இலக்கணச் சுருக்கம்

131. ஒன்பதென்னும் எண்முன் பத்தென்னும் எண்வரின், பது கெட்டு,
முதலுயிரோடு தகரமெய் சேர்ந்து, நின்ற னகரம் ளகரமாகவும். வருமொழியாகிய நூறு
ஆயிரமாவுந் திரியும்.
உதாரணம்.
ஒனபது + பத்து - தொண்ணுhறு
ஒன்பது என்னும் எண்முன் நூறு என்னும் எண் வரின், பது கெட்டு, முதலுயிரோடு தகரமெய்சேர்ந்து, நின்ற னகரம் ளகரமாகவும், வருமொழியாகிய நூறு ஆயிரமாகவுந் திரியும்.
உதாரணம்.
என்பது + நூறு - தொள்ளாயிரம்
இது இக்காலத்துத் தொளாயிரம் என வழங்கும்.
---
132. ஒன்று முதல் எடடீறாக நின்ற எண்ணுப் பெயர் கண்முன் பத்தென்னும் எண்ணுப் பெயர் வரின், அப்பத்தின் நடு நின்ற தகரமெய், கெட்டாயினும், ஈய்தமாகத் திரிந்தாயினும் புணரும்.
உதாரணம்.
ஒன்று 10 பத்து - ஒருபது, இருபஃது
இரண்டு இருபது, இருபஃது
மூன்று முப்பது, முப்பஃது
நான்கு நாற்பது, நாற்பஃது
ஐந்து ஐம்பது, ஐம்பஃது
ஆறு அறுபது, அறுபஃது
ஏழு எழுபது, எழுபஃது
எட்டு எண்பது, எண்பஃது
---
133. ஒருபது முதல் எண்பது ஈறாகிய எண்களின் முன் ஒன்று முதல் ஒன்பதெண்ணும் அவற்றையடுத்த பிற பெயரும் வரின், நிலைமொழியீற்றுக்கு அயலிலே தகரவொற்றுத் தோன்றும்.
உதாரணம்.
ஒருபது 10 ஒன்று - ஒருபத்தொன்று
இருபது 10 இரண்டு - இருபத்திரண்டு
முப்பது 10 மூன்று கழஞ்சு - முப்பத்துமூன்று கழஞ்சு
மற்றவைகளு மிப்படியே
134. பத்தின் முன் இரண்டு வரின், உம்மைத் தொகையில் ஈற்றுயிர் மெய் கெட்டு நின்ற தகரமெய் னகரமாகத்திரியும்.
உதாரணம்.
பத்து 10 இரண்டு - பன்னிரண்டு
பத்தின் முன் இரண்டொழிந்த ஒனிறு முதல் எட்டீறாகிய எண்கள் வரின், உம்மைத்தொகையில் ஈற்றுயிர் மெய் கெட்டு, இன் சாரியை தோன்றும்.
உதாரணம். பத்து 10 ஒன்று - பதினொன்று
மூன்று - பதின்மூன்று
நான்கு - பதினான்கு
ஐந்து - பதினைந்து
ஆறு - பதினாறு
ஏழு - பதினேழு
எட்டு - பதினெட்டு
---
135. பத்தின் முன்னும், ஒன்று முதலிய எண்ணுப் பெயரும், நிறைப்பெயரும், அளவுப்பெயரும், பிறபெயரும், வரின் பண்புத்தொகையில் இற்றுச்சாரியை தோன்றும்: அங்ஙனந் தோன்றுமிடத்துப் பத்தென்பதின் ஈற்றுயிர் மெய் கெடும்..
உதாரணம்.
பத்து 10 ஒன்று - பதிற்றொன்று
இரண்டு - பதிற்றிரண்டு
மூன்று - பதிற்றுமூன்று
பத்து - பதிற்றுப்பத்து
நூறு - பதிற்றுநூறு
ஆயிரம் - பதிற்றாயிரம்
கோடி - பதிற்றுக்கோடி
கழஞ்சு - பதிற்றுக்கழஞ்சு
கலம் - பதிற்றுக்கலம்
மடங்கு - பதிற்றுமடங்கு
ஒன்பது 10 ஒன்று - ஒன்பதிற்றொன்று
இரண்டு - ஒன்பதிற்றிரண்டு
மூன்று - ஒன்பதிற்றுமூன்று
பத்து - ஒன்பதிற்றுப்பத்து
நூறு - ஒன்பதிற்றுநூறு
ஆயிரம் - ஒன்பதிற்றாயிரம்
கோடி - ஒன்பதிற்றுக்கோடி
கழஞ்சு - ஒன்பதிற்றுக்கழஞ்சு
கலம் - ஒன்பதிற்றுக்கலம்
மடங்கு - ஒன்பதிற்றுமடங்கு
பத்தின் முன்னும், ஒன்பதின் முன்னும், ஆயிரமும், நிறைப்பெயரும், அளவுப்பெயரும், பிற பெயரும் வரின், பண்புத்தொகையில் இற்றுச்சாரியையேயன்றி இன் சாரியையும் தோன்றும்: அங்ஙனந் தோன்றுமிடத்துப் பத்தென்பதின் ஈற்றுயிர்மெய் கெடும்.
உதாரணம்.
பத்து 10 ஆயிரம் - பதினாயிரம்
கழஞ்சு - பதின்கழஞ்சு
கலம் - பதின்கலம்
மடங்கு - பதின்மடங்கு
ஒன்பது 10 ஆயிரம் - ஒன்பதினாயிரம்
கழஞ்சு - ஒன்பதின்கழஞ்சு
கலம் - ஒன்பதின்கலம்
மடங்கு - ஒன்பதின்மடங்கு
----
136. ஒன்பதொழிந்த ஒன்று முதற் பத்தீறாகிய ஒன்பதென்களையும் இரட்டித்து சொல்லுமிடத்து, நிலைமொழியின் முதலெழுத்து மாத்திரம் நிற்க, அல.லென் வெல்லாங் கெட்டு, முதனெடில் குறுகவும், வந்தவை உயிராயின் வகரவொற்றும், மெய்யாயின் வந்த எழுத்தும் மிகவும் பெறும்.
உதாரணம்.
ஒன்று 10 ஒன்று - ஒவ்வொன்று
இரண்டு 10 இரண்டு - இவ்விரண்டு
மூன்று 10 மூன்று - மும்மூன்று
நான்கு 10 நான்கு - நந்நான்கு
ஐந்து 10 ஐந்து - ஐவைந்து
ஆறு 10 ஆறு - அவ்வாறு
ஏழு 10 ஏழு - எவ்வேழு
எட்டு 10 எட்டு - எவ்வெட்டு
பத்து 10 பத்து - பப்பத்து
சிறு பான்மை ஒரோவொன்று, ஒன்றொன்று என வருதலு முண்டு.
- தேர்வு வினா
130. ஒன்று என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
இரண்டு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்? மூன்று என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
நான்கு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
ஐந்து என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
ஆறு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்? ஏழு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
எட்டு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
இவ் வெண்ணுப் பெயர்கள் இவ்விகாரமின்றியும் வருமோ?
131. ஒன்பது என்பதன் முன் பத்து வரின் எப்படி புணரும்?
132. ஒன்று முதல் எட்டீறாக நின்ற எண்ணுப் பெயர்கண் முன் பத்து வரின் எப்படி புணரும்?
133. ஒருபது முதல் எண்பதீறாகிய எண்களின் முன் ஒன்று முதல் ஒன்பதெண்ணும் அவற்றையடுத்த பிற பெயரும் வரின் எப்படி புணரும்?
134. பத்தின் முன் இரண்டு வரின் உம்மைத்தொகையில் எப்படிப் புணரும்? பத்தின் முன் இரண்டொழிந்த ஒன்று முதல் எட்டீறாகிய எண்கள் வரின் உம்மைத்தொகையில் எப்படி புணரும்?
135. பத்தின் முன்னும் ஒன்பதின் முன்னும் ஒன்று முதலிய எண்ணுப் பெயரும் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் பிறபெயரும் வரின், பண்புத்தொகையில் எப்படி புணரும்? பத்தின் முன்னும் ஒன்பதின் முன்னும் ஆயிரமும் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் பிறபெயரும் வரின் பண்புத்தொகையில் இற்றுச்சாரியையேயன்றி வேறு சாரியையுந் தோன்றுமோ?
136. ஒனபதொழிந்த ஒன்று முதற் பத்தீறாகிய ஒன்பதென்களையும் இரட்டித்து சொல்லுமிடத்து, எப்படி புணரும்?
-----
மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயர் முன்னும் ஏவல் வினை முன்னும் மெய் புணர்தல்
137. ஞ், ண், ந், ம், ல், வ், ள், ன் என்னும் இவ்வெட்டு மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயரும், ஏவல் வினை முற்றும், தம்முன் யகரமல்லாத மெய்கள் வரின், உகரச் சாரியை பெறும். தொழிற்பெயரின் சாரியைக்கு முன் வரும் வல்லினம் மிகும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
உரிஞ10க்கடிது உரிஞ10க்கடுமை
உண்ணுஞான்றது உண்ணுஞாற்சி
பொருநுவலிது பொருநுவன்மை
உரிஞகொற்றா
உண்ணுநாகா
பொருநுவளவா
திரும், செல், வவ், துள், தின் முதலியனவற்றோடும் இவ்வாறே யொட்டிக்கொள்க.
முதனிலைத் தொழிற்பெயராவது தொழிற்பெயர் விகுதி குறைந்தது. முதனிலை மாந்திர நின்று தொழிப்பெயர்ப் பொருளைத் தருவதாம்.
இவ்வொட்டீற்று ஏவல் வினைகளுள்ளே, உண்கொற்றா, தின் சாத்தா, வெல்பூதா, தூள் வளவா என, ண, ன, ல, ள, என்னும் இந்நான்கீறும், உகரச்சாரியை பெறாதும் நிற்கும்.
பொருநூதல் - மற்றொருவர்போல வேடங்கொள்ளுதல் பொருந் என்பது தொழிற்பெயராவதன்றிஅ த்தொழிலினரை உணர்த்துஞ் சாதிப்பெயருமாம்.
பொருநூக்கடிது என நகரவீற்றுச் சாதிப்பெயரும் வெரிநுக்கடிது என நகரவீற்றுச் சினைப்பெயரும், உகரச்சாரியை பெறுமெனவுங்கொள்க. வெரிந் - முதுகு.
- தேர்வு வினாக்கள்
137. ஞ, ண, ந, ம, ல, வ, ள, ன என்னும் இவ்வெட்டு மெய்யீற்று முதனிலைத் தொழிற் பெயரும், ஏவல் வினை முற்றும், தம் முன் யகர மல்லாத மெய்கள் வரின், எப்படிப் புணரும்?
முதனிலைத் தொழிற் பெயராவது யாது? இவ் வொட்டீற்றேவல் வினைகளுள்ளே, உகரச் சாரியை பெறாதும் நிற்பன உளவோ? பொருநுதல் என்பதற்குப் பொருள் என்ன?
பொருந் என்பது தொழிற்பெயராவதன்றி, வேறு பெயரும் ஆமோ? நகரவீற்றுப் பெயர் பொருந் அன்றி வேறும் உண்டோ?
வெரிந் என்பதற்குப் பொருள் என்னை? பொருந் என்னுஞ் சாதிப் பெயரும், வெரிந் என்னுஞ் சினைப் பெயரும், உகரச்சாரியை பெறவோ?
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

