திருவகுப்பு - 13. சேவகன் வகுப்பு
இருபிறை எயிறு நிலவெழ உடலம் இருள்படு சொருபம் உடைக்கோ விடவே |
இறுகிய கயிறு படவினை முடுகி எமபடர் பிடரி பிடித்தே கொடுபோய் |
அருமறை முறையின் முறை முறை கருதி அதரிடை வெருவ ஒறுத்தால் வகையால் |
அறிவொடு மதுர மொழியது குழறி அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய் |
ஒருபது சிரமும் இருபது கரமும் விழஒரு பகழி தொடுத்தோன் மருகா |
உரமது பெரிய திரிபுரம் எரிய உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா |
மருவளர் அடவி வனிதையர் பரவ மரகத இதணில் இருப்பாள் கணவா |
வளைகடல் கதற நிசிசரர் மடிய மலையொடு பொருத முழுச்சே வகனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruvaguppu, திருவகுப்பு, Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - முறை