நன்னூல்

நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். இதன் ஆசிரியர் பவணந்தி முனிவர் ஆவார். தமிழ்மொழி இலக்கணநூல்களுள் தற்போது இருப்பனவற்றில் மிகப்பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்குக் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.
2. எழுத்ததிகாரம்
2.1. எழுத்தியல்
|
பூ மலி அசோகின் புனை நிழல் அமர்ந்த நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்து ஏ | 56 |
|
எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை முதல் ஈறு இடைநிலை போலி என்றா பதம் புணர்பு என பன்னிரு பாற்று அது ஏ | 57 |
2.1.1.எண்
|
மொழி முதல் காரணம் ஆம் அணு திரள் ஒலி எழுத்து அது முதல் சார்பு என இரு வகைத்து ஏ | 58 |
| உயிர் உம் உடம்பு உம் ஆம் முப்பது உம் முதல் ஏ | 59 |
|
உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு அஃகிய இ உ ஐ ஔ மஃகான் தனிநிலை பத்து உம் சார்பெழுத்து ஆகும் | 60 |
|
உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு உயர் ஆய்தம் எட்டு உயிரளபு எழு மூன்று ஒற்றளபெடை ஆறு ஏழ் அஃகும் இ முப்பான் ஏழ் உகரம் ஆறு ஆறு ஐகான் மூன்று ஏ ஔகான் ஒன்று ஏ மஃகான் மூன்று ஏ ஆய்தம் இரண்டு ஒடு சார்பெழுத்து உறு விரி ஒன்று ஒழி முந்நூற்று எழுபான் என்ப | 61 |
2.1.2. பெயர்
| இடுகுறி காரண பெயர் பொது சிறப்பின | 62 |
|
அ முதல் ஈர் ஆறு ஆவி க முதல் மெய் மூ ஆறு என விளம்பினர் புலவர் | 63 |
|
அவற்று உள் அ இ உ எ ஒ குறில் ஐந்து ஏ | 64 |
| ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ நெடில் | 65 |
| அ இ உ முதல் தனி வரின் சுட்டு ஏ | 66 |
|
எ யா முதல் உம் ஆ ஓ ஈற்று உம் ஏ இரு வழி உம் வினா ஆகும் ஏ | 67 |
| வல்லினம் க ச ட த ப ற என ஆறு ஏ | 68 |
| மெல்லினம் ங ஞ ண ந ம ன என ஆறு ஏ | 69 |
| இடையினம் ய ர ல வ ழ ள என ஆறு ஏ | 70 |
|
ஐ ஔ இ உ செறிய முதலெழுத்து இவ் இரண்டு ஓர் இனம் ஆய் வரல் முறை ஏ | 71 |
|
தானம் முயற்சி அளவு பொருள் வடிவு ஆன ஒன்று ஆதி ஓர் புடை ஒப்பு இனம் ஏ | 72 |
2.1.3. முறை
|
சிறப்பின் உம் இனத்தின் உம் செறிந்து ஈண்டு அ முதல் நடத்தல் தான் ஏ முறை ஆகும் ஏ | 73 |
2.1.4. பிறப்பு
|
நிறை உயிர் முயற்சியின் உள் வளி துரப்ப எழும் அணு திரள் உரம் கண்டம் உச்சி மூக்கு உற்று இதழ் நா பல் அண தொழிலின் வெவ்வேறு எழுத்து ஒலி ஆய் வரல் பிறப்பு ஏ | 74 |
|
அ வழி ஆவி இடைமை இடம் மிடறு ஆகும் மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை | 75 |
|
அவற்று உள் முயற்சி உள் அ ஆ அங்காப்பு உடைய | 76 |
|
இ ஈ எ ஏ ஐ அங்காப்பு ஓடு அண் பல் முதல் நா விளிம்பு உற வரும் ஏ | 77 |
| உ ஊ ஒ ஓ ஔ இதழ் குவிவு ஏ | 78 |
|
க ங உம் ச ஞ உம் ட ண உம் முதல் இடை நுனி நா அண்ணம் உற முறை வரும் ஏ | 79 |
| அண் பல் அடி நா முடி உற த ந வரும் | 80 |
| மீ கீழ் இதழ் உற ப ம பிறக்கும் | 81 |
| அடி நா அடி அணம் உற ய தோன்றும் | 82 |
| அண்ணம் நுனி நா வருட ர ழ வரும் | 83 |
|
அண் பல் முதல் உம் அண்ணம் உம் முறையின் நா விளிம்பு வீங்கி ஒற்ற உம் வருட உம் லகாரம் ளகாரம் ஆய் இரண்டு உம் பிறக்கும் | 84 |
| மேல் பல் இதழ் உற மேவிடும் வ ஏ | 85 |
| அண்ணம் நுனி நா நனி உறின் ற ன வரும் | 86 |
|
ஆய்த கு இடம் தலை அங்கா முயற்சி சார்பெழுத்து ஏன உம் தம் முதல் அனைய | 87 |
|
எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபு உம் தத்தமின் சிறிது உள ஆகும் | 88 |
|
புள்ளி விட்டு அ ஒடு முன் உரு ஆகி உம் ஏனை உயிர் ஓடு உருவு திரிந்து உம் உயிர் அளவு ஆய் அதன் வடிவு ஒழித்து இரு வயின் பெயர் ஒடு உம் ஒற்று முன் ஆய் வரும் உயிர்மெய் | 89 |
|
குறியதன் முன்னர் ஆய்த புள்ளி உயிர் ஒடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்து ஏ | 90 |
|
இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில் அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ | 91 |
|
ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம் அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ | 92 |
|
யகரம் வர குறள் உ திரி இகரம் உம் அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய | 93 |
|
நெடில் ஓடு ஆய்தம் உயிர் வலி மெலி இடை தொடர் மொழி இறுதி வன்மை ஊர் உகரம் அஃகும் பிற மேல் தொடர உம் பெறும் ஏ | 94 |
|
தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம் நையும் ஔ உம் முதல் அற்று ஆகும் | 95 |
| ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும் | 96 |
| ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும் | 97 |
2.1.5. உருவம்
|
தொல்லை வடிவின எல்லா எழுத்து உம் ஆண்டு எய்தும் எகர ஒகர மெய் புள்ளி | 98 |
2.1.6. மாத்திரை
|
மூன்று உயிரளபு இரண்டு ஆம் நெடில் ஒன்று ஏ குறில் ஓடு ஐ ஔ குறுக்கம் ஒற்றளபு அரை ஒற்று இ உ குறுக்கம் ஆய்தம் கால் குறள் மஃகான் ஆய்தம் மாத்திரை | 99 |
| இயல்பு எழும் மாந்தர் இமை நொடி மாத்திரை | 100 |
|
ஆவி உம் ஒற்று உம் அளவு இறந்து இசைத்தல் உம் மேவும் இசை விளி பண்டமாற்று ஆதியின் | 101 |
2.1.7. முதநிலை
|
பன்னீர் உயிர் உம் க ச த ந ப ம வ ய ஞ ங ஈர் ஐந்து உயிர்மெய் உம் மொழி முதல் | 102 |
| உ ஊ ஒ ஓ அல ஒடு வ முதல் | 103 |
|
அ ஆ உ ஊ ஓ ஔ ய முதல் | 104 |
| அ ஆ எ ஒ ஓடு ஆகும் ஞ முதல் | 105 |
|
சுட்டு யா எகர வினா வழி அ ஐ ஒட்டி ங உம் முதல் ஆகும் ஏ | 106 |
2.1.8. இறுதிநிலை
|
ஆவி ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய் சாயும் உகரம் நால் ஆறு உம் ஈறு ஏ | 107 |
|
குற்று உயிர் அளபின் ஈறு ஆம் எகரம் மெய் ஒடு ஏலாது ஒ ந ஒடு ஆம் ஔ ககர வகரம் ஓடு ஆகும் என்ப | 108 |
| நின்ற நெறி ஏ உயிர்மெய் முதல் ஈறு ஏ | 109 |
2.1.9. இடைநிலை மயக்கம்
|
க ச த ப ஒழித்த ஈர் ஏழன் கூட்டம் மெய்ம்மயக்கு உடனிலை ர ழ ஒழித்து ஈர் எட்டு ஆகும் இவ் இரு பால் மயக்கு உம் மொழி இடை மேவும் உயிர் மெய் மயக்கு அளவு இன்று ஏ | 110 |
| ங முன் க ஆம் வ முன் ய ஏ | 111 |
| ஞ ந முன் தம் இனம் யகரம் ஒடு ஆகும் | 112 |
| ட ற முன் க ச ப மெய் உடன் மயங்கும் | 113 |
| ண ன முன் இனம் க ச ஞ ப ம ய வ வரும் | 114 |
| ம முன் ப ய வ மயங்கும் என்ப | 115 |
| ய ர ழ முன்னர் மொழி முதல் மெய் வரும் | 116 |
| ல ள முன் க ச ப வ ய ஒன்றும் ஏ | 117 |
| ர ழ அல்லன தம் முன் தாம் உடன் நிலையும் | 118 |
|
ய ர ழ ஒற்றின் முன் க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆம் ர ழ தனி குறில் அணையா | 119 |
|
ல ள மெய் திரிந்த ன ண முன் மகாரம் நைந்து ஈர் ஒற்று ஆம் செய்யுள் உள் ஏ | 120 |
|
தம் பெயர் மொழியின் முதல் உம் மயக்கம் உம் இ முறை மாறி உம் இயலும் என்ப | 121 |
2.1.10.போலி
|
மகர இறுதி அஃறிணை பெயரின் னகரம் ஓடு உறழா நடப்பன உள ஏ | 122 |
| அ ஐ முதல் இடை ஒக்கும் ச ஞ ய முன் | 123 |
|
ஐகான் ய வழி ந ஒடு சில் வழி ஞஃகான் உறழும் என்மர் உம் உளர் ஏ | 124 |
|
அ முன் இகரம் யகரம் என்ற இவை எய்தின் ஐ ஒத்து இசைக்கும் அ ஓடு உ உம் வ உம் ஔ ஓர் அன்ன | 125 |
|
மெய்கள் அகரம் உம் நெட்டு உயிர் காரம் உம் ஐ ஔ கான் உம் இருமை குறில் இவ் இரண்டு ஒடு கரம் உம் ஆம் சாரியை பெறும் பிற | 126 |
| மொழி ஆய் தொடரின் உம் முன் அனைத்து எழுத்து ஏ | 127 |
2.2. பதவியல்
2.2.1.பதம்
|
எழுத்து ஏ தனித்து உம் தொடர்ந்து உம் பொருள் தரின் பதம் ஆம் அது பகாப்பதம் பகுபதம் என இரு பால் ஆகி இயலும் என்ப | 128 |
|
உயிர் ம இல் ஆறு உம் த ப ந இல் ஐந்து உம் க வ ச இல் நால் உம் ய இல் ஒன்று உம் ஆகும் நெடில் நொ து ஆம் குறில் இரண்டு ஓடு ஓர் எழுத்து இயல் பதம் ஆறு ஏழ் சிறப்பின | 129 |
|
பகாப்பதம் ஏழு உம் பகுபதம் ஒன்பது உம் எழுத்து ஈறு ஆக தொடரும் என்ப | 130 |
|
பகுப்பு ஆல் பயன் அற்று இடுகுறி ஆகி முன்னே ஒன்று ஆய் முடிந்து இயல்கின்ற பெயர் வினை இடை உரி நான்கு உம் பகாப்பதம் | 131 |
|
பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின் வரு பெயர் பொழுது கொள் வினை பகுபதம் ஏ | 132 |
|
பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் ஆறின் உம் ஏற்பவை முன்னி புணர்ப்ப முடியும் எ பதங்கள் உம் | 133 |
2.2.2. பகுதி
|
தத்தம் பகாப்பதங்கள் ஏ பகுதி ஆகும் | 134 |
|
செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை உண்மை நுண்மை இவற்று எதிர் இன்ன உம் பண்பு இன் பகா நிலை பதம் ஏ | 135 |
|
ஈறு போதல் இடை உகரம் இ ஆதல் ஆதி நீடல் அடி அகரம் ஐ ஆதல் தன் ஒற்று இரட்டல் முன் நின்ற மெய் திரிதல் இனம் மிகல் இனைய உம் பண்பின் கு இயல்பு ஏ | 136 |
|
நட வா மடி சீ விடு கூ வே வை நொ போ வௌ உரிஞ் உண் பொருந் திரும் தின் தேய் பார் செல் வவ் வாழ் கேள் அஃகு என்று எய்திய இருபான் மூன்று ஆம் ஈற்ற உம் செய் என் ஏவல் வினை பகாப்பதம் ஏ | 137 |
|
செய் என் வினை வழி வி பி தனி வரின் செய்வி என் ஏவல் இணையின் ஈர் ஏவல் | 138 |
| விளம்பிய பகுதி வேறு ஆதல் உம் விதி ஏ | 139 |
2.2.3. விகுதி
|
அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப மார் அ ஆ கு டு து று என் ஏன் அல் அன் அம் ஆம் எம் ஏம் ஓம் ஒடு உம் ஊர் க ட த ற ஐ ஆய் இ மின் இர் ஈர் ஈயர் க ய உம் என்ப உம் பிற உம் வினையின் விகுதி பெயரின் உம் சில ஏ | 140 |
2.2.4. இடைநிலை
|
இலக்கியம் கண்டு அதன் கு இலக்கணம் இயம்பலின் பகுதி விகுதி பகுத்து இடை நின்றது ஐ வினைப்பெயர் அல் பெயர் கு இடைநிலை எனல் ஏ | 141 |
|
த ட ற ஒற்று இன் ஏ ஐம் பால் மூ இடத்து இறந்தகாலம் தரும் தொழில் இடைநிலை | 142 |
|
ஆநின்று கின்று கிறு மூ இடத்தின் ஐம் பால் நிகழ்பொழுது அறை வினை இடைநிலை | 143 |
|
ப வ மூ இடத்து ஐம் பால் எதிர்பொழுது இசை வினை இடைநிலை ஆம் இவை சில இல | 144 |
|
ற ஒடு உகர உம்மை நிகழ்பு அல்ல உம் த ஒடு இறப்பு உம் எதிர்வு உம் ட ஒடு கழிவு உம் க ஓடு எதிர்வு உம் மின் ஏவல் வியங்கோள் இ மார் எதிர்வு உம் பாந்தம் செலவு ஒடு வரவு உம் செய்யும் நிகழ்பு எதிர்வு உம் எதிர்மறை மும்மை உம் ஏற்கும் ஈங்கு ஏ | 145 |
2.2.5. வடமொழி ஆக்கம்
|
இடை இல் நான்கு உம் ஈற்று இல் இரண்டு உம் அல்லா அச்சு ஐ வருக்கம் முதல் ஈறு ய ஆதி நான்மை ள ஆகும் ஐ ஐம் பொது எழுத்து ஒழிந்த நால் ஏழு உம் திரியும் | 146 |
|
அவற்று உள் ஏழ் ஆம் உயிர் இ உம் இரு உம் ஐ வருக்கத்து இடையின் மூன்று உம் அ அ முதல் உம் எட்டு ஏ ய உம் முப்பது ச ய உம் மேல் ஒன்று ச ட உம் இரண்டு ச த உம் மூன்று ஏ அ க உம் ஐந்து இரு க உம் ஆ ஈறு ஐ உம் ஈ ஈறு இகரம் உம் | 147 |
|
ரவ்வின் கு அ முதல் ஆம் மு குறில் உம் லவ்வின் கு இ முதல் இரண்டு உம் யவ்வின் கு இ உம் மொழி முதல் ஆகி முன் வரும் ஏ | 148 |
|
இணைந்து இயல் காலை ய ர ல கு இகரம் உம் ம வ கு உகரம் உம் நகர கு அகரம் உம் மிசை வரும் ர வழி உ உம் ஆம் பிற | 149 |
|
ற ன ழ எ ஒ உம் உயிர்மெய் உம் உயிரளபு அல்லா சார்பு உம் தமிழ் பிற பொது ஏ | 150 |
2.3. உயிரிற்றுப் புணரியல்
2.3.1. புணர்ச்சி
|
மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்கள் உம் தன் ஒடு உம் பிறிது ஒடு உம் அல்வழி வேற்றுமை பொருளின் பொருந்துழி நிலை வரு மொழிகள் இயல்பு ஒடு விகாரத்து இயைவது புணர்ப்பு ஏ | 151 |
|
வேற்றுமை ஐ முதல் ஆறு ஆம் அல்வழி தொழில் பண்பு உவமை உம்மை அன்மொழி எழுவாய் விளி ஈர் எச்சம் முற்று இடை உரி தழுவுதொடர் அடுக்கு என ஈர் ஏழ் ஏ | 152 |
| விகாரம் அனைத்து உம் மேவலது இயல்பு ஏ | 153 |
|
தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம் மூன்று உம் மொழி மூ இடத்து உம் ஆகும் | 154 |
|
வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் விரித்தல் தொகுத்தல் உம் வரும் செய்யுள் வேண்டுழி | 155 |
| ஒரு மொழி மூ வழி குறைதல் உம் அனைத்து ஏ | 156 |
| ஒரு புணர் கு இரண்டு மூன்று உம் உற பெறும் | 157 |
2.3.2. பொதுப் புணர்ச்சி
|
எண் மூ எழுத்து ஈற்று எ வகை மொழி கு உம் முன் வரும் ஞ ந ம ய வக்கள் இயல்பு உம் குறில் வழி ய தனி ஐ நொ து முன் மெலி மிகல் உம் ஆம் ண ள ன ல வழி ந திரியும் | 158 |
|
பொது பெயர் உயர்திணை பெயர்கள் ஈற்று மெய் வலி வரின் இயல்பு ஆம் ஆவி ய ர முன் வன்மை மிகா சில விகாரம் ஆம் உயர்திணை | 159 |
| ஈற்று யா வினா விளி பெயர் முன் வலி இயல்பு ஏ | 160 |
|
ஆவி ய ர ழ இறுதி முன்னிலை வினை ஏவல் முன் வல்லினம் இயல்பு ஒடு விகற்பு ஏ | 161 |
2.3.3. உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி
|
இ ஈ ஐ வழி ய உம் ஏனை உயிர் வழி வ உம் ஏ முன் இவ் இருமை உம் உயிர் வரின் உடம்படுமெய் என்று ஆகும் | 162 |
|
எகர வினா மு சுட்டின் முன்னர் உயிர் உம் யகரம் உம் எய்தின் வ உம் பிற வரின் அவை உம் தூக்கு இல் சுட்டு நீளின் யகரம் உம் தோன்றுதல் நெறி ஏ | 163 |
|
உயிர் வரின் உ குறள் மெய் விட்டு ஓடும் ய வரின் இ ஆம் முற்று உம் அற்று ஒரோ வழி | 164 |
2.3.4. உயிரீற்றுமுன் வல்லினம்
|
இயல்பின் உம் விதியின் உம் நின்ற உயிர் முன் க ச த ப மிகும் விதவாதன மன் ஏ | 165 |
|
மர பெயர் முன்னர் இன மெல்லெழுத்து வர பெறுன உம் உள வேற்றுமை வழி ஏ | 166 |
|
செய்யிய என்னும் வினையெச்சம் பல் வகை பெயரின் எச்சம் முற்று ஆறன் உருபு ஏ அஃறிணை பன்மை அம்ம முன் இயல்பு ஏ | 167 |
|
வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய் ஏகல் உம் உரித்து அஃது ஏகின் உம் இயல்பு ஏ | 168 |
| சாவ என் மொழி ஈற்று உயிர்மெய் சாதல் உம் விதி | 169 |
|
பல சில எனும் இவை தம் முன் தாம் வரின் இயல்பு உம் மிகல் உம் அகரம் ஏக லகரம் றகரம் ஆகல் உம் பிற வரின் அகரம் விகற்பம் ஆகல் உம் உள பிற | 170 |
| அல்வழி ஆ மா மியா முற்று முன் மிகா | 171 |
|
குறியதன் கீழ் ஆ குறுகல் உம் அதன் ஓடு உகரம் ஏற்றல் உம் இயல்பு உம் ஆம் தூக்கின் | 172 |
|
அன்றி இன்றி என் வினையெஞ்சு இகரம் தொடர்பின் உள் உகரம் ஆய் வரின் இயல்பு ஏ | 173 |
|
உரி வரின் நாழியின் ஈற்று உயிர்மெய் கெட மருவும் டகரம் உரியின் வழி ஏ யகர உயிர்மெய் ஆம் ஏற்பன வரின் ஏ | 174 |
| சுவை புளி முன் இன மென்மை உம் தோன்றும் | 175 |
|
அல்வழி இ ஐ முன்னர் ஆயின் இயல்பு உம் மிகல் உம் விகற்பம் உம் ஆகும் | 176 |
|
ஆ முன் பகர ஈ அனைத்து உம் வர குறுகும் மேலன அல்வழி இயல்பு ஆகும் ஏ | 177 |
|
ப ஈ நீ மீ முன்னர் அல்வழி இயல்பு ஆம் வலி மெலி மிகல் உம் ஆம் மீ கு ஏ | 178 |
|
மூன்று ஆறு உருபு எண் வினைத்தொகை சுட்டு ஈறு ஆகும் உகரம் முன்னர் இயல்பு ஆம் | 179 |
| அது முன் வரும் அன்று ஆன்று ஆம் தூக்கின் | 180 |
| வன் தொடர் அல்லன முன் மிகா அல்வழி | 181 |
|
இடை தொடர் ஆய்த தொடர் ஒற்று இடையின் மிகா நெடில் உயிர் தொடர் முன் மிகா வேற்றுமை | 182 |
|
நெடில் ஓடு உயிர் தொடர் குற்றுகரங்கள் உள் ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிக ஏ | 183 |
|
மென் தொடர் மொழி உள் சில வேற்றுமை இல் தம் இன வன் தொடர் ஆகா மன் ஏ | 184 |
| ஐ ஈற்று உடை குற்றுகரம் உம் உள ஏ | 185 |
|
திசை ஒடு திசை உம் பிற உம் சேரின் நிலை ஈற்று உயிர்மெய் க ஒற்று நீங்கல் உம் றகரம் ன ல ஆ திரிதல் உம் ஆம் பிற | 186 |
| தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய் வரின் | 187 |
|
எண் நிறை அளவு உம் பிற உம் எய்தின் ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் உள் முதல் ஈர் எண் முதல் நீளும் மூன்று ஆறு ஏழ் குறுகும் ஆறு ஏழு அல்லவற்றின் ஈற்று உயிர்மெய் உம் ஏழன் உயிர் உம் ஏகும் ஏற்புழி என்மனார் புலவர் | 188 |
|
ஒன்றன் புள்ளி ரகரம் ஆக இரண்டன் ஒற்று உயிர் ஏக உ வரும் ஏ | 189 |
| மூன்றன் உறுப்பு அழிவு உம் வந்தது உம் ஆகும் | 190 |
| நான்கன் மெய் ஏ ல ற ஆகும் ஏ | 191 |
| ஐந்தன் ஒற்று அடைவது உம் இனம் உம் கேடு உம் | 192 |
| எட்டன் உடம்பு ண ஆகும் என்ப | 193 |
|
ஒன்பான் ஒடு பத்து உம் நூறு உம் ஒன்றின் முன்னது இன் ஏனைய முரணி ஒ ஒடு தகரம் நிறீஇ பஃது அகற்றி ன ஐ நிரல் ஏ ண ள ஆ திரிப்பது நெறி ஏ | 194 |
|
முதல் இரு நான்கு ஆம் எண் முனர் பத்தின் இடை ஒற்று ஏகல் ஆய்தம் ஆகல் என இரு விதி உம் ஏற்கும் என்ப | 195 |
|
ஒருபஃது ஆதி முன் ஒன்று முதல் ஒன்பான் எண் உம் அவை ஊர் பிற உம் எய்தின் ஆய்தம் அழிய ஆண்டு ஆகும் த ஏ | 196 |
|
ஒன்று முதல் ஈர் ஐந்து ஆயிரம் கோடி எண் நிறை அளவு உம் பிற வரின் பத்தின் ஈற்று உயிர்மெய் கெடுத்து இன் உம் இற்று உம் ஏற்பது ஏற்கும் ஒன்பது உம் இனைத்து ஏ | 197 |
|
இரண்டு முன் வரின் பத்தின் ஈற்று உயிர்மெய் கரந்திட ஒற்று ன ஆகும் என்ப | 198 |
|
ஒன்பது ஒழித்த எண் ஒன்பது உம் இரட்டின் முன்னதின் முன் அல ஓட உயிர் வரின் வ உம் மெய் வரின் வந்தது உம் மிகல் நெறி | 199 |
| பூ பெயர் முன் இன மென்மை உம் தோன்றும் | 200 |
| இடைச்சொல் ஏ ஓ முன் வரின் இயல்பு ஏ | 201 |
|
வேற்றுமை ஆயின் ஐகான் இறு மொழி ஈற்று அழிவு ஓடு உம் அம் ஏற்ப உம் உள ஏ | 202 |
|
பனை முன் கொடி வரின் மிகல் உம் வலி வரின் ஐ போய் அம் உம் திரள் வரின் உறழ்வு உம் அட்டு உறின் ஐ கெட்டு அ நீள்வு உம் ஆம் வேற்றுமை | 203 |
2.4.மெய்யீற்று புணரியல்
| உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு ஏ | 204 |
| தனி குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும் | 205 |
|
தன் ஒழி மெய் முன் ய வரின் இகரம் துன்னும் என்று துணிநர் உம் உளர் ஏ | 206 |
|
ஞ ண ந ம ல வ ள ன ஒற்று இறு தொழிற்பெயர் ஏவல் வினை நனி ய அல் மெய் வரின் உ உறும் ஏவல் உறா சில சில் வழி | 207 |
| ந இறு தொழிற்பெயர் கு அ உம் ஆம் வேற்றுமை | 208 |
|
ண ன வல்லினம் வர ட ற உம் பிற வரின் இயல்பு உம் ஆகும் வேற்றுமை கு அல்வழி கு அனைத்து மெய் வரின் உம் இயல்பு ஆகும் ஏ | 209 |
|
குறில் அணைவு இல்லா ண னக்கள் வந்த நகரம் திரிந்துழி நண்ணும் கேடு ஏ | 210 |
|
சாதி குழூஉ பரண் கவண் பெயர் இறுதி இயல்பு ஆம் வேற்றுமை கு உணவு எண் சாண் பிற ட ஆகல் உம் ஆம் அல்வழி உம் ஏ | 211 |
|
னஃகான் கிளைப்பெயர் இயல்பு உம் அஃகான் அடைவு உம் ஆகும் வேற்றுமை பொருள் கு ஏ | 212 |
| மீன் ற ஒடு பொரூஉம் வேற்றுமை வழி ஏ | 213 |
|
தேன் மொழி மெய் வரின் இயல்பு உம் மென்மை மேவின் இறுதி அழிவு உம் வலி வரின் ஈறு போய் வலி மெலி மிகல் உம் ஆம் இரு வழி | 214 |
|
மரம் அல் எகின் மொழி இயல்பு உம் அகரம் மருவ வலி மெலி மிகல் உம் ஆகும் | 215 |
| குயின் ஊன் வேற்றுமை கண் உம் இயல்பு ஏ | 216 |
|
மின் பின் பன் கன் தொழிற்பெயர் அனைய கன் அ ஏற்று மென்மை ஓடு உறழும் | 217 |
|
தன் என் என்பவற்று ஈற்று ன வன்மை ஓடு உறழும் நின் ஈறு இயல்பு ஆம் உற ஏ | 218 |
|
ம ஈறு ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்ப உம் வன்மை கு இனம் ஆ திரிப உம் ஆகும் | 219 |
|
வேற்றுமை ம போய் வலி மெலி உறழ்வு உம் அல்வழி உயிர் இடை வரின் இயல்பு உம் உள | 220 |
|
நும் தம் எம் நம் ஈறு ஆம் ம வரு ஞ ந ஏ | 221 |
| அகம் முனர் செவி கை வரின் இடையன கெடும் | 222 |
|
ஈம் உம் கம் உம் உரும் உம் தொழிற்பெயர் மானும் முதலன வேற்றுமை கு அ உம் பெறும் ஏ | 223 |
|
ய ர ழ முன்னர் க ச த ப அல்வழி இயல்பு உம் மிகல் உம் ஆகும் வேற்றுமை மிகல் உம் இனத்து ஓடு உறழ்தல் உம் விதி மேல் | 224 |
|
தமிழ் அ உற உம் பெறும் வேற்றுமை கு ஏ தாழ் உம் கோல் வந்து உறுமேல் அற்று ஏ | 225 |
| கீழின் முன் வன்மை விகற்பம் உம் ஆகும் | 226 |
|
ல ள வேற்றுமை இல் ற ட உம் அல்வழி அவற்று ஓடு உறழ்வு உம் வலி வரின் ஆம் மெலி மேவின் ன ண உம் இடை வரின் இயல்பு உம் ஆகும் இரு வழி ஆன் உம் என்ப | 227 |
|
குறில் வழி ல ள த அணையின் ஆய்தம் ஆக உம் பெறூஉம் அல்வழி ஆன் ஏ | 228 |
|
குறில் செறியா ல ள அல்வழி வந்த தகரம் திரிந்த பின் கேடு உம் ஈர் இடத்து உம் வரு ந திரிந்த பின் மாய்வு உம் வலி வரின் இயல்பு உம் திரிபு உம் ஆவன உள பிற | 229 |
|
ல ள இறு தொழிற்பெயர் ஈர் இடத்து உம் உ உறா வலி வரின் அல்வழி இயல்பு உம் ஆவன உள | 230 |
|
வல் ஏ தொழிற்பெயர் அற்று இரு வழி உம் பலகை நாய் வரின் உம் வேற்றுமை கு அ உம் ஆம் | 231 |
|
நெல் உம் செல் உம் கொல் உம் சொல் உம் அல்வழி ஆன் உம் றகரம் ஆகும் | 232 |
|
இல் என் இன்மை சொல் கு ஐ அடைய வன்மை விகற்பம் உம் ஆகாரத்து ஒடு வன்மை ஆகல் உம் இயல்பு உம் ஆகும் | 233 |
| புள் உம் வள் உம் தொழிற்பெயர் உம் மானும் | 234 |
|
சுட்டு வகரம் மூ இனம் உற முறை ஏ ஆய்தம் உம் மென்மை உம் இயல்பு உம் ஆகும் | 235 |
|
தெவ் என் மொழி ஏ தொழிற்பெயர் அற்று ஏ ம வரின் வஃகான் ம உம் ஆகும் | 236 |
|
ன ல முன் ற ன உம் ண ள முன் ட ண உம் ஆகும் த நக்கள் ஆயும்கால் ஏ | 237 |
| உருபின் முடிபவை ஒக்கும் அ பொருளின் உம் | 238 |
|
இடை உரி வடசொலின் இயம்பிய கொளாத உம் போலி உம் மரூஉ உம் பொருந்திய ஆற்றின் கு இயைய புணர்த்தல் யாவர் கு உம் நெறி ஏ | 239 |
2.5. உருபு புணரியல்
|
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என வரு பெயர் ஐந்து ஒடு பெயர் முதல் இரு நான்கு உருபு உம் உறழ்தர நாற்பது ஆம் உருபு ஏ | 240 |
| பெயர் வழி தம் பொருள் தர வரும் உருபு ஏ | 242 |
|
ஒற்று உயிர் முதல் ஈற்று உருபுகள் புணர்ச்சியின் ஒக்கும் மன் அ பெயர் வேற்றுமை புணர்ப்பு ஏ | 242 |
|
பதம் முன் விகுதி உம் பதம் உம் உருபு உம் புணர் வழி ஒன்று உம் பல உம் சாரியை வருதல் உம் தவிர்தல் உம் விகற்பம் உம் ஆகும் | 243 |
|
அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம் தம் நம் நும் ஏ அ உ ஐ கு ன இன்ன பிற உம் பொது சாரியை ஏ | 244 |
|
எல்லாம் என்பது இழிதிணை ஆயின் அற்று ஓடு உருபின் மேல் உம் உறும் ஏ அன்றேல் நம் இடை அடைந்து அற்று ஆகும் | 245 |
|
எல்லார் உம் எல்லீர் உம் என்பவற்று உம்மை தள்ளி நிரல் ஏ தம் நும் சார புல்லும் உருபின் பின்னர் உம் ஏ | 246 |
|
தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம் நீ நீர் என் எம் நின் நும் ஆம் பிற குவ்வின் அ வரும் நான்கு ஆறு இரட்டல | 247 |
| ஆ மா கோ ன அணைய உம் பெறும் ஏ | 248 |
|
ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் ஊர் பத்தின் முன் ஆன் வரின் ப ஒற்று ஒழிய மேல் எல்லாம் ஓடும் ஒன்பது உம் இற்று ஏ | 249 |
| வ இறு சுட்டின் கு அற்று உறல் வழி ஏ | 250 |
| சுட்டின் முன் ஆய்தம் அன் வரின் கெடும் ஏ | 251 |
| அத்தின் அகரம் அகர முனை இல்லை | 252 |
|
இதன் கு இது சாரியை எனின் அளவு இன்மையின் விகுதி உம் பதம் உம் உருபு உம் பகுத்து இடை நின்ற எழுத்து உம் பதம் உம் இயற்கை உம் ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறி ஏ | 253 |
|
விகுதி பதம் சாரியை உருபு அனைத்தின் உம் உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பன கொளல் ஏ | 254 |
|
இயல்பின் விகாரம் உம் விகாரத்து இயல்பு உம் உயர்திணை இடத்து விரிந்து உம் தொக்கு உம் விரவுப்பெயரின் விரிந்து உம் நின்று உம் அன்ன பிற உம் ஆகும் ஐ உருபு ஏ | 255 |
|
புள்ளி உம் உயிர் உம் ஆய் இறு சொல் முன் தம்மின் ஆகிய தொழில் மொழி வரின் ஏ வல்லினம் விகற்பம் உம் இயல்பு உம் ஆகும் | 256 |
|
இதன் கு இது முடிபு என்று எஞ்சாது யா உம் விதிப்ப அளவு இன்மையின் விதித்தவற்று இயல் ஆன் வகுத்து உரையாத உம் வகுத்தனர் கொளல் ஏ | 257 |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நன்னூல், Nannool, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

