இலக்கணச் சுருக்கம்

396.
வினாவாவது, அறியக்கருதியதை வெளிப்படுத்துவதாம். விடையாவது, வினாவாகிய பொருளை
அறிவிப்பதாம்.
வினா, உசா, சுடா, என்பன ஒரு பொருட்சொற்கள். விடை, செப்பு, உத்தரம், இறை என்பன ஒரு பொருட்சொற்கள்.
397. வினாவையும் விடையையும் வழுவாமற் காத்தல் வேண்டும்.
உதாரணம்.
உயிரெத்தன்மைத்து வினாவழாநிலை
உயிருணர்தற்றன்மைத்து விடைவழாநிலை
கறக்கின்ற வெருமை
nhலோ சினையோ? வினாவழு
தில்லைக்கு வழியாது?
எனின் சிவப்புக்காளை
முப்பது பணம் என்பது விடைவழு
398. வினா, அறியாமை, ஐயம், அறிவு, கொளல், கொடை, ஏவல், என அறுவகைப்படும்.
உதாரணம்.
1 ஆசிரியரே இப்பாட்டிற்கு பொருள் யாது? அறியாமை வினா
2 குற்றியோ மகனோ? ஐயவினா
3 மாணாக்கனே, இப்பாட்டிற்குப் பொருள் யாது? அறிவினா
4 பயறுண்டோ செட்டியாரே? கொளல்வினா
5 தம்பிக்காடையில்லையா? கொடைவினா
6 தம்பீ யுண்டாயா? ஏவல்வினா
399. விடை, சுட்டு, எதிர்மறை உடன்பாடு, ஏவல், வினாவெதிர்வினாதல், உற்றுரைத்தல், உறுவது கூறல், இனமொழி என, எட்டு வகைப்படும். இவற்றுள் முன்னைய மூன்றுஞ் செவ்வனிறை: பின்னைய ஐந்தும் பயப்பன.
(உதாரணம்)
வினா விடை
1 தில்லைக்கு வழி யாது? இது சுட்டு
2 இது செய்யவா? செய்யேன் எதிர்மறை
3 இது செய்யவா? செய்வேன் உடன்பாடு
4 இது செய்யவா? நீ செய் ஏவல்
5 இது செய்யவா? செய்யேனோ வினாவெதிர் வினாதல்
6 இது செய்யவா? உடம்பு நொந்தது உற்றுரைத்தல்
7 இது செய்யவா? உடம்பு நோம் உறுவது கூறல்
8 இது செய்யவா? மற்றையது செய்வேன் இனமொழி
----
- தேர்வு
வினாக்கள்
396. வினாவாவது யாது? விடையாவது யாது?
397. வினாவையும் விடையையும் எவ்வாறு காத்தல் வேண்டும்?
398. வினா எத்தனை வகைப்படும்?
399. விடை எத்தனை வகைப்படும்?
சுட்டு
400. படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர் சேர்ந்துவரின், அப்படர்க்கைப் பெயர் முடிக்குஞ் சொற் கொள்ளுமிடத்து அதற்குப்பின் வரும்: முடிக்குஞ் சொற் கொள்ளாவிடத்து அதற்றுப் பின்னு முன்னும் வரும்.
உதாரணம்.
(1) நம்பி சந்தான்; அவனுக்குச் சோறிடுக
எருது வந்த் அதற்குப் புல்லிடுக
(2) நம்பியவன்; அவனம்பி
----
- தேர்வு வினா
400. படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர் சேர்ந்துவரின், அச் சுட்டுப்பெயர் அப்படர்க்கைப் பெயர்க்கு எவ்விடத்து வரும்?
மரபு
401. மரபாவது, உலக வலக்கிலுஞ் செய்யுள் வழக்கிலுஞ் எப்பொருட்கு எப்பெயர் வழங்கி வருமோ, அப்பொருளை அச் கொல்லாற் கூறுதலாம்.
உதாரணம்.
ஆணைமேய்ப்பான் பாகன் குதிரைக்குட்டி
ஆடுமேய்ப்பான் இடையன் பசுக்கன்று
ஆனையிலண்டம் கீரிப்பிள்ளை
ஆட்டுப்புழுக்கை கோழிக்குஞ்சு
யானைக்குட்டி தென்னம்பிள்ளை
யானைக்கன்று மாங்கன்று
-----
- தேர்வு வினா
401. மரபாவது யாது?
முற்றும்மை
402. இத்தனையென்று தொகையுற்று நிற்கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும், முடிக்குஞ் சொல்லைப் பெற்று வருமிடத்து, முற்றும்மைபெற்று வரும்.
உதாரணம்.
(1) தமழ் நாட்டு மூவேந்தரும் வந்தார்
(2) ஒளிமுன்னிருள் எங்குமில்லை
-----
- தேர்வு வினா - 402
இத்தனையென்று தொகையுற்று நிற்கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும், முடிக்குஞ் சொல்லைப் பெற்று வருமிடத்து, எவ்வாறு வரும்?
ஒரு பொருட் பன்மொழி
403. சொல்லின்பந் தோன்றுதற் பொருட்டு ஒரு பொருண்மேல் இரு சொற்கள் காரணமின்றித் தொடர்ந்து வருதலும் உண்டு.
உதாரணம்.
நாகிளங்கமுகு மீமிசைஞாயிறு
புனிற்றிளங்கன்று உயர்ந்தோங்கு பெரு வரை
-----
- தேர்வு வினா
403. ஒரு பொருண்மேல் இரு சொற்கள் காரணமின்றித் தொடர்ந்து வருதலும் உண்டோ?
அடுக்குச் சொல்
404.ஒரு சொல், விரைவு, வெகுளி, உவகை, அச்சம், துன்பம் முதலிய காரணம்பற்றி இரண்டு முதல் மூன்றளவு அடுக்கிக் கூறப்படும்.
உதாரணம்.
1 உண்டேனுண்டேன்; போ போ போ விரைவு
2 எய்யெய்; எறி எறி எறி கோபம்
3 வருக வருக் பொலிக பொலிக பொலிக உவகை
4 பாம்பு பகம்பு; தீத் தீத் தீ அச்சம்
5 உய்யேனுய்யேன்; வாழேன் வாழேன் வாழேன் துன்பம்
அசைநிலைக்கு இரண்டளவும், இசைறிறைக்கு இரண்டு முதல் நான்களவும் அடுக்கிக் கூறப்படும்.
உதாரணம்.
1 அன்றேயன்றே அசைநிலை
2 ஏயெயம்பன் மொழிந்தனன் யாயே
நல்குமே நல்குமே நல்குமே நாமகள்
பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ இசைநிலை
சலசல, கலகல, என்பவை முதலியன பிரியாது இரட்டைச் சொல்லாகவே நின்று பொருள் படுதலால், அடுக்கிய சொல்லல்ல.
-----
- தேர்வு வினா
404. அடுக்குத் தொடருள், ஒரு சொல்லே அடுக்கிக் கூறப்படும் போது, எவ்வௌ; விடத்தில் எத்தனை எத்தனை அடுக்கிக் கூறப்படும்?
இக்காரணங்களின்றி ஒரு சொல் இங்ஙனம் அடுக்கிக் கூறப்படுதல் இல்லையோ?
சலசல, கலகல என்பவை முதலியன அடுக்கிய சொல்லல்லவோ?
சொல்லெச்சம்
405. சொல்லெச்சமாவது, வாக்கியத்தில் ஒரு சொல் எஞ்சி நின்று வருவித் துரைக்கப்படுவதாம்.
உதாரணம்.
பிறவிப் பொருங்கட னீந்நுவர் நீத்தா
ரிறைவ னடிசேரா தார்
இதிலே சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் எனச் சேர்ந்தார் என்னும் ஒரு சொல் வருவித்துரைக்கப்படுதலாற் சொல்லெச்சம்.
----
- தேர்வு வினா
405. சொல்லெச்சமாவது யாது?
இசையெச்சம்
406. இசையெச்சமாவது, வாக்கியத்தில் அவ்வவ் இடத்திற்கேற்ப் இரண்டு முதலிய பல சொற்கள் எஞ்சி என்று வருவித்துரைக்கப்படுவதாம்.
உதாரணம்.
’’அந்தாமரையன்னமே நின்னையானகன்றாற்றுவனோ’’
இதிலே என்னுயிரினுஞ் சிறந்த நின்னை எனப் பல சொற்கள் வருவித்துரைக்கப்படுதலால் இசையெச்சம்.
-----
- தேர்வு வினா
406. இசையெச்சமாவது யாது?
ஒழியியல் முற்றிற்று
தொடர்மொழியதிகாரம் முற்றுப் பெற்றது.
தொடர்மொழியதிகாரம் முற்றுப் பெற்றது.
பகுபத முடிபு
பெயர்ப்பகுபதங்கள்
அவன் என்னுஞ் சுட்டுப்பொருட் பெயர்ப்பகுபதம். ஆ என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, இடையில் வகர மெய் தோன்றி, அம்மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 41 | 42 | 43 | 44 | 45 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

