முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 259. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 259. குறிஞ்சி - தோழி கூற்று
(தோழி அறத்தொடு நின்றபின், அங்ஙனம் தான் செய்ததைத் தலைவன் அறிந்தால் வரைந்து கொள்ளுவதற்குரிய முயற்சிகளைச் செய்வானென்று தான் எண்ணியதைத் தலைவிக்கு உணர்த்துவாளாய், "பொய் சொல்லுவதில் பயன் யாது? தலைவன் நன்னெஞ்சமுடையான்" என்று கூறியது.)
மழைசேர்ந் தெழுதரு மாரிக் குன்றத் தருவி யார்ந்த தண்ணறுங் காந்தள் முகையவிழந் தானா நாறு நறுநுதல் பல்லிதழ் மழைக்கண் மாஅ யோயே ஒல்வை யாயினுங் கொல்வை யாயினும் |
5 |
நீயளந் தறிவைநின் புரைமை வாய்போற் பொய்ம்மொழி கூறல தெவனோ நெஞ்ச நன்றே நின்வயி னானே. |
|
- பரணர். |
முடிபு: மாஅயோயே, நின் புரைமை நீ அறிவை; பொய்ம்மொழி கூறல் எவன்? நன் வயினான் நெஞ்சம் நன்று.
கருத்து: நான் அறத்தொடு நின்றதனால் நன்மையே விளையும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 257 | 258 | 259 | 260 | 261 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 259. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, உடைய, குறுந்தொகை, கூற்று, குறிஞ்சி, பொய்ம்மொழி, நின், புரைமை, நறிய, அறத்தொடு, எட்டுத்தொகை, சங்க, தான், தலைவன், பொய்