முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 24. மன்னவன் பெருமையும் கொடைச் சிறப்பும் கூறி
வாழ்த்துதல்
பதிற்றுப்பத்து - 24. மன்னவன் பெருமையும் கொடைச் சிறப்பும் கூறி வாழ்த்துதல்
துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சீர் சால் வெள்ளி
| நெடு வயின் ஒளிறு மின்னுப் பரந்தாங்கு, புலி உறை கழித்த புலவு வாய் எஃகம் ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி, ஆர் அரண் கடந்த தார் அருந் தகைப்பின் பீடு கொள் மாலைப் பெரும் படைத் தலைவ! |
5 |
|
ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர் வழி மொழிந்து ஒழுகி, ஞாலம் நின்வழி ஒழுக, பாடல் சான்று, நாடுடன் விளங்கும் நாடா நல்லிசைத் |
10 |
|
திருந்திய இயல் மொழித் திருந்திழை கணவ! குலை இழிபு அறியாச் சாபத்து வயவர் அம்பு களைவு அறியாத் தூங்கு துளங்கு இருக்கை, இடாஅ ஏணி இயல் அறைக் குருசில்! நீர், நிலம், தீ, வளி, விசும்போடு, ஐந்தும் |
15 |
|
அளந்து கடை அறியினும், அளப்பு அருங் குரையை! நின் வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே! உண்மரும், தின்மரும், வரைகோள் அறியாது, குரைத் தொடி மழுகிய உலக்கை வயின்தோறு அடைச் சேம்பு எழுந்த ஆடுறும் மடாவின், |
20 |
|
எஃகு உறச் சிவந்த ஊனத்து, யாவரும் கண்டு மதி மருளும் வாடாச் சொன்றி வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர, வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப, |
25 |
|
கலிழும் கருவியொடு கை உற வணங்கி, மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும் கொண்டல் தண் தளிக் கமஞ் சூல் மா மழை கார் எதிர் பருவம் மறப்பினும்- பேரா யாணர்த்தால்; வாழ்க நின் வளனே! |
30 |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - இயல், நின், வலன், வெள்ளி, சீர், சால், வண்ணம்

