திருப்புகழ் - பாடல் 697 - திருமயிலை
ராகம் - ....; 
  தாளம் -
| தனதன தத்தன தானா தானன தனதன தத்தன தானா தானன தனதன தத்தன தானா தானன ...... தனதான | 
| வருமயி லொத்தவ ¡£வார் மாமுக மதியென வைத்தவர் தாவா காமிகள் வரிசையின் முற்றிய வாகா ராமியல் ...... மடமாதர் மயலினி லுற்றவர் மோகா வாரிதி யதனிடை புக்கவ ராளாய் நீணிதி தருவிய லுத்தர்கள் மாடா மாமதி ...... மிகமூழ்கி தருபர வுத்தம வேளே சீருறை அறுமுக நற்றவ லீலா கூருடை அயிலுறை கைத்தல சீலா பூரண ...... பரயோக சரவண வெற்றிவி நோதா மாமணி தருமர வைக்கடி நீதா வாமணி மயிலுறை வித்தவு னாதா ராமணி ...... பெறுவேனோ திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி ...... தொதிதீதோ தெனவரி மத்தள மீதார் தேமுழ திடுவென மிக்கியல் வேதா வேதொழு திருநட மிட்டவர் காதே மூடிய ...... குருபோதம் உரை செயு முத்தம வீரா நாரணி உமையவ ளுத்தர பூர்வா காரணி உறுஜக ரக்ஷணி நீரா வாரணி ...... தருசேயே உயர்வர முற்றிய கோவே யாரண மறைமுடி வித்தக தேவே காரண ஒருமயி லைப்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே. | 
அசைந்து வரும் மயில் போன்றவர்கள், பொருள் கொடுப்பவர்கள் வந்தால் (அவர் முன்பு தமது) அழகிய முகத்தை பூரண நிலவைப் போல வைத்துக் கொள்பவர்கள், எதிர் பாய்தல் இல்லாத (உண்மையில் மோகம் கொள்ளாத) ஆசைக்காரிகள், ஒருவிதமான ஒழுங்கைக் கைப்பிடிக்கும், அழகு நிறைந்த, தகுதி வாய்ந்த மென்மையான (விலை) மாதர்கள், காம வசப்பட்டு அவர்களுடைய மோகம் என்னும் கடலில் புகுந்து அவர்களுடைய ஆளுகைக்கு உட்பட்டு (என்னுடைய) பெரிய சொத்துக்களை எல்லாம் தத்தம் செய்தும், மரம் போன்று அருட் குணம் இல்லாத லோபிகளாகிய விலைமாதர்கள், இவ் வேசையர் மாட்டு ஈடுபட்டு, நல்ல அறிவு அறவே அற்று மூழ்கிக் கிடப்பவன் நான். திருவருளைத் தரும் மேலான உத்தமனே, பெருமை வாய்ந்த ஆறு முகனே, நல்ல தவ விளையாடல்களை புரிபவனே, கூர்மை கொண்ட வேலைப் பிடித்த கரத்தனே, தரும மூர்த்தியே, பரிபூரணனே, மேலான யோக மூர்த்தியே, சரவண பவனே, வெற்றி விநோதனே, உயர்ந்த மணியைத் தருகின்ற பாம்பை அடக்குகின்ற, நீதியாயுள்ள, அழகிய மயிலின் மேல் வீற்றிருக்கும் ஞான மூர்த்தியே, உனது பற்றுக் கோடு என்னும் பெருமையைப் பெறுவேனோ? திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி தொதிதீதோ என்ற இவ்வாறான ஒலிகளுடன் திருமால் மத்தளம் மீது நிரம்ப வாசிக்கும் இடத்தில் முழவு வாத்தியத்தை திடு திடு என்று வாசிக்க, மிகுந்த தகுதி வாய்ந்த பிரமனும் (தாளம் போட்டுத்) தொழுகின்ற போது, திரு நடனம் செய்கின்ற சிவபெருமான் தமது செவிகளை (உபதேசம் கேட்க) பொத்தச் செய்த ஞானகுருவாக இருந்து ஞானப் பொருளை உபதேசித்த மேலானவனே, வீரனே, நாராயணி, உமையவள், வடக்கு கிழக்கு முதலிய திசைகளின் ஆதி தேவதை, உலகை மிகவும் காப்பவள், மறைக்கின்ற (திரோதான) சக்திக் குணம் உடையவள் ஈன்ற குழந்தையே, உயர்ந்த வரங்களைத் தரும் தலைவனே, வேத உபநிஷதங்களின் முடிவில் விளங்கும் ஞானியே, மூல காரணனே, ஒப்பற்ற மயிலாப்பூரில்* வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே. 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 695 | 696 | 697 | 698 | 699 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› | 
	தேடல் தொடர்பான தகவல்கள்:
	
	Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தொகுதொகு, தீதிதி, தித்திதி, தொத்தொகு, தோதோ, வாய்ந்த, தோதிகு, திரிரிரி, தீதீ, தானா, தனதன, தானன, தத்தன, மூர்த்தியே, அவர்களுடைய, திடு, தகுதி, என்னும், மோகம், நல்ல, இல்லாத, தரும், மேலான, உயர்ந்த, குணம், தித்திமி, சரவண, பெறுவேனோ, பூரண, முற்றிய, தாளம், திமிதிமி, திருமயிலை, பெருமாளே, தமது, தொதிதீதோ, தீதிமி, ஜேஜே, அழகிய
 கலைக் களஞ்சியம்
 கலைக் களஞ்சியம்

 
				
