நற்றிணை - 156. குறிஞ்சி
நீயே, அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து, எம் கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும், பேர் அன்பினையே- பெருங் கல் நாட!- யாமே, நின்னும் நின் மலையும் பாடி, பல் நாள் சிறு தினை காக்குவம் சேறும்; அதனால், |
5 |
பகல் வந்தீமோ, பல் படர் அகல! எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி அரியல் ஆர்ந்தவர் ஆயினும், பெரியர்; பாடு இமிழ் விடர் முகை முழங்க, ஆடு மழை இறுத்தது, எம் கோடு உயர் குன்றே. |
10 |
பெரிய மலை நாடனே! நீ தானும் இரவில் வருநெறி தவறின் அந் நெறியை மெல்ல அடி வைத்து அறிந்து ஒதுங்கிச் செல்லுதற்குங் கூடாத நிரம்பிய இருட்பொழுதினில் வந்து; காவலையுடைய எமது அகன்ற மாளிகையின் உள்ளின்கண்ணதாகிய காவலையுங் கடந்து வந்து கூடி; பெரிய அன்பினையுடையையாயிராநின்றனை; கொறுக்கச்சி முளைத்தடர்ந்த பெரிய மலைப்பக்கத்துள்ள சிறுகுடியின்கண் எமர் கள்ளை மிகுதியாகவே பருகி மயங்கினவராயினும் அவர் தாம் வெகுளியில் மிகப் பெரியவராயிராநின்றார்; அன்றியும் இயங்குகின்ற மேகம் தான் முழங்குகின்ற இடியினொலி பிளவுபட்ட மலைமுழையின்கண்ணும் எதிரொலி முழங்கும்படி எமது கொடுமுடியுயர்ந்த குன்றின்கண்ணே வந்து தங்கியிராநின்றது; மற்றும் யாம் நின்னையும் நின்மலையையும் பாடிப் பற்பல நாளளவும் சிறிய தினைப்புனத்தைக் காக்கும் பொருட்டு நாளையே செல்லாநிற்பேம்; அதனால்எம்முடைய பலவாய துன்பமெல்லாம் தீரும்படியாக நீ பகற்பொழுதிலே ஆங்கு வந்து முயங்குவாயாக !
இரவுக்குறி மறுத்தது. - கண்ணங் கொற்றனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 154 | 155 | 156 | 157 | 158 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வந்து, பெரிய, எமது, அறிந்து