இலக்கணச் சுருக்கம்

வகரவீற்றுப் புணர்ச்சி
157. அவ், இவ், உவ் என்னும் அஃறிணைப் பலவின் பாலை உணர்த்தி வரும் சுட்டுப் பெயர்களின் ஈற்று வகரம், அல்வழியில், வல்லினம் வரின் ஆயுதமாகத் திரியும்: மெல்லினம் வரின் வந்த எழுத்தாகத் திரியும்: இடையினம் வரின் இயல்பாகும்.
உதாரணம்.
அஃகடியன இஃசிறியன உஃபெரியன
அஞ்ஞான்றன இந்நீண்டன உம்மாண்டன
அவ்யாத்தன இவ்வளைந்தன உவ்வாழ்ந்தன
156. தெவ் என்னும் சொல்லீற்று வகரம், யகரமல்லாத மெய்கள் வரின், உகரச்சாரியை பெறும்: மகரம் வருமிடத்து, ஒரோவழி மகரமாகத் திரியவும் பெறும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
தெவ்வுக் கடிது தெவ்வுக்கடுமை
தெவ்வுமாண்டது தெவ்வுமாட்சி
தெவ்வுவந்தது தெவ்வுவன்மை
தெவ்வுமன்னர் தெவ்வுமுனை
தெம்மன்னர் தெம்முனை
-----
---- தேர்வு வினாக்கள்
157. சுட்டுப்பெயர்களின் ஈற்று வகரம் அல்வழியில் மூவின மெய்களும் வரின், டிப்படியாம்?
158. தெவ்வென்னுஞ் சொல்லீற்று வகரம், யகரமல்லாத மெய்கள் வரின், எப்படியாம்? மகரம் வரின் வேறு விதியும் பெறுமோ?
எண்ணுப்பெயர் நிறைப்பெயர் அளவுப் பெயர்கள் சாரியை பெறுதல்
159. உயிரையும் மெய்யையும் ஈறாகவுடைய எண்ணும் பெயர் நிறைப்பெயர் அளவுப்பெயர்களின் முன் அவ்வவற்றிற் குறைந்த அவ்வப்பெயர்கள் வரின், பெரும்பாலும் ஏ என்னுஞ் சாரியை இடையில் வரும்.
உதாரணம்.
ஒன்றேகால் காலேகாணி
தொடியேகஃக கழஞ்சேகுன்றி
கலனேபதக்கு உழக்கேயாழாக்கு
ஒன்றரை, கழஞ்சரை, குறுணிநானாழி எனச் சிறுபான்மை ஏகாரச் சாரியை வராதொழியுமெனக் கொள்க.
தேர்வு வினாக்கள்
-
159. எண்ணுப் பெயர்
நிறைப்பெயர், அளவுப்பெயர்களின் முன் அவ்வவற்றிற் குறைந்த அவ்வப் பெயர்கள் வரின்
எப்படியாம்?
-----
இடைச் சொற்களின் முன் வல்லினம் புணர்தல்
160. உயிரீற்றிடைச் சொற்களின் முன் வரும் வல்லினம் இயல்பாயும் மிக்கும் முடியும்.
உதாரணம்.
அம்ம - அம்மகொற்றா
அம்மா - அம்மாசாத்தா
மியா - கேண்மியாபூதா
மதி - னெ;மதிபெரும
என - பொள்ளெனப்புறம்வேரார்
இனி - இனிச்செய்வேன்
ஏ - அவனே கண்டான்
ஒ - அவனோ போனான்
----
161. வினையை அடுத்த படி என்னும் இடைச் சொல்லின் முன் வரும் வல்லினம் மிகா. சுட்டையும் வினாவையும் அடுத்த படி என்னும் இடைச் nசொல்லின் முன் வரும் வல்லினம் ஒரு கால் மிக்கும், ஒரு கால் மிகாதும், வரும்.
உதாரணம்.
வரும்படி சொன்னான்
அப்படிசெய்தான் அப்படிச்செய்தான்
எப்படிபேசினான் எப்படிப்பேசினான்
----
162. வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியை இடைச்சொல்லின் இறுதி னகரந் திரியாதியல்பாம்.
உதாரணம்.
ஆன்கூற்று வண்டின்கால்
தேர்வு வினாக்கள்
160. உயிரீற்றிடைச் சொற்களின் முன் வரம் வல்லினம் எப்படியாம்?
161. படி என்னம் இடைச் சொல்லின் மன் வரம் வல்லினம் எப்படியாம்?
162. வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியையிடைச் சொல்லின் இறுதி னகரம் டிப்படியாம்? ----
உரிச்சொற்களின் முன் வல்லினம் புணர்தல்
163. உயிரீற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின், மிக்கும், இயல்பாகியும், இனமெல்லெழுத்து மிக்கும் புணரும்.
உதாரணம்.
தவ - தவப்பெரியான்
குழ - குழக்கன்று
கடி - கடிக்கமலம்
கடி - கடிகா
தட - தடக்கை
கம - கமஞ்சூல்
நனி - நனிபேதை
கழி - கழிகண்ணோட்டம்
தேர்வு வினா- 136. உயிரீற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
உருபு புணர்ச்சி
----
164. வேற்றுமையுருபுகள், நிலைமொழியோடும் வருமொழியோடும் புணருமிடத்து, அவ்வுருபின் பொருட்புணர்ச்சிக்கு முற் கூறிய விதிகளைப் பெரும்பான்மை பெறும்: சிறுபான்மை வேறுபட்டும் வரும்.
உதாரணம்.
நம்பிக்கண் வாழ்வு: இங்கே உயர்திணைப் பெயாPற்று உயிர்முன் வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினமிகா, என்றும், ணகரம் இடையினம் வரின் இறுவழியினும் இயல்பாம், என்றும், விதித்தபடியே, கண்ணுருபின் முதலுமீறும் இயல்பாயின.
உறிக்கட்டயிர்: இங்கே இகரவீற்றஃறிணைப் பெயர்முன் வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினம் மிகும் என்றும், ணகரம் வேற்றுமைப் பொருளில் வல்லினம் வரின், டகரமாகத் திரியும் என்றும், விதித்தபடியே, கண்ணுருபின் முதலுமீறும் விகாரமாயின.
நம்பிக்குப் பிள்ளை: இங்கே உயர்திணைப் பெயாPற்று உயிர் முன் வேற்றுமை பொருளில் வரும் வல்லினம் இயல்பாம் என்று விதித்தபடி இயல்பாகாது குவ்வுருபு மிகுந்தது.
இங்ஙனம் உருபு புணர்ச்சியானது பொருட்புணர்ச்சியை ஒத்து வருதலும், அதின் வேறுபட்டு வருதலும், அதின் வேறுபட்டு வருதலும், சான்றோராட்சியால் அறிந்து கொள்க.
உறித்தயிர் என்பது, கண்ணென்னும் ஏழாம் வேற்றுமையுருபின்றி அவ்வுருபினது இடப்பொருள் படப்பெயரும் நிலைமொழி வருமொழிகளாய் நின்று புணர்ந்த புணர்ச்சி யாதலின், பொருட்புணர்ச்சியெனப்பட்டது. உறிக்கட்டயிர் என்பது, அவ்வேழனுருபு வெளிப்படட்டு நின்று நிலைமொழி வருமொழிகளோடு புணர்ந்த புணர்ச்சியாதலின், உருபு புணர்ச்சியெனப்பட்டது.
- தேர்வு வினாக்கள்
164. வேற்றுவமயுருபுகள், நிலைமொழியோடும், வருமொழியோடும், எடிப்படிப் புணரும்? வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாவது யாது?
உருபு புணர்ச்சியாவது யாது?
விதியில்லா விகாரங்கள்
----
165. விதியின்றி விகாரப்பட்டு வருவனவுஞ் சிலவுள. அவை மருவி வழங்குதல், ஒத்து நடத்தல், தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலை மாறுதல் என எழுவகைப் படும்.
அவைகளுள்ளே, மருவி வழங்குதலொன்று மாத்திரம் தொடர்மொழியிலும், மற்றவை பெரும்பாலும் தனிமொழியிலும் வரும்.
---
166. மருவி வழங்குதலாவது, விதியின்றிப்பலவாறு விகாரப்பட்டு மருவி வருதல்.
உதாரணம்.
அருமந்தன்னபிள்ளை - அருமருந்தபிள்ளை
பாண்டியனாடு - பாண்டி நாடு
சோழநாடு - சோணாடு
மலையமானாடு - மலாடு
தொண்டைமானாடு - தொண்டைநாடு
தஞ்சாவூர் - தஞ்சை
சென்னபுரி - சென்னை
குணக்குள்ளது - குணாது
தெற்குள்ளது - தெனாது
வடக்குள்ளது - வடாது
என்றந்தை - எந்தை
நுன்றந்தை - நுந்தை
---
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

