தமிழ் - தமிழ் அகரமுதலி - இடைநிலை முதல் - இடையூறு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இடையறவு | இடைவிடுதல் ; நடுவே தொடர்பு விட்டுப்போதல் . |
| இடையறாமை | இடைக்காலத்து அழியாமை ; இடையீடின்றி இருத்தல் . |
| இடையறுத்தல் | படை முதலியவற்றை ஊடறுத்துச் சென்று பரித்தல் . |
| இடையறுதல் | நடுவே முடிந்துபோதல் ; தடைப்படுதல் . |
| இடையன் | ஆடுமாடு மேய்ப்பவன் ; முல்லை நிலத்தவன் ; இடைச் சாதியான் . |
| இடையன்கால்வெள்ளி | பரணி . |
| இடையாகெதுகை | அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றே ஒன்றிவரத் தொடுப்பது . |
| இடையாட்டம் | காரியம் , செயல் . |
| இடையாந்தரம் | நடு ; இடைப்பட்ட காலம் அல்லது இடம் . |
| இடையாயார் | மத்திமர் , நடுத்தரமானவர் . |
| இடையிட்டுமொழிதல் | தவம் செய்வார்க்குரிய நியமங்கள் எட்டனுள் ஒன்று . |
| இடையிடுதல் | இடையில் நிகழ்தல் ; இடையில் ஒழிதல் ; நடுவில் இடுதல் ; மறித்தல் . |
| இடையிடை | ஊடேயூடே , நடுநடுவே . |
| இடையியற்சொல் | உலக வழக்கினும் செய்யுள் வழக்கினும் தன் பொருளைத் தெற்றென விளக்கும் இடைச்சொல் . |
| இடையினம் | காண்க : இடைக்கணம் . |
| இடையினமோனை | இடையினத்துள் யகர வகரங்கள் ஒன்றற்கொன்று மோனையாக வருதல் . |
| இடையினவெதுகை | இடையினத்துள் வந்த எழுத்தன்றி அவ்வினத்து வேறெழுத்து இரண்டாமெழத்தாய் நிற்கவரும் எதுகை . |
| இடையீட்டெதுகை | ஒவ்வோரடி இடையிட்டு வரும் எதுகை . |
| இடையீடு | இடையில் தோன்றுவது ; குறுக்கீடு ; வேறுபாடு ; சமாதானம் ; நடுவே விடுகை ; அரசாங்க உரிமையாயிருந்து பிறருக்கு மாற்றப்படும் நிலம் . |
| இடையுவா | முழுமதி . |
| இடையூறு | இடர் , துன்பம் . |
| இடைநிலை | நடுவில் நிற்கை ; பெயர் வினைகளில் பகுதி விகுதிகளுக்கு இடையில் நிற்கும் ஓர் உறுப்பு ; எச்சம் முதலியன கொண்டு முடியும் சொற்களின் இடையில் ஏற்ற பிறசொல் வருகை . |
| இடைநிலைத்தீவகம் | விளக்கணி வகை ; செய்யுளின் இடையில் வரும் ஒரு சொல் முன்பின் வரும் சொற்களோடு இயைந்து பொருள் தருவது . |
| இடைநிலைப்பாட்டு | தாழிசை ; கலிப்பாவின் ஓர் உறுப்பு . |
| இடைநிலை மயக்கு | சொல்லினகத்து வரும் மெய்யெழுத்துகள் ஒன்றோடு ஒன்று கூடும் கூட்டம் ; உடனிலை , வேற்றுநிலை என இருவகைத் தாம் . |
| இடைநிலை மெய்ம்மயக்கு | சொல்லினகத்து வரும் மெய்யெழுத்துகள் ஒன்றோடு ஒன்று கூடும் கூட்டம் ; உடனிலை , வேற்றுநிலை என இருவகைத் தாம் . |
| இடைநிலை விளக்கு | காண்க : இடைநிலைத் தீவகம் . |
| இடைநீரினிற்றல் | நிலைக்குத்தாய் நீந்துதல் . |
| இடைநேரம் | சிற்றுண்டி கொள்ளும் சமயம் ; ஒரு நிகழ்ச்சியின் இடையில் விடப்படும் ஓய்வு நேரம் . |
| இடைப்படி | ஓர் அளவு . |
| இடைப்படுதல் | மையமாதல் ; இடையில் நிகழ்தல் . |
| இடைப்படுதானம் | மத்திமதானம் ; இடைத்தரமான கொடை . |
| இடைப்பழம் | காய்க்குலையில் இடையிடையே பழுத்திருப்பது . |
| இடைப்பாட்டம் | பழைய வரிவகை . |
| இடைப்பால் | ஆடலரங்கிற்குரிய நிலம் . |
| இடைப்பிறவரல் | எழுவாய் முதலியன கொண்டு முடியும் பெயர் வினைகளினிடையில் ஏற்ற பிறசொல் வருதல் . |
| இடைப்புணரளபெடை | நடுவிரு சீர்க்கண்ணும் அளபெடை வருவது . |
| இடைப்புழுதி | காய்ந்தும் காயாமலுமுள்ள புழுதிநிலம் . |
| இடைப்பூட்சி | காண்க : இடைப்பாட்டம் . |
| இடைப்பூட்டு | அரைக்கச்சு . |
| இடைப்போகம் | இடைக்காலத்து விளைவு . |
| இடைபாடு | அலுவல் ; வணிகம் முதலியவற்றின் நிமித்தமாக இருவரிடை நிகழும் செய்தி . |
| இடைமகன் | இடையன் . |
| இடைமடக்கு | பேச்சினடுவே தடுக்கை ; மடக்கணி வகை . |
| இடைமடுத்தல் | இடைச்செருகுதல் , இடையிலே புகுத்துதல் . |
| இடைமருது | திருவிடைமருதூர் . |
| இடைமிடைதல் | நடுவே கலத்தல் . |
| இடைமுள் | புண்ணிலே தோன்றும் மறுமுள் ; கரப்பான் வகை . |
| இடைமேடு | இடையிடையே சிறிது மேடான பாகமுள்ள வயல் . |
| இடைமை | காண்க : இடைக்கணம் . |
| இடையல் | பின்னிடல் ; தாழல் ; ஒதுங்குதல் ; வருந்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 106 | 107 | 108 | 109 | 110 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இடைநிலை முதல் - இடையூறு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், இடையில், வரும், இடைநிலை, காண்க, நடுவே, ஒன்று, மெய்யெழுத்துகள், இடைப்பாட்டம், சொல்லினகத்து, ஏற்ற, பிறசொல், ஒன்றோடு, கூட்டம், தாம், இடையிடையே, இருவகைத், வேற்றுநிலை, உடனிலை, முடியும், கூடும், பெயர், வழக்கினும், இடைக்கணம், நடுவில், நிகழ்தல், இடைக்காலத்து, இடையன், இடையினத்துள், வருதல், உறுப்பு, முதலியன, சொல், நிலம், எதுகை, கொண்டு

