தமிழ் - தமிழ் அகரமுதலி - இருத்தல் முதல் - இருப்பாணி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இருந்தும் | ஆகவும் . |
| இருந்தேத்துவார் | அரசனை உட்கார்ந்தே புகழ்வார் , மாகதர் . |
| இருந்தை | கரி . |
| இருநடுவாதல் | இடைமுரிதல் . |
| இருநா | பிளவுபட்ட நாக்கையுடையது ; உடும்பு ; பாம்பு . |
| இருநிதி | சங்கநிதி பதுமநிதி . |
| இருநிதிக்கிழவன் | சங்கநிதி பதுமநிதிக்கு உரியவன் குபேரன் . |
| இருநிதிக்கோன் | சங்கநிதி பதுமநிதிக்கு உரியவன் குபேரன் . |
| இருநியமம் | இருவேறு கடைகள் ; அல்லங்காடி நாளங்காடி . |
| இருநிலம் | பெரிய பூமி . |
| இருநிறமணிக்கல் | இரத்தினவகை . |
| இருநினைவு | இரண்டுபட்ட எண்ணம் . |
| இருநீர் | பெருநீர்ப்பரப்பு , கடல் . |
| இருப்பணிச்சட்டம் | வண்டியோட்டுவோன் இருத்தற்குரிய முகப்புச் சட்டம் . |
| இருப்பவல் | ஒரு மருந்துப் பூண்டு . |
| இருப்பன | நிலைத்திணைப் பொருள்கள் . |
| இருப்பாணி | இரும்பினால் செய்த ஆணி . |
| இருத்தல் | உளதாதல் ; நிலைபெறுதல் ; உட்காருதல் ; உள்ளிறங்குதல் ; உயிர் வாழ்தல் ; அணியமாயிருத்தல் ; உத்தேசித்தல் ; ஒரு துணைவினை ; முல்லை உரிப்பொருள் . |
| இருத்தி | சித்தி ; வட்டி . |
| இருத்திப்பேசுதல் | அழுத்திச் சொல்லுதல் . |
| இருத்திப்போடுதல் | நிலைக்கச்செய்தல் ; அசையாமல் செய்தல் . |
| இருத்தினன் | இருத்துவிக்கு ; யாக புரோகிதன் , வேள்வி செய்து வைப்பவன் . |
| இருத்து | வயிரக்குற்றங்களுள் ஒன்று ; நிலையான பொருள் ; அமுக்குகை . |
| இருத்துதல் | உட்காரச் செய்தல் ; தாமதிக்கச்செய்தல் ; அழுத்துதல் ; அடித்து உட்செலுத்துதல் ; நிலைபெறச் செய்தல் ; கீழிறக்குதல் . |
| இருத்துவிக்கு | காண்க : இருத்தினன் . |
| இருத்தை | சேங்கொட்டை ; சதுர்த்தி , நவமி , சதுர்த்தசி எனப்படும் நான்கு , ஒன்பது , பதினான்காம் பக்கங்கள் ; இருபத்து நான்கு நிமிடங் கொண்ட ஒரு நாழிகை ; நாழிகை வட்டில் . |
| இருதம் | காண்க : உஞ்சவிருத்தி ; நீர் ; மெய்ம்மை . |
| இருதயகமலம் | உள்ளத்தாமரை . |
| இருதயத்துடிப்பு | மார்பு படபடவென்று அடித்துக்கொள்ளுகை . |
| இருதயம் | இதயம் ; மனம் ; நேசத்துக்கு உறைவிடமான இடம் ; கருத்து ; நடு . |
| இருதலை | இருமுனை . |
| இருதலைக்கபடம் | விலாங்குமீன் . |
| இருதலைக்கொள்ளி | இரு முனையிலும் தீயுள்ளகட்டை ; எப்பக்கத்தும் துன்பஞ் செய்வது . |
| இருதலை ஞாங்கர் | இருதலையும் கூருள்ள முருகன் வேல் . |
| இருதலைநோய் | எழுஞாயிறு என்னும் நோய் . |
| இருதலைப் பகரங்கள் | எழுத்துகளை உள்ளடக்கி நிற்கும்[ ] என்னும் குறியீடுகள் . |
| இருதலைப்பாம்பு | இருதலை மணியன் , மண்ணு(ணி)ளிப் பாம்பு . |
| இருதலைப்புடையன் | இருதலை மணியன் , மண்ணு(ணி)ளிப் பாம்பு . |
| இருதலைப்புள் | இரண்டு தலைகளுள்ள பறவை . |
| இருதலைமணியம் | நண்பன்போல் நடித்து இருவரிடையே கலகம் விளைவிக்கும் தொழில் |
| இருதலைமணியன் | பாம்பில் ஒருவகை ; கோள்சொல்லுவோன் . |
| இருதலை மாணிக்கம் | ஒரு மந்திரம் ; முத்தி பஞ்சாட்சரம் . |
| இருதலைமூரி | காண்க : இருதலைப்பாம்பு . |
| இருதலைவிரியன் | பாம்புவகை . |
| இருதாரைக் கத்தி | இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி . |
| இருதிணை | உயர்திணை அஃறிணை ; இயங்குதிணை நிலைத்திணை . |
| இருது | ருது ; இரண்டு மாத பருவம் ; மகளிர் பூப்பு ; முதற் பூப்பு ; தக்க காலம் ; கடவுளின் முத்தொழில் ; பிரபை . |
| இருதுகாலம் | மாதவிடாய்க் காலம் ; கரித்தரிக்கும் காலம் . |
| இருதுசங்கமணம் | பூப்புற்ற நாளில் முதன் முதலாகத் தலைவன் தலைவியரைக் கூட்டுதற்குச் செய்யுஞ் சடங்கு . |
| இருதுசந்தி | இரண்டு பருவங்கள் சந்திக்கும் காலம் . |
| இருதுசாந்தி | பூப்புற்ற பெண்ணுக்குத் தீங்கு நேரிடாதபடி செய்யும் சடங்கு ; சோபனகலியாணம் ; சாந்திக் கலியாணம் . |
| இருதுநுகர்பு | பருவங்கட்குரிய அனுபவம் . |
| இருதுமதி | பூப்படைந்த பெண் , கருத்தரித்தற்குரிய நிலையிலிருப்பவள் . |
| இருதுவலி | இருதுகாலகுன்மம் என்னும் நோய் . |
| இருதுவாதல் | பெண் பூப்படைதல் . |
| இருந்த திருக்கோலம் | திருமாலின் வீற்றிருக்கும் இருப்பு . |
| இருந்ததேகுடியாக | எல்லாருமாக . |
| இருந்தாற்போல் | திடீரென்று . |
| இருந்தில் | காண்க : இருந்தை . |
| இருந்து | காண்க : இருந்தை ; ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு . |
| இருந்துபோதல் | செயலறுதல் ; கீழே அழுந்துதல் ; விலைபோகாது தங்குதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 124 | 125 | 126 | 127 | 128 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இருத்தல் முதல் - இருப்பாணி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, இருதலை, காலம், இருந்தை, சங்கநிதி, இரண்டு, பாம்பு, என்னும், செய்தல், பூப்பு, கத்தி, உரியவன், பதுமநிதிக்கு, ளிப், சடங்கு, பூப்புற்ற, பெண், மணியன், நாழிகை, நான்கு, இருத்தினன், குபேரன், நோய், இருத்துவிக்கு, இருதலைப்பாம்பு, மண்ணு

