தமிழ் - தமிழ் அகரமுதலி - இராசதந்தம் முதல் - இராசாதனம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இராசவட்டம் | அரசியற் செய்தி ; இராசதோரணை . |
| இராசவத்தனம் | வைடூரியவகை . |
| இராசவமிசம் | அரசர் குலம் . |
| இராசவர்க்கம் | அரச மரபு ; அரச குலத்தார் . |
| இராசவரிசை | அரசர்க்குச் செய்யும் சிறப்பு . |
| இராசவல்லபன் | அரசனிடத்துச் செல்வாக்குள்ளவன் . |
| இராசவள்ளி | கொடிவகை ; வள்ளிவகை . |
| இராசவாகனம் | அரசன் ஊர்தி ; சிவிகை ; கோவேறு கழுதை . |
| இராசவாய்க்கால் | தலைமையான நீர்க்கால் . |
| இராசவாழை | குலை ஒன்றுக்கு ஆயிரம் காய்கள் காய்க்கும் வாழைவகை . |
| இராசவிசுவாசம் | அரச பக்தி . |
| இராசவிரணம் | காண்க : இராசபிளவை . |
| இராசவிருட்சம் | கொன்றைமரம் . |
| இராசவீதி | அரசர் உலாவருவதற்குரிய பெருந்தெரு . |
| இராசவைத்தியம் | பத்தியம் இல்லாத மருத்துவம் . |
| இராசன் | அரசன் ; சந்திரன் ; தலைவன் ; இந்திரன் ; இயக்கன் . |
| இராசனை | வெள்ளைப்பூண்டு . |
| இராசா | அரசன் ; ஒரு தெலுங்கச் சாதி . |
| இராசாக்கினை | அரசன் ஆணை ; அரசதண்டனை . |
| இராசாங்கம் | அரசுக்குரிய உறுப்புகள் ; அரசாட்சி . |
| இராசாணி | அரசி . |
| இராசாத்தி | அரசி . |
| இராசாதனம் | முருக்கு ; முரள் ; அரியணை ; கிங்கிணிப்பாலை . |
| இராசதந்தம் | முன்வாய்ப் பல் |
| இராசதந்திரம் | அரசியல் ; அரசியல் நூல் . |
| இராசதபுராணம் | பிரமனைத் துதிக்கும் புராணத்தொகுதி ; அவையாவன ; பிரமம் , பிரமாண்டம் , பிரம வைவர்த்தம் , மார்க்கண்டேயம் , பவிடியம் , வாமனம் . |
| இராசதம் | காண்க : இரசோகுணம் ; அரச பதவி . |
| இராசதாலம் | கமுகு . |
| இராசதானம் | தலைநகர் ; |
| இராசதானி | தலைநகர் ; மாநிலம் . |
| இராசதுரோகம் | அரசர்க்கு எதிராகச் செய்யும் செயல் . |
| இராசநாகம் | நாகப்பாம்புவகை . |
| இராசநீதி | அரசன் அறநெறி . |
| இராசநோக்கம் | அரசன் மனப்போக்கு ; அரசன்கருணை . |
| இராசநோக்காடு | கடைசியான மகப்பேற்று வலி . |
| இராசப்பிரதிநிதி | அரசனுக்குப் பதிலாள் . |
| இராசபக்தி | அரசரிடம் வைக்கும் உண்மை அன்பு . |
| இராசபஞ்சகம் | இராச பயம் . |
| இராசபட்டம் | இராசாதிகாரம் ; ஒருவகைத் தலைப்பாகை ; முடிசூட்டு . |
| இராசபத்திரம் | அரசனுடைய ஆணை . |
| இராசபத்தினி | அரசி , அரசன் மனைவி . |
| இராசபதவி | அரசனிலை . |
| இராசபாட்டை | போக்குவரத்துக்குரிய பெருவழி . |
| இராசபாதை | போக்குவரத்துக்குரிய பெருவழி . |
| இராசபாவம் | அரசத் தன்மை . |
| இராசபிளவை | முதுகிலுண்டாகும் பெரும் புண் . |
| இராசபுத்தி | கூர்த்த அறிவு ; தனிச் சிறப்பான அறிவு . |
| இராசபுத்திரன் | அரசன் மகன் , கோமகன் . |
| இராசபோகம் | அரசன் நுகர்தற்குரிய இன்பம் ; அரசர்க்குரிய பாதுகாவல் வரி . |
| இராசமகிஷி | அரசன் மனைவி . |
| இராசமண்டலம் | அரசர் கூட்டம் . |
| இராசமணி | நெல்வகை . |
| இராசமாநகரம் | அரசன் வாழும் பேரூர் ; தலைநகரம் . |
| இராசமாநாகம் | கருவழலைப் பாம்பு . |
| இராசமாமந்தம் | ஒருவகைப் பாம்பு . |
| இராசமார்க்கம் | காண்க : இராசபாட்டை . |
| இராசமாளிகை | அரசன் அரண்மனை . |
| இராசமானியம் | அரசனால் விடப்பட்ட இறையிலி நிலம் . |
| இராசமுடி | அரசன் முடி ; தெய்வச்சிலைகளுக்குச்சாத்தும் சாயக்கொண்டை . |
| இராசமுத்திரை | அரசன் இலச்சினை , அரசனின் அடையாளக்குறி . |
| இராசமோடி | அரச மிடுக்கு . |
| இராசயுகம் | பாலை . |
| இராசயோகம் | அரசனாவதற்குரிய கோள்நிலை ; அரசனுக்குரிய இன்ப வாழ்வு ; யோகநிலை வகையுள் ஒன்று . |
| இராசராசன் | மன்னர்மன்னன் , பேரரசன் , சக்கரவர்த்தி ; குபேரன் ; இராசராசசோழன் . |
| இராசராசேச்சரம் | இராசராசன் கட்டிய சிவன்கோயில் , தஞ்சாவூர்ப் பெரியகோயில் . |
| இராசராசசேச்சுவரி | உமை வடிவங்களுள் ஒன்று . |
| இராசரிகம் | அரசாட்சி . |
| இராசரிஷி | அரசனாயிருந்து முனிவனானவன் . |
| இராசருகம் | அகில் ; வெள்ளைத் தும்பை . |
| இராசலட்சணம் | அரசனுக்குரிய உடற்குறி . |
| இராசலட்சுமி | எட்டு லட்சுமிகளுள் ஒருத்தி , அரசுரிமையாகிய செல்வம் ; அரசருடைய ஆளுகையைத் துலங்கச் செய்பவள் . |
| இராசவசித்துவம் | அரசனை வசமாக்கல் . |
| இராசவசியம் | அரசனை வசமாக்கல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 120 | 121 | 122 | 123 | 124 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராசதந்தம் முதல் - இராசாதனம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், அரசன், அரசி, அரசர், காண்க, அறிவு, அரசனுக்குரிய, பாம்பு, இராசராசன், வசமாக்கல், அரசனை, பெருவழி, ஒன்று, மனைவி, இராசபிளவை, செய்யும், அரசாட்சி, அரசியல், இராசபாட்டை, தலைநகர், போக்குவரத்துக்குரிய

