தமிழ் - தமிழ் அகரமுதலி - இராப்பாடி முதல் - இராவுத்தன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இராமராச்சியம் | இராமனுடைய அரசாங்கம் போன்ற சிறந்த அரசாங்கம் ; நல்லரசாட்சி . |
| இராமலிங்கம் | இராமனால் வழிபடப்பட்ட இராமேச்சரத்துச் சிவபிரான் ; ஆறு படி கொண்ட மரக்கால் . |
| இராமவாசகம் | தவறாத வாக்கு . |
| இராமன் | சநதிரன் ; பரசுராமன் ; தசரதராமன் ; பலராமன் . |
| இராமன்சம்பா | சம்பாவகை . |
| இராமாயணம் | இதிகாசங்களுள் ஒன்று ; திருமால் அவதாரமான இராமனது வரலாற்றைக் கூறும் நூல் . |
| இராமாலை | கருக்கல் நேரம் ; இருளடைந்த மாலை நேரம் . |
| இராமாவதாரம் | தசரத ராமனாக அவதரித்த திருமால் பிறப்பு ; கம்பராமாயணம் . |
| இராமாறு | இராத்தோறும் . |
| இராமானம் | தினந்தோறும் உள்ள இரவின் அளவு ; இரவு . |
| இராமானுசகூடம் | வைணவ வழிப்போக்கர்கள் தங்கும் சாவடி . |
| இராமானுச தரிசனம் | விசிஷ்டாத்துவைதம் , இராமானுசரால் நிறுவப்பட்ட தத்துவம் . |
| இராமானுசம் | வைணவர் பயன்படுத்தும் ஒருவகைச் செப்புப் பாத்திரம் . |
| இராமானுசீயர் | இராமனுசர் மதத்தைப் பின்பற்றுவோர் , ஸ்ரீவைணவர் . |
| இராமிலன் | கணவன் ; மன்மதன் . |
| இராமேசுரம் வேர் | சாயவேர் . |
| இராமேசுவரம் | இராமனால் நிறுவப்பட்ட ஒரு சிவத்தலம் . |
| இராமை | மன்மதநூல் கற்றவள் ; சிறுவழுதலை . |
| இராயசக்காரன் | எழுத்து வேலைக்காரன் ; எழுத்தன் . |
| இராயசம் | எழுத்து வேலை ; எழுத்து வேலைக்காரன் ; ஆணைப் பத்திரம் . |
| இராயணி | அரசி . |
| இராயர் | விசயநகர அரசர் பட்டப்பெயர் , மகாராட்டிர மாத்துவப் பிராமணர் பட்டப்பெயர் . |
| இராயன் | அரசன் ; பழைய நாணயவகை . |
| இராயிரம் | இராண்டாயிரம் . |
| இராவடம் | அசோகு ; அராவுந்தொழில் . |
| இராவடி | ஏலம் ; பேரேலம் . |
| இராவண சன்னியாசி | தவ வடிவிலிருந்து அவச்செயல் செய்பவன் ; மோசடிக்காரன் . |
| இராவணம் | விளக்கு ; அழுகை . |
| இராவணன் | கடவுள் ; இலங்கையை ஆண்ட மன்னன் |
| இராவணன் புல் | கடற்கரையில் உள்ள ஒருவகைக் கூரிய புல் . |
| இராவணன் மீசை | கடற்கரையில் உள்ள ஒருவகைக் கூரிய புல் . |
| இராவணன் மோவாய்ப்புல் | கடற்கரையில் உள்ள ஒருவகைக் கூரிய புல் . |
| இராவணாகாரம் | பயங்கர வடிவம் . |
| இராவணாசுரம் | வீணைவகை . |
| இராவணாத்தம் | ஒருவகைச் சிறு வீணை . |
| இராவணி | இராவணன் மகனான இந்திரசித்து . |
| இராவதம் | சூரியன் குதிரை ; மேகலோகம் . |
| இராவதி | ஒரு கொடி ; ஓர் ஆறு ; யமபுரம் . |
| இராவிரேகு | தலையணிகளுள் ஒன்று ; அரசிலைச் சுட்டி ; அரைமூடி . |
| இராவுத்தராயன் | குதிரைச் சேவகரின் தலைவன் . |
| இராவுத்தன் | குதிரை வீரன் ; தமிழ் முகம்மதியருள் ஒரு பிரிவினரின் பட்டப்பெயர் . |
| இராப்பாடி | விடியுமுன் இரவில் வீட்டுக்கு வீடுவந்து பாடுபவன் . |
| இராப்பாடிக்குருவி | இரவில் பாடும் குருவிவகை . |
| இராப்பாலை | மரவகை . |
| இராப்பிச்சை | சந்திப்பிச்சை ; முன்னிரவில் வரும் பிச்சைக்காரன் |
| இராப்பிரமாணம் | கோளின் மறைவிலிருந்து உதயம் வரையுள்ள பொழுதின் அளவு . |
| இராப்பூ | இரவில் மலரும் மலர்கள் ; ஆம்பல் முதலியன . |
| இராப்போசனம் | இராச் சாப்பாடு ; கிறித்தவசபைச் சடங்குகளுள் ஒன்று . |
| இராமக்கன் | சிச்சிலுப்பை வகை . |
| இராமகன் | சிச்சிலுப்பை வகை . |
| இராமக்கிரி | குறிஞ்சிப் பண்வகை . |
| இராமக்கோவை | கற்கோவை என்னும் கொடிவகை . |
| இராமக்கோழி | நீர்க்கோழி . |
| இராமகவி | ஒரு பண் . |
| இராமசீத்தா | மரவகை . |
| இராமசேது | இராமர் அணை . |
| இராமடங்கா | ஒருவகைப் பொன் நாணயம் |
| இராமடம் | பெருங்காயம் . |
| இராமதுளசி | துளசிவகை . |
| இராமதூதன் | அனுமன் . |
| இராமநவமி | சித்திரை மாதத்து வளர்பிறையில் வரும் நவமி திதி ; இராமன் பிறந்த நாள் . |
| இராமநாதன் | இராமமேச்சரத்தில் இராமனால் வழிபடப்பட்ட லிங்கம் . |
| இராமநாதன்சம்பா | சம்பா நெல்வகை . |
| இராமப்பிரியா | ஒரு பண் . |
| இராமபாணம் | இராமர் அம்பு ; ஏட்டுச் சுவடிகளைத் துளைத்துக் கெடுக்கும் ஒரு பூச்சி ; பாச்சைவகை ; மல்லிகைவகை ; ஒருவகை மருந்து . |
| இராமம் | அழகு ; விரும்பத்தக்கது ; வெண்மான் ; வெண்மை ; கருமை . |
| இராமமுழியன் | கடல்மீன்வகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 122 | 123 | 124 | 125 | 126 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராப்பாடி முதல் - இராவுத்தன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், இராவணன், புல், உள்ள, பட்டப்பெயர், கூரிய, எழுத்து, இரவில், கடற்கரையில், இராமனால், ஒருவகைக், ஒன்று, இராமர், குதிரை, வரும், மரவகை, சிச்சிலுப்பை, வேலைக்காரன், திருமால், இராமன், வழிபடப்பட்ட, நேரம், அளவு, ஒருவகைச், நிறுவப்பட்ட, அரசாங்கம்

