முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » இதிகாசம் முதல் - இந்திராணிகாணி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - இதிகாசம் முதல் - இந்திராணிகாணி வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
இந்திரன்மைந்தன் | சயந்தன் ; அருச்சுனன் ; வாலி . |
இந்திரன்திசை | கீழ்த்திசை . |
இந்திரன் நாள் | கேட்டை . |
இந்திரனூர் | பொன்னாங்காணி . |
இந்திரா | திருமகள் . |
இந்திராக்கம் | குதிரைச் செவியின் அடியில் காணப்படும் சுழிவகை . |
இந்திராணம் | நொச்சி . |
இந்திராணி | இந்திரன் மனைவி ; ஏழு மாதருள் ஒருத்தி ; நொச்சி ; சுரதவகை . |
இந்திராணிகாணி | பொன்னாங்காணி . |
இந்தப்படிக்கு | காண்க : இப்படிக்கு . |
இந்தம் | புளியமரம் ; விறகு . |
இந்தம்வரம் | காண்க : இந்தீவரம் . |
இந்தளங்குறிஞ்சி | ஒரு பண் . |
இந்தளம் | மருத யாழ்த்திறவகை ; தூபமுட்டி , கும்மட்டிச் சட்டி . |
இந்தனம் | விறகு ; புகை . |
இந்தனோடை | மேலாடை . |
இந்தா | 'இதோ' , 'இங்கே வா' என்னும் குறிப்பு மொழி இதை வாங்கிக் கொள் ' என்னும் குறிப்பு மொழி . |
இந்தி | பூனை ; திருமகள் ; இந்திய மொழிகளுள் ஒன்று ; இந்தியத் தேசிய மொழி . |
இந்திகை | அபரநாதசத்திகள் ஐந்தனுள் ஒன்று . |
இந்திகோபம் | ஈயம் . |
இந்திடம் | இவ்விடம் . |
இந்தியம் | காண்க : இந்திரியம் . |
இந்தியன் | இந்திய நாட்டைச் சேர்ந்தவன் . |
இந்தியா | பரதகண்டம் . |
இந்திரகணம் | செய்யுட் கணத்துள் ஒன்று ; முதற் செய்யுளின் முதற் சீரைத் தேமாங்காய் வாய்பாடாகப் பாடுவது . |
இந்திரகம் | சபாமண்டபம் . |
இந்திரகாந்தச் சேலை | புடைவைவகை . |
இந்திரகெந்தம் | காண்க : இந்திரசுகந்தம் . |
இந்திரகோடணை | இந்திரவிழா . |
இந்திரகோபம் | தம்பலப்பூச்சி . |
இந்திரசாபம் | இந்திரனுடைய வில் ; வானவில் . |
இந்திரசாலம் | மாயவித்தை ; அற்புதங்களைக் காட்டும் கண்கட்டு வித்தை ; ஏய்ப்பு . |
இந்திரசாலி | அழிஞ்சில் ; இந்திரசால வித்தைக்காரன் . |
இந்திரசித்து | இந்திரனை வென்றவன் ; இராவணனுடைய மூத்த மகன் ; கருடன் ; கிருட்டிணன் . |
இந்திரசிறப்பு | வைசுவதேவம் , மதிய உணவிற்கு முன் இந்திரன் முதலிய தேவர்களுக்குப் பார்ப்பனர் செய்யும் நற்செயல் . |
இந்திரசுகந்தம் | நன்னாரி . |
இந்திரஞாலம் | காண்க : இந்திரசாலம் ; வஞ்சகச் சொல் ; சூரபதுமன் தேர் . |
இந்திரதந்திரம் | காண்க : இந்திரசாலம் . |
இந்திரதரு | மருது . |
இந்திரதனு | காண்க : இந்திரவில் . |
இந்திரதிசை | கிழக்கு . |
இந்திரதிருவன் | இந்திரனைப்போல் செல்வம் உடையவன் . |
இந்திரநகரி | திருத்தணிகை ; தேவலோகம் . |
இந்திரநாள் | கேட்டை நாள் . |
இந்திரநீலம் | சிறந்த நீலமணி . |
இந்திரப்பிரியம் | பொதியமலைச் சந்தனம் . |
இந்திரபதம் | (வி) துறக்கம் ; இந்திரனாயிருக்கும் நிலை . |
இந்திரபம் | வெட்பாலை . |
இந்திரபுட்பம் | வெண்தோன்றி . |
இந்திரபுட்பி | வெண்தோன்றி . |
இந்திரபுரி | இந்திரன் தலைநகராகிய அமராவதி . |
இந்திரபுரோகிதன் | தேவகுருவாகிய வியாழன் . |
இந்திரம் | மேன்மையானது ; இந்திரியம் ; இந்திர பதவி . |
இந்திரர் | தேவர் . |
இந்திரலோகம் | துறக்கம் ; பரமபதம் . |
இந்திரவணி | சங்கநிதி , பதுமநிதி . |
இந்திரவம் | காண்க : இந்தீவரம் . |
இந்திரவர்ணப்பட்டு | பட்டுப்புடைவைவகை . |
இந்திரவல்லி | பிரண்டை ; முடக்கொற்றான் ; கொற்றான் . |
இந்திரவாசம் | நெய்தல் . |
இந்திரவாமம் | நெய்தல் . |
இந்திரவாருணி | பேய்க்கொம்மட்டி . |
இந்திரவிகாரம் | காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த ஒரு பௌத்தப் பள்ளி . |
இந்திரவில் | வானவில் . |
இந்திரவிழவு | இந்திரனுக்குச் சிறப்பு செய்யும் திருநாள் ; காவிரிபூம்பட்டினத்தில் முன்னாளில் நிகழ்ந்த ஒரு பெருவிழா . |
இந்திரவிழா | இந்திரனுக்குச் சிறப்பு செய்யும் திருநாள் ; காவிரிபூம்பட்டினத்தில் முன்னாளில் நிகழ்ந்த ஒரு பெருவிழா . |
இந்திரன் | தேவேந்திரன் ; தலைவன் ; கேட்டை ; மிருகசீரிடம் ; அந்தரான்மா ; சூரியன் . |
இதிகாசம் | பழங்காலத்துச் சரித்திரம் ; இராமாயண பாரதங்கள் போன்றவை ; ஐதிகப் பிரமாணம் ; அறிவு ; எடுத்துக்காட்டு ; மேற்கோள் . |
இது | அஃறிணை ஒருமை அண்மைச் சுட்டுப் பெயர் ; இந்த . |
இதை | கப்பற்பாய் ; காராமணி ; கலப்பை ; புதுக்கொல்லை . |
இதோபதேசம் | நல்லறிவூட்டல் ; ஒரு நூல் . |
இதோள் | இவ்விடம் . |
இதோளி | இவ்விடம் . |
இந்த | அண்மைப் பொருளைச் சுட்டுஞ் சொல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 109 | 110 | 111 | 112 | 113 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதிகாசம் முதல் - இந்திராணிகாணி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, இந்திரன், சொல், இவ்விடம், மொழி, ஒன்று, செய்யும், கேட்டை, இந்திரசாலம், வெண்தோன்றி, துறக்கம், இந்திரவில், சிறப்பு, நிகழ்ந்த, பெருவிழா, முன்னாளில், காவிரிபூம்பட்டினத்தில், இந்திரனுக்குச், திருநாள், நெய்தல், இந்திரியம், நொச்சி, விறகு, திருமகள், பொன்னாங்காணி, நாள், இந்தீவரம், என்னும், இந்திரசுகந்தம், இந்திரவிழா, முதற், இந்திய, குறிப்பு, வானவில்