விழுப்புரம் - தமிழக மாவட்டங்கள்
சித்தாமூர் :
திண்டிவனத்திற்கு வடக்கில் 16 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு தமிழ்நாட்டு சமணர்கள் நிறைய வாழ்கின்றனர். தமிழகத்திலுள்ள ஒரே ஒரு ஜைன மடம் இங்குள்ளது. மடத்தில் எண்ணற்ற சமண சமயம் தொடர்பாக ஏடுகளும், ஆவணங்களும் உள்ளன. நாயக்கர் கால சமணசமயம் சார்பான ஓவியங்கள் உள்ளன. ஜைனர்களுக்கு முக்கியமான தலமாகும்.
பெருமுக்கல் :
8-ஆம் நூற்றாண்டிலிருந்து பல போர்களைக் கண்ட பூமி. நில மட்டத்திற்கு மேல் 300 அடி உயரத்தில் மலைகளால் சூழப்பட்ட பீடபூமிப் பிரதேசம். 1760 இல் லாலி துரையால் குடியேற்றம் செய்யப்பட்டு கூட் என்கிற ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. இவ்விடம் படைத்தளமாக பயன்படுத்தப்பட்டது. 1781-இல் ஹைதர்அலி பிரஞ்சுக்காரர்களின் உதவியுடன் இதைக் கைப்பற்றினார். 1783 இல் தளபதி ஸ்டூவர்டால் இவ்விடம் அழிக்கப்பட்டது. பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இவ்விடங்களில் கிடைத்துள்ளது தொல்பொருள் ஆய்வாளர் விரும்பி பயணம் செய்யும் இடம்.
உளூந்தூர் பேட்டை :
விழுப்புரம்-திருச்சி வழித்தடத்தில் உள்ள முக்கிய ஊராகும். இங்கு பலாப்பழமும், கொய்யா, மா, முந்திரி போன்றவை பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன.
எலவானாசூர் :
பல்லவ, சோழ, பாண்டிய, விஜய நகர மன்னர்களால் பற்றி கல்வெட்டுகள் கொண்ட கோவில் இங்குள்ளது. இவ்வூர் திருக் கோயிலுக்கு கிழக்கில் 4 வது கி.மீ உள்ளது. இங்கு மீர் ஹூசைன்கான் என்ற போர் வீரன் பெரும் துன்பங்களை மக்களுக்குக் கொடுத்து வந்தான். அவனை 1757 இல் பிரஞ்சு படை முறியடித்தது. அவன் இருந்த கோட்டை இங்குச் சிதலமடைந்து காணப்படுகிறது.
திருவெண்ணெய் நல்லூர் :
திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள திருவெண்ணெய் நல்லூர், கம்பராமாயணம் எழுதிய கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் வாழ்ந்த ஊர். இருவருக்கும் உருவச் சிலைகள் இவ்வூர் கோயிலில் உள்ளன.
மோக்ஷ குளம் :
விழுப்புரம் வட்டத்திலுள்ளது இவ்வூர். இங்கு பட்டு நெசவுத் தொழில் சிறந்து விளங்குகிறது. குடந்தை, காஞ்சி, பட்டு வகைகளுக்கு இணையாக செய்யப்படுகிறது.
கூவாகம் |
திருக்கோயிலூருக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. இங்கு அரவானுக்கு ஒரு கோயில் உள்ளது. இதை கூத்தாண்டவர் கோயில் என்பார்கள். இங்கு அரவானுக்கு தாலி கட்டி அறுக்கும் 'அலி' களின் திருவிழா பெரும் விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
மேச்சேரி :
செஞ்சிக்கு வடக்கில் உள்ளது. இவ்வூர் குன்றில் பாறைச் சரிவில் குளத்தை நோக்கிய கோயில் இருக்கிறது. இக்கோயில் சத்திராதித்யன் என்பவனால் குடைவிக்கப்பட்டது என்கின்றனர். இது பாண்டியர் பாணியுள்ள கோயில், பல்லவர் கால கிரந்த எழுத்து இங்குள்ளது.
புகழ்பெற்ற பெருமக்கள் :
சென்னை ராஜதானி முதல்வராக இருந்த ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியார், உழைப்பாளர் கட்சியின் தோற்றுநர்களில் ஒருவரான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சி, தங்கராஜ் முதலியார், அ.கோவிந்தசாமி, சண்முக உடையார், நடேச முதலியார், திண்டிவனம் இராமமூர்த்தி, திருக்குறள் வி.முனுசாமி, கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விழுப்புரம் - Viluppuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - விழுப்புரம், இங்கு, இவ்வூர், tamilnadu, மாவட்டங்கள், கோயில், தமிழக, உள்ளது, இங்குள்ளது, தமிழ்நாட்டுத், தகவல்கள், அரவானுக்கு, கூவாகம், viluppuram, முதலியார், | , பட்டு, இராமசாமி, திருவெண்ணெய், இவ்விடம், information, districts, பெரும், வடக்கில், இருந்த, நல்லூர்