முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » இராவுத்தாங்கம் முதல் - இருணிலம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - இராவுத்தாங்கம் முதல் - இருணிலம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இரிபு | அச்சம் ; ஓடுதல் ; தோல்வி ; பகை ; பகைவன் ; வெறுப்பு . |
| இரிபேரம் | வெட்டிவேர் . |
| இரிமான் | எலிவகை . |
| இரியல் | அச்சத்தால் நிலைகெடுகை ; விட்டுப் போதல் ; விரைந்து செல்கை ; அழுகை . |
| இரியல்போக்குதல் | சாய்ந்துகொடுத்தல் |
| இரியல்போதல் | தோற்றோடுதல் . |
| இரீதி | பித்தளை ; இயற்கைக் குணம் ; இரும்புக்கறை ; எல்லை ; கிட்டம் ; நாட்டு வழக்கம் ; நீர் பொசிந்தொழுகல் ; பாரம்பரியமான வழக்கம் ; பித்தளைப் பஸ்பம் . |
| இரு | பெரிய ; கரிய ; இரண்டு . |
| இருக்கணை | சித்திரவேலைக்குதவும் மரவகை . |
| இருக்கம் | நட்சத்திரம் கரடி ; இராசி . |
| இருக்கமாலி | 766 முழ அகலமும் உயரமும் உள்ளதாய் 766 சிகரங்களோடு 96 மேனிலைக்கட்டுகள் கொண்ட கோயில் . |
| இருக்கன் | இருக்குவேதமுணர்ந்தவன் ; பிரமன் . |
| இருக்காழி | இரண்டு விதைகளையுடைய காய் . |
| இருக்கு | வேதமந்திரம் ; இருக்குவேதம் . |
| இருக்குக்குறள் | சிறிய பாவகை . |
| இருக்குகை | இருத்தல் . |
| இருக்குதல் | இருத்தல் . |
| இருக்குவேதம் | முதல் வேதம் |
| இருக்கை | உட்கார்ந்திருக்கை ; ஆசனம் ; இருப்பிடம் ; குடியிருப்பு ; கோள்கள் இருக்கும் இராசி ; ஊர் ; கோயில் ; அரசர் போர்புரியக்காலம் கருதியிருக்கும் இருப்பு . |
| இருகண் | ஊனக்கண் ஞானக்கண் . |
| இருகரையன் | இரண்டு நோக்குள்ளவன் . |
| இருகால் | அரை ; இருமுறை ; இரண்டு பாதம் , கவறாட்டத்தில் குறித்த ஓர் எண் . |
| இருகுரங்கின்கை | முசுமுசுக்கை . |
| இருகுறள் நேரிசைவெண்பா | இரண்டு குறட்பாக்களைக் கொண்ட நேரிசைவெண்பாவகை . |
| இருகை | இரண்டு கைகள் ; இருபக்கம் . |
| இருகோட்டறுவை | முன்னும் பின்னும் தொங்கலாக விடும் துகில் . |
| இருங்கரம் | பதக்கு . |
| இருசகம் | மாதுளை . |
| இருசாதி | கலப்புச் சாதி . |
| இருசால் | தண்டற்பணம் செலுத்துகை ; கருவூலத்துக்கு அனுப்பும் பணம் . |
| இருசி | பூப்படையும் தன்மையில்லாப் பெண் ; ஒரு பெண்பிசாசு . |
| இருசீர்ப்பாணி | இரட்டைத் தாளம் . |
| இருசு | நேர்மை ; வண்டியச்சு ; மூங்கில் . |
| இருசுகந்தபூண்டு | மருக்கொழுந்து . |
| இருசுடர் | சந்திரசூரியர் . |
| இருசுழி | இரட்டைச்சுழி . |
| இருஞ்சிறை | காவல் ; மதில் ; நரகம் . |
| இருட்கண்டம் | கழுத்தணிவகை . |
| இருட்கண்டர் | சிவபெருமான் . |
| இருட்சரன் | இருட்டில் திரிவோன் ; இராக்கதன் . |
| இருட்சி | இருள் ; இருட்டு ; மயக்கம் . |
| இருட்டு | இருள் ; அறியாமை . |
| இருட்டுதல் | இருளடைதல் ; மந்தாரமிடுதல் . |
| இருட்பகை | சூரியன் . |
| இருட்பகைவன் | சூரியன் . |
| இருட்படலம் | இருளின் தொகுதி . |
| இருட்பிழம்பு | இருளின் தொகுதி . |
| இருட்பூ | ஒருவகை மரம் . |
| இருடி | ஆந்தை ; முனிவன் வேதம் . |
| இருடிகம் | இந்திரியம் . |
| இருடீகம் | இந்திரியம் . |
| இருடிகேசன் | திருமால் . |
| இருடீகேசன் | திருமால் . |
| இருண்டி | சண்பகம் . |
| இருண்மதி | தேய்பிறைச் சந்திரன் ; அமாவாசை . |
| இருண்மலம் | ஆணவமலம் |
| இருண்மை | இருளுடைமை ; இருண்டிருக்கும் தன்மை . |
| இருணபாதகன் | கடன் தீர்க்காமல் மோசம் செய்பவன் . |
| இருணம் | உவர்நிலம் ; கடன் ; கழிக்கப்படும் எண் ; கோட்டை ; நிலம் ; நீர் . |
| இருணாள் | இருள் நாள் ; தேய்பிறைப் பக்கத்து நாள் . |
| இருணி | பன்றி . |
| இருணிலம் | நரகம் . |
| இராவுத்தாங்கம் | ஒருவகைக் கொண்டாட்டம் . |
| இராவுதல் | அராவுதல் . |
| இராவைக்கு | காண்க : இரவைக்கு . |
| இராவோன் | சந்திரன் . |
| இரிக்கி | பெருங்கொடிவகை . |
| இரிகம் | இதயம் , மனம் . |
| இரிசல் | பிளவு ; மனமுறிவு . |
| இரிசால் | காண்க : இருசால் |
| இரிசியா | பூனைக்காலி . |
| இரிஞ்சி | மகிழ் . |
| இரிஞன் | பகைவன் . |
| இரிட்டம் | நன்மை ; வாள் ; தீமை ; பாவம் . |
| இரிணம் | உவர்நிலம் . |
| இரித்தல் | தோற்றோடச் செய்தல் ; கெடுத்தல் ; ஓட்டுதல் . |
| இரித்தை | சதுர்த்தி , நவமி , சதுர்த்தசி என்னும் திதிகள் ; நாழிகை . |
| இரிதல் | கெடுதல் ; ஓடுதல் ; விலகுதல் ; வடிதல் ; அஞ்சுதல் . |
| இரிப்பு | அச்சுறுத்தல் ; ஓட்டுதல் ; தோல்வியுறச்செய்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 123 | 124 | 125 | 126 | 127 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராவுத்தாங்கம் முதல் - இருணிலம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், இரண்டு, இருள், தொகுதி, இந்திரியம், இருளின், சூரியன், திருமால், கடன், காண்க, ஓட்டுதல், நாள், உவர்நிலம், இருட்டு, சந்திரன், நரகம், இராசி, நீர், வழக்கம், பகைவன், கொண்ட, கோயில், இருசால், வேதம், இருத்தல், இருக்குவேதம், ஓடுதல்

