எழுதுதல் ; சேருதல் ; பழகுதல் . |
| இரேகுத்தி | ஒரு பண்வகை . |
| இரேகை | வரி ; கைகால் ; முகம் முதலியவற்றிலுள்ள வரை ; வரை ; எழுத்து ; சந்திரகலை ; அரசிறை ; தராசு , படி முதலியவற்றின் அளவு கோடு ; இடையறா ஒழுங்கு ; வஞ்சம் ; சித்திரம் . |
| இரேசககுணா | கடுகு . |
| இரேசகம் | பிராணாயாமம் ; காற்றை மூக்கால் புறத்தே கழிக்கை ; பேதிமருந்து . |
| இரேசகி | கடுக்காய் ; சீந்தில் . |
| இரேசகித்தல் | மூச்சுக் காற்றை வெளிவிடுதல் . |
| இரேசம் | இதள் , சூதம் , பாதரசம் . |
| இரேசன் | வெள்ளைப்பூண்டு ; அரசன் ; வருணன் ; திருமால் . |
| இரேசனம் | விரேசனம் ; குறைத்தல் ; மூக்கின் ஒரு தொளையிலிருந்து காற்றை வெளிவிடுதல் ; வெறுமையாக்கல் . |
| இரேசனி | சிவதை ; ஞாழல் ; நேர்வாளவித்து ; மனோசிலை என்னும் நஞ்சுவகை . |
| இரேசித்தல் | மூச்சை வெளியே விடுகை . |
| இரேசிதம் | குதிரை நடையுள் ஒன்று ; குதிரை வட்டமாய் ஓடல் ; நாட்டியவகை . |
| இரேசுதல் | செரியாமை . |
| இரேணு | துகள் ; பூந்துகள் ; பற்பாடகப் புல் . |
| இரேணுகை | காட்டுமிளகு ; தவிடு ; தக்கோலம் ; பரசுராமன் தாய் . |
| இரேதசு | விந்து , சுக்கிலம் . |
| இரேபன் | கொடியன் ; நிந்திக்கத்தக்கவன் |
| இரேயம் | காய்ச்சி வடித்த சாராயம் ; கள் . |
| இரேவடம் | சூறைக்காற்று ; வலம்புரிச் சங்கு ; மூங்கில் . |
| இரேவதி | ஒரு நட்சத்திரம் ; பலராமன் மனைவி . |
| இரேவற்சின்னி | நாட்டு மஞ்சட் சீனக்கிழங்கு ; மரவகை . |
| இரேவு | ஆயத்துறை ; இறங்குதுறை . |
| இரேவை | நருமதை ஆறு ; அவுரி . |
| இரை | ஒலி ; பறவை , விலங்கு முதலியவற்றின் உணவு ; உண்ட உணவு ; நாக்குப்பூச்சி ; பூமி ; நீர் ; கள் ; வாக்கு . |
| இரைக்குடல் | இரைப்பை . |
| இரைக்குழல் | உணவு செல்லுங்குழல் . |
| இரைகொள்ளி | இரையொதுக்கும் பறவையின் மிடறு ; பெருந்தீனி தின்போன்(ள்) . |
| இரைச்சல் | ஆரவாரம் , ஒலி . |
| இரைசல் | மாணிக்கக் குற்றவகை ; சுரசுரப்பு . |
| இரைத்தல் | ஒலித்தல் ; சீறுதல் ; மூச்சுவாங்குதல் ; வீங்குதல் . |
| இரைத்து | இரண்டு ; புலிதொடக்கி . |
| இரைதல் | ஒலித்தல் ; கூச்சலிடுதல் . |
| இரைதேர்தல் | உணவு தேடுதல் . |
| இரைதேறுதல் | உணவு செரியாமல் தங்குதல் . |
| இரைப்பற்று | செரியாத உணவு . |
| இரைப்பு | இரைச்சல் ; மூச்சு வாங்குகை ; இரைப்புநோய் ; மோகம் ; கரப்பான்பூச்சி . |
| இரைப்புமாந்தம் | மாந்தவகை . |
| இரைப்பூச்சி | நாக்குப்பூச்சி |
| இரைப்பெட்டி | பறவை இரையொதுக்கும் மிடற்றுப்பை ; பிச்சை வாங்கும் பெட்டி . |
| இரைப்பெலி | இழுப்புண்டாக்கும் எலி . |
| இரைப்பை | இரைக்குடல் . |
| இரைமீட்டல் | அசைபோடுதல் . |
| இரையெடுத்தல் | பறவை , பாம்பு முதலியன உணவுகொள்ளுதல் ; உணவு தின்னுதல் ; அசைபோடுதல் . |
| இரௌத்தன் | காணக : இராவுத்தன் . |
| இரௌத்திரம் | பெருஞ்சினம் ; ஒன்பான் சுவையுள் ஒன்று ; பகலிரவுகளுக்குத் தனித்தனியே உரிய பதினைந்து முழுத்தங்களுள் முதலாவது . |
| இரௌத்திரி | அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்து நாலாம் ஆண்டு ; ஒரு சிவசித்தி . |
| இரௌரவம் | ஒரு நரகம் ; சிவாகமத்துள் ஒன்று . |
| இல் | இடம் ; வீடு ; இல்லறம் ; மனைவி ; மருதமுல்லை நிலங்களின் தலைவியர் ; குடி ; இராசி ; தேற்றாங்கொட்டை ; இன்மை ; சாவு ; எதிர்மறை இடைநிலை ; ஐந்தாம் வேற்றுமை உருபு ; ஏழாம் வேற்றுமை உருபு . |
| இருளி | பன்றி ; கருஞ்சீரகம் ; இருசி , பூப்படையும் தன்மையில்லாப் பெண் ; நாணம் . |
| இருளுலகம் | நரகம் . |
| இருளுவா | அமாவாசை . |
| இருளை | நாணம் . |
| இருளோவியகரை | முத்தி . |
| இரேக்கு | தங்கத்தாள் ; பூவிதழ் ; ஒருவகைச் சல்லா . |
| இரேகம் | அச்சம் ; ஐயம் ; தவளை ; உடல் ; வயிற்றுக்கழிச்சல் . |
| இரேகழி | காண்க : இடைகழி . |
| இரேகாம்சம் | பூமியைத் தென்வடலாக 360 சமபங்குகளாய்ப் பிரிக்கப்பட்டவற்றுள் ஒரு பாகம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 127 | 128 | 129 | 130 | 131 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இருளி முதல் - இல்லகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உணவு, பறவை, காற்றை, ஒன்று, மனைவி, உவமை, அசைபோடுதல், இரைச்சல், ஒலித்தல், வேற்றுமை, நாணம், உருபு, இரையொதுக்கும், நரகம், இல்பொருள், வெளிவிடுதல், முதலியவற்றின், வீடு, குதிரை, இல்லாத, இரைக்குடல், நாக்குப்பூச்சி, இரைப்பை

