முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » இராசாதிகாரம் முதல் - இராப்பத்து வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - இராசாதிகாரம் முதல் - இராப்பத்து வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இராசியெழுத்து | குறியீட்டெழுத்துவகை . |
| இராசிலம் | சாரைப்பாம்பு . |
| இராசிவட்டம் | காண்க : இராசிமண்டலம் |
| இராசீகம் | அரசனால் வருவது . |
| இராசீவம் | தாமரை ; வரைக்கெண்டை ; மான்வகை . |
| இராசை | திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரநயினார்கோயில் என்னும் தலம் . |
| இராசோத்துங்கன் | அரசருள் சிறந்தவன் . |
| இராட்சச | அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தொன்பதாம் ஆண்டு . |
| இராட்சசம் | காண்க : இராக்கதம் |
| இராட்சசன் | அரக்கன் |
| இராட்டிரம் | நாடு ; நகரிலுள்ள மக்கள் ; உற்பாதம் . |
| இராட்டினஞ்சுற்றுதல் | நூல் நூற்றல் ; சுழல் தேரைச் சுற்றுதல் . |
| இராட்டினத்தொட்டி | இராட்டினம்போலச் சுழலும் தொட்டி . |
| இராட்டினம் | நூற்கும் பொறி ; நீரிறைக்கும் கருவி ; நூல் சுற்றும் கருவி ; பஞ்சரைக்கும் கருவி ; ஏறி விளையாடும் சுழல்தேர் . |
| இராட்டினவாழை | வாழைவகை . |
| இராட்டினவூஞ்சல் | சுழலும் ஊசல் . |
| இராட்டு | இராட்டினம் ; தேன்கூடு . |
| இராடம் | வெண்காயம் ; கழுதை ; இலாடம் ; பெருங்காயம் . |
| இராணம் | இலை ; மயிலின் தோகை . |
| இராணி | அரசி |
| இராணிவாசம் | அரசியின் அந்தப்புரம் . |
| இராணுவம் | படை . |
| இராணுவமோடி | அணிவகுப்பு . |
| இராத்திரி | இரவு ; மஞ்சள் . |
| இராத்திரிகாசம் | வெள்ளாம்பல் . |
| இராத்திரிவேதம் | சேவல் . |
| இராதம் | கடைக்கொள்ளி . |
| இராதாரி | சங்கத்தின் அனுமதிச் சீட்டு . |
| இராதினி | சல்லகிமரம் ; ஓர் ஆறு ; வச்சிரப்படை ; மின்னல் ; இடி . |
| இராதை | கண்ணன் காதலித்த கோபிகைகளுள் ஒருத்தி ; விசாகம் ; விஷ்ணுகிராந்தி ; நெல்லி ; மின்னல் ; கன்னனின் செவிலித்தாய் . |
| இராந்து | இடுப்பு |
| இராந்துண்டு | இலந்தை . |
| இராப்பண் | இராக்காலத்தில் பாடுதற்குரிய பண்கள் . |
| இராப்பத்து | திருமால் கோயில்களில் ஏகாதசியை ஒட்டி இரவில் நடைபெறும் சாற்றுமுறை விழா . |
| இராசாதிகாரம் | அரசனுக்குரிய அதிகாரம் . |
| இராசாமந்திரி | ஒரு விளையாட்டு . |
| இராசாவர்த்தம் | காண்க : இராசவத்தனம் . |
| இராசாளி | பறவைவகை ; வல்லூறு ; பைரி ; பறவைமாநாகம் . |
| இராசாளியார் | கள்ளர்குலப் பட்டப்பெயருள் ஒன்று . |
| இராசான்னம் | ஒருவகை உயர்ந்த நெல் |
| இராசி | வரிசை ; கூட்டம் ; குவியல் ; இனம் ; மொத்தம் ; அதிட்டம் ; மேட முதலிய இராசி ; சுபாவம் ; பொருத்தம் ; இராசிக் கணக்கு ; சமாதானம் ; இராசி 12 ; மேடம் , இடபம் , மிதுனம் , கற்கடகம் , சிம்மம் , கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் . |
| இராசிக்கணக்கு | அசல்தொகை , காலம் ஆகியவற்றை இராசிமுறையில் பெருக்கியும் வகுத்தும் கணக்கிடும் கணக்குவகை . |
| இராசிக்காரன் | அதிட்டமுள்ளவன் , நற்பேறு உடையான் . |
| இராசிகட்டுதல் | தவச விளைவு முன்மதிப் பளவுக்கு வருதல் . |
| இராசிகம் | இயற்கணிதம் ; அமிசம் ; அரசனால் வருவது ; ஓர் இராசி ; குவியல் ; நரம்பு ; வரி . |
| இராசிகாணுதல் | கண்டுமுதற்கணக்குக் கட்டுதல் ; காண்க : இராசிகட்டுதல் . |
| இராசிகூடுதல் | காண்க : இராசிகாணுதல் . |
| இராசிகை | வயல் ; இரேகை ; ஒழுங்கு ; கேழ்வரகு . |
| இராசிசக்கரம் | இராசி மண்டலம் ; இராசிகளை எழுதியடைத்த சக்கரம் . |
| இராசிநாமா | உடன்படிக்கைப் பத்திரம் ; உத்தியோகத்தினின்று விலகிக் கொள்வதற்காக எழுதும் பத்திரம் . |
| இராசிப்படுதல் | மனம்பொருந்துதல் . |
| இராசிப்பணம் | தனித்தனி எண்ணாமல் மொத்த அளவில் எண்ணும் பணம் . |
| இராசிப்பிரிவு | கோள்கள் இராசியைக் கடக்கை . |
| இராசிப்பொருத்தம் | திருமணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று . |
| இராசிப்பொன் | கலப்பற்ற பொன் . |
| இராசிபண்ணுதல் | சமாதானம் செய்தல் . |
| இராசிபுடம் | இராசிகளில் கோள் நிற்கும் நிலையைச் சரிவரப் பார்க்கை . |
| இராசிமண்டலம் | கோள்கள் செல்லும் வீதி . |
| இராசியடி | பொலியடித் தவசம் ; அளந்த பின் கிடக்கும் களநெல் |
| இராசியத்தானம் | மறைவிடம் . |
| இராசியதிபதிப்பொருத்தம் | திருமணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று . |
| இராசியம் | மறைவு ; பெண்குறி ; தாமரை . |
| இராசியளத்தல் | குவித்த தவசத்தை அளத்தல் |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 121 | 122 | 123 | 124 | 125 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராசாதிகாரம் முதல் - இராப்பத்து வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, இராசி, பொருத்தம், கருவி, ஒன்று, இராசிகாணுதல், இராசிகட்டுதல், சமாதானம், பத்திரம், கோள்கள், பத்தனுள், திருமணப், இராசிமண்டலம், குவியல், இராட்டினம், சுழலும், தாமரை, மின்னல், அரசனால், வருவது, நூல்

