கலித்தொகை - முல்லைக் கலி 102
| கண் அகன் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து, ஏற்ற தண் நறும் பிடவமும், தவழ் கொடித் தளவமும், வண்ண வண் தோன்றியும், வயங்கு இணர்க் கொன்றையும், அன்னவை பிறவும், பன் மலர் துதைய, தழையும் கோதையும் இழையும் என்று இவை | 5 |
|
தைஇயினர், மகிழ்ந்து, திளைஇ விளையாடும் மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு என் உயிர் புக்கவள், இன்று; ஓஒ! இவள், 'பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால், திரு மா மெய் தீண்டலர்' என்று, கருமமா, | 10 |
|
எல்லாரும் கேட்ப, அறைந்து அறைந்து, எப்பொழுதும் சொல்லால் தரப்பட்டவள்; 'சொல்லுக!' 'பாணியேம்' என்றார்; 'அறைக' என்றார், பாரித்தார், மாணிழை ஆறாகச் சாறு; சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து, நோக்கும் வாய்! எல்லாம் | 15 |
|
மிடை பெறின், நேராத் தகைத்து; தகை வகை மிசைமிசைப் பாயியர், ஆர்த்து உடன் எதிர்எதிர் சென்றார் பலர்; கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து, உருத்து எழுந்து ஓடின்று மேல்; | 20 |
|
எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர் அவருள், மலர் மலி புகல் எழ, அலர் மலிர் மணி புரை நிமிர் தோள் பிணைஇ | 25 |
|
எருத்தோடு இமிலிடைத் தோன்றினன்; தோன்றி, வருத்தினான் மன்ற, அவ் ஏறு; ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்கொலோ ஏறு உடை நல்லார் பகை; மடவரே, நல் ஆயர் மக்கள் நெருநல், | 30 |
|
அடல் ஏற்றெருத்து இறுத்தார்க் கண்டும், மற்று இன்றும், உடல் ஏறு கோள் சாற்றுவார்! ஆங்கு, இனி தண்ணுமைப் பாணி தளராது எழூஉக பண் அமை இன் சீர்க் குரவையுள், தெண் கண்ணி, | 35 |
|
திண் தோள், திறல் ஒளி, மாயப் போர், மா மேனி, அம் துவர் ஆடைப் பொதுவனோடு, ஆய்ந்த முறுவலாள் மென் தோள் பாராட்டி, சிறுகுடி மன்றம் பரந்தது, உரை! |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 100 | 101 | 102 | 103 | 104 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோள், என்றார், பலர், அறைந்து, புகல், என்று, இவள், மலர்

