தமிழ் - தமிழ் அகரமுதலி - இணைத்தகோதை முதல் - இதி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இணையணை | பலவான அணை . |
| இணையல் | இணைதல் , சேர்தல் . |
| இணையளபெடை | முதலிரு சீரினும் அளபெடை இயைந்து வரும் தொடை . |
| இணையாவினைக்கை | ஒரு கையால் புரியும் அபிநயம் . |
| இணையியைபு | ஓரடியின் ஈற்றுச் சீர் இரண்டும் இணைந்து வரும் தொடை . |
| இணையீரோதி | கடையொத்த நெய்ப்பினையுடைய கூந்தல் . |
| இணையெதுகை | ஓரடியின் முதலிரு சீரினும் எதுகை இயைந்து வரும் தொடை . |
| இணையெழுத்து | போலியெழுத்து . |
| இணைவன் | இணைந்திருப்பவன் . |
| இணைவிழைச்சி | புணர்ச்சி . |
| இணைவிழைச்சு | புணர்ச்சி . |
| இணைவு | ஒன்றிப்பு ; கலப்பு ; புணர்ச்சி . |
| இத்தனை | இவ்வளவு ; சில . |
| இத்தால் | இதனால் . |
| இத்தி | கல்லால மரம் ; கல்லித்தி மரம் ; பூனை . |
| இத்திநடையம் | நத்தை . |
| இத்தியாதி | இவை முதலானவை . |
| இத்துணை | இவ்வளவு . |
| இத்துமம் | வசந்தம் ; விறகு ; ஒருவகைச் சுள்ளி ; காமம் . |
| இத்து | காமாட்சிப்புல் . |
| இத்துரா | காமாட்சிப்புல் . |
| இத்துவரம் | எருது . |
| இத்துவரன் | கயவன் , தீயோன் , வழிச்செல்வோன் ; வறியன் . |
| இத்தை | முன்னிலை அசைச்சொல் ; இதனை . |
| இதக்கை | பனங்காயின் தலையிலுள்ள தோடு ; செவுள் . |
| இதசத்துரு | வெளிநட்புக் காட்டும் பகைவன் . |
| இதஞ்சொல்லுதல் | புத்தி கூறுதல் . |
| இதடி | பெண்ணெருமை ; நீர் . |
| இதண் | காவற்பரண் . |
| இதணம் | காவற்பரண் . |
| இதம் | இன்பமானது ; நன்மை ; இதயம் ; இது ; ஞானம் . |
| இதமித்தல் | இதஞ்செய்தல் ; பற்றுச்செய்தல் . |
| இதமியம் | இன்பம் ; இதப்படுதல் ; இனிமை ; மனநிறைவு . |
| இதயகமலம் | உள்ளத்தாமரை . |
| இதயபதுமம் | உள்ளத்தாமரை . |
| இதயம் | இருதயம் ; மனம் ; மார்பு ; நஞ்சு . |
| இதயவாசனை | அணிவகை . |
| இதரம் | வேறு ; பகை ; கீழ்மை . |
| இதரவிதரம் | உவமைகளுள்ள இரண்டு வாக்கியங்களுள் முதலாவதன் உபமேய உபமானங்கள் முறையே இரண்டாவதன் உபமான உபமேயங்களாகத் தொடர்ந்து வருமாறு இரண்டு வாக்கியமாகச் சொல்லப்படும் ஒருவகையணி . |
| இதரன் | அன்னியன் ; பாமரன் ; கீழ்மகன் . |
| இதரேதரம் | காண்க : இதரவிதரம் . |
| இதரேதராச்சிரயம் | அன்னியோன்னியாச்சிரயம் , ஒன்றனை ஒன்று பற்றிநிற்றல் என்னும் குற்றம் . |
| இதல் | கவுதாரி ; காடை ; சிவல் . |
| இதலை | கொப்பூழ் . |
| இதவிய | நன்மையான . |
| இதவு | இதம் ; நன்மை . |
| இதழ் | பூவின் தோடு ; உதடு ; கண்ணிமை ; பனையேடு ; மாலை ; பாளை ; சாதிபத்திரி ; கதவின் இலை ; புத்தகத்தின் தாள் ; ஓரிதழ்த் தாமரை . |
| இதழ்குவிதல் | மலர் கூம்புதல் ; இமைகூடுதல் ; மேலுதடும் கீழுதடும் குவிந்து நிற்றல் . |
| இதழ்விள்ளல் | பேசல் ; மலர்தல் ; வாய்திறத்தல் . |
| இதழலர்தல் | பேச வாய்திறத்தல் . |
| இதழி | கொன்றை . |
| இதள் | பாதரசம் . |
| இதளை | கொப்பூழ் . |
| இதன் | நன்மையுள்ளவன் . |
| இதா | இங்கே பார் . |
| இதோ | இங்கே பார் . |
| இதாகிதம் | (இதம்-அகிதம்) நன்மை தீமை . |
| இதாசனி | சுகாசனத்தில் இருப்பவன் . |
| இதி | இறுதி ; பேய் ; உறுதி ; ஒளி . |
| இணைத்தகோதை | இதழ்பறித்துக் கட்டின மாலை . |
| இணைத்தல் | சேர்த்தல் ; கட்டுதல் ; தொடுத்தல் . |
| இணைத்தொடை | அளவடியுள் முதலிரு சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது . |
| இணைத | சேர்தல் ; ஒத்தல் ; இசைதல் . |
| இணைப்படம் | இரண்டுபுறமும் ஒத்த படம் . |
| இணைப்பு | இசைப்பு ; சேர்ப்பு ; ஒப்பு . |
| இணைபிரியாமை | விட்டுப்பிரியாதிருக்கை . |
| இணைமட்டப்பலகை | இரட்டைக்கோடு காட்டும் கருவி . |
| இணைமணிமாலை | பிரபந்த வகை ; வெண்பா அகவல் இணைந்தோ , வெண்பா கட்டளைக் கலித்துறை இணைந்தோ நூறு பாடல்கள் அந்தாதியாய் வரும் சிறு நூல்வகை . |
| இணைமுரண் | ஓரடியின் முதலிரு சீரும் முரண்பட இணைந்து வரும் தொடை . |
| இணைமோனை | ஓரடியின் முதலிரு சீரினும் மோனை இயைந்து வரும் தொடை . |
| இணையசை | நிரையசை . |
| இணையடிகால் | முட்டுக்கால் , மாட்டுக் குற்றவகை . |
| இணையடித்தல் | முட்டுக்கால் தட்டுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 108 | 109 | 110 | 111 | 112 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இணைத்தகோதை முதல் - இதி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வரும், தொடை, முதலிரு, ஓரடியின், நன்மை, இதம், இயைந்து, புணர்ச்சி, சீரினும், வாய்திறத்தல், இங்கே, மாலை, கொப்பூழ், இணைந்தோ, முட்டுக்கால், இரண்டு, வெண்பா, மோனை, பார், காவற்பரண், காமாட்சிப்புல், மரம், இவ்வளவு, இணைந்து, தோடு, காட்டும், உள்ளத்தாமரை, இதயம், சேர்தல், இதரவிதரம்

