முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » இமசலம் முதல் - இயம்புணர் தூம்பு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - இமசலம் முதல் - இயம்புணர் தூம்பு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இயக்கர்கோமான் | இயக்கர்களின் அரசன் , குபேரன் . |
| இயக்கர்வேந்தன் | இயக்கர்களின் அரசன் , குபேரன் . |
| இயக்கன் | இயக்க கணத்தான் ; குபேரன் ; தலைமையாக நின்று நடத்துபவன் . |
| இயக்கி | யட்சப் பெண் ; கந்தருவப் பெண் ; குபேரன் மனைவி ; தருமதேவதை . |
| இயக்கினி | கண்டங்கத்தரி . |
| இயக்குதல் | செலுத்துதல் ; தொழிற்படுத்துதல் ; பழக்குதல் ; ஒலிப்பித்தல் ; நடத்திவருதல் ; போக்குதல் . |
| இயங்காத்திணை | தானாக இடம்விட்டுப் பெயர இயலாத நிலைத்திணைப் பொருள் . |
| இயங்கியற்பொருள் | இடம்விட்டு இடம்செல்லும் உயிர்ப்பொருள் ; சரப்பொருள் . |
| இயங்கு | செல்லுகை ; முட்செடி வகை . |
| இயங்குதல் | அசைதல் ; போதல் ; உலாவுதல் ; ஒளிசெய்தல் . |
| இயங்குதிசை | மூச்சு இயங்கும் மூக்குத்துளை . |
| இயங்குதிணை | காண்க : இயங்கியற்பொருள் . |
| இயங்குநர் | வழிப்போவோர் . |
| இயங்குபடையரவம் | பகையரணை முற்றுதற்கு எழுந்த படையின் செலவால் உண்டாகும் ஆரவாரத்தைக் கூறும் புறுத்துறை . |
| இயசுரு | யசுர்வேதம் . |
| இயத்தல் | கடத்தல் ; நிகழ்தல் . |
| இயந்தா | யானைப் பாகன் ; சாரதி . |
| இயந்திரம் | ஆலை ; தேர் ; மதிலுறுப்பு ; சக்கரம் ; பாண்டவகை ; வலை . |
| இயந்திரமயில் | மயிற்பொறி . |
| இயந்திரி | இத்திமரம் . |
| இயந்திரித்தல் | எந்திரம் அமைத்தல் ; எந்திரத்தில் ஆட்டுதல் . |
| இயந்தை | மருத யாழ்த்திறம் ; செவ்வழி யாழ்த்திறவகை . |
| இயபரம் | இம்மை மறுமை , இகபரம் . |
| இயம் | சொல் ; ஒலி ; வாத்தியம் ; மிருதாரசிங்கி எனும் மூலிகை ; ஈ . |
| இயம்பல் | சொல் ; பழமொழி . |
| இயம்புணர் தூம்பு | நெடுவங்கியம் என்னும் இசைக்கருவி . |
| இமசலம் | பனிநீர் . |
| இமசானு | இமயமலை , இமயமலையின் மேற்பரப்பு . |
| இமப்பிரபை | மிகக் குளிர்ச்சியாயுள்ள ஒரு நரகம் . |
| இமம் | பனி ; சந்தனம் ; சீதளம் . |
| இமயம் | இமயமலை ; மந்தரமலை ; மேருமலை ; பொன் . |
| இமயவதி | இமவான் மகள் , பார்வதி . |
| இமயவரம்பன் | இமயமலை எல்லைவரை வெற்றி கொண்டு அரசாண்டவன் ; ஒரு சேரமன்னன் . |
| இமயவல்லி | காண்க : இமயவதி . |
| இமயவில் | மேருமலையாகிய வில் . |
| இமயவில்லி | மேருமலையை வில்லாகவுடையவன் , சிவன் . |
| இமலம் | மரமஞ்சள் . |
| இமவந்தம் | இமயமலை . |
| இமவாலுகை | பச்சைக் கருப்பூரம் . |
| இமவான் | இமயமலை ; இமயமலையரசன் . |
| இமழி | யானை . |
| இமாசலம் | காண்க : இமவந்தம் . |
| இமாசலை | பார்வதி . |
| இமாம் | பள்ளிவாசலில் தொழுகையை நடத்துபவர் . |
| இமாலயம் | பனிக்கு இருப்பிடமான இமயமலை . |
| இமிர்தல் | ஒலித்தல் ; ஊதுதல் ; மொய்த்தல் . |
| இமில் | எருத்தின் திமில் ; கொண்டை . |
| இமிலை | ஓர் இசைக்கருவி . |
| இமிழ் | ஒலி ; பந்தம் ; கயிறு ; இனிமை ; இசை . |
| இமிழ்த்தல் | ஒலித்தல் ; கட்டுதல் ; சிமிட்டுதல் . |
| இமிழ்தல் | ஒலித்தல் ; யாழொலித்தல் ; தழைத்தல் ; கட்டுதல் ; மிகுதல் . |
| இமிழி | இசை . |
| இமிழிசை | இயமரம் ; ஒருவகைப் பறை . |
| இமை | கண்ணிமை ; கண்ணிமைக்கை ; கண்ணிமைப் பொழுது ; கரடி ; மயில் . |
| இமைக்குரு | இமையில் உண்டாகும் சிறுகட்டி . |
| இமைகொட்டுதல் | இமைத்தல் , கண்ணிதழ் சேர்தல் . |
| இமைத்தல் | இமைகொட்டுதல் ; ஒளிவிடுதல் ; சுருங்குதல் ; தூங்குதல் . |
| இமைப்பளவு | கண்ணிமைப்பொழுது . |
| இமைப்பிலர் | காண்க : இமையவர் . |
| இமைப்பு | இமைப்பளவு ; விளக்கம் . |
| இமைப்பொழுது | கண் இமைக்கும் நேரம் , கணப்பொழுது . |
| இமைபிறத்தல் | இமைத்தல் . |
| இமைபொருந்துதல் | உறங்குதல் . |
| இமையம் | காண்க : இமயம் . |
| இமையவர் | தேவர் . |
| இமையாடுதல் | கண்கொட்டுதல் . |
| இமையார் | காண்க : இமையவர் . |
| இமையோர் | காண்க : இமையவர் . |
| இமையிலி | கருடன் . |
| இயக்கசத்துவம் | பத்துச் சத்துவங்களுள் இயக்கசாதிப் பெண்ணின் சத்துவம் . |
| இயக்கம் | இயங்குகை ; குறிப்பு ; வழி ; இசைப் பாட்டுவகை ; சுருதி ; பெருமை ; மலசலங்கள் ; வடதிசை ; கிளர்ச்சி ; பரப்புகை . |
| இயக்கர் | கந்தருவர் , பதினெண் கணத்துள் ஒரு கணத்தார் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 111 | 112 | 113 | 114 | 115 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இமசலம் முதல் - இயம்புணர் தூம்பு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, இமயமலை, குபேரன், இமையவர், ஒலித்தல், சொல், இமைத்தல், இமவந்தம், இமைகொட்டுதல், இமைப்பளவு, பார்வதி, கட்டுதல், இமயம், பெண், அரசன், இயக்கர்களின், இயங்கியற்பொருள், உண்டாகும், இமயவதி, இசைக்கருவி, இமவான்

