நற்றிணை - 275. நெய்தல்

செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக் காணார் முதலொடு போந்தென, பூவே படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத் தன்னுறு விழுமம் அறியா, மென்மெல, தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் |
5 |
பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்கு யான் நினைந்து இரங்கேனாக, நோய் இகந்து, அறனிலாளன் புகழ, எற் பெறினும், வல்லேன்மன்- தோழி!- யானே. |
தோழீ! சிவந்த நெற்கதிரை யறுக்கும் மள்ளர் தம் கூரிய அரிவாளினாலே புண்படக் காணாராகக் கதிர்த்தூரொடும் போந்ததனாலே; அம்மலர் அரிவாளொடும் கதிரொடும் கலந்தனவாகிய அரிக்கிடையிலே படுக்கையாகக் கிடந்து; தான் உற்ற துன்பத்தை ஆராயாமல்; மெல்ல மெல்லக் கொடிய ஆதித்தனைக் காண்டலும் இனிய துயிலிடத்துப் பசிய வாயைத் திறவாநிற்கும் பேதைமையுற்ற நெய்தன்மிக்க பெரிய கடற்கரைத் தலைவனுக்காக; யான் படுகின்ற துன்பத்தையும் கடந்து அவனை நினைந்து இரக்கம் உறுவேன் அல்லேன் ஆதலால், அவனை வெறுத்தேனுமல்லேன்; யான் அவ்வறனிலாளன் தன்னை அயலார் புகழும்படி என்னை மீட்டும் பெறுவதாயினும் அதற்கும் இயைகின்றேன்; அங்ஙனம் வெறாது விடப்பட்டதனால் அதுவும் இல்லையாயிற்று;
சிறைப்புறமாகத் தலைமகனது வரவுணர்ந்து வற்புறுப்ப, வன்புறை எதிர்மொழிந்தது. - அம்மூவனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 273 | 274 | 275 | 276 | 277 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யான், அவனை, நினைந்து, கதிரொடும்