அகநானூறு - 11. பாலை
| வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு, இலை இல மலர்ந்த முகை இல் இலவம் கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி, |
5 |
| கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென, வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப் படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர், மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் |
10 |
| அவரும் பெறுகுவர்மன்னே! நயவர, நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து அறு குளம் நிறைக்குந போல, அல்கலும் அழுதல் மேவல ஆகி, பழி தீர் கண்ணும் படுகுவமன்னே! |
15 |
தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து, ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்'என்பது படச் சொல்லியது. - அவ்வையார்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தலைமகள், ஆற்றாளாய

