கலித்தொகை - மருதக் கலி 99
| நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்து, அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது, குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் | 5 |
|
பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த இழை அணி கொடித் திண் தேர், இன மணி யானையாய்! அறன் நிழல் எனக் கொண்டாய், ஆய் குடை; அக் குடைப் புற நிழற்கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகா பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை! | 10 |
|
பொய்யாமை நுவலும், நின் செங்கோல்; அச் செங்கோலின் செய் தொழில் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகா காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை! ஏமம் என்று இரங்கும், நின் எறி முரசம்; அம் முரசின் ஏமத்து இகந்தாளோ, இவள்? இவண் காண்டிகா | 15 |
|
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட உழப்பாளை! ஆங்கு நெடிது சேண் இகந்தவை காணினும், தான் உற்ற வடுக் காட்ட, கண் காணாதற்றாக, என் தோழி தொடி கொட்ப நீத்த கொடுமையைக் | 20 |
| கடிது என உணராமை கடிந்ததோ, நினக்கே. |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 97 | 98 | 99 | 100 | 101 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - இவள், நின், இவண், காண்டிகா, பட்டாளோ, பிழையாது

