அகநானூறு - 181. பாலை
|  துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,  பின் நின்று பெயரச் சூழ்ந்தனைஆயின், என் நிலை உரைமோ நெஞ்சே! ஒன்னார் ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ,  | 
    5 | 
| முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,  ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன்,  | 
    10 | 
| பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க்  காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி, எக்கர் இட்ட குப்பை வெண் மணல் வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை,  | 
    15 | 
| நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,  ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும் மகர நெற்றி வான் தோய் புரிசைச்  | 
    20 | 
| சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்  புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர் பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால், பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள், அணங்குசால், அரிவை இருந்த  | 
    25 | 
| மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே. | 
இடைச் சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 179 | 180 | 181 | 182 | 183 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› | 
	தேடல் தொடர்பான தகவல்கள்:
	
						அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நாறும், கெழு, பெருந்

