முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 343. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 343. பாலை - தோழி கூற்று
(தோழி தலைவியிடம், “நீ தலைவனுடன் செல்வதை விரும்பிமேற்கொள்வாயாக” என்றது.)
நினையாய் வாழி தோழி நனைகவுள் அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென மிகுவலி இரும்புலிப் பகுவா யேற்றை வெண்கொடு செம்மறுக் கொளீஇ விடர்முகைக் கோடை யொற்றிய கருங்கால் வேங்கை |
5 |
வாடுபூஞ் சினையிற் கிடக்கும் உயர்வரை நாடனொடு பெயரும் ஆறே. |
|
- ஈழத்துப் பூதன்றேவனார். |
முடிபு: தோழி, நாடனொடு பெயருமாறு நினையாய்; வாழி!
கருத்து: நீ தலைவனுடன் செல்லுதலே நன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 341 | 342 | 343 | 344 | 345 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 343. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, கூற்று, தலைவனுடன், கிடக்கும், நாடனொடு, வாழி, சங்க, எட்டுத்தொகை, நினையாய்