விழுப்புரம் - தமிழக மாவட்டங்கள்
முக்கிய ஊர்கள் :
விழுப்புரம் :
மாவட்டத்தலைநகர். மொத்த வியாபாரிகள் நிறைந்த ஊர். இவ்வூர் கல்வி, மருத்துவம், மாவட்ட அலுவலங்கள் நிறைந்தது. பல வருடங்களாக, வனஸ்பதி தொழிற்சாலை ஒன்று-இங்கு நடைபெற்று வருகிறது. ஆண்டொன்றுக்கு 7,500 மெ.டன் வனஸ்பதி தயாராகிறது. பல சிறு,சிறு எண்ணெய் ஆலைகளும் இங்கு உள்ளன. சென்னைக்கும் திருச்சிக்கும் அடுத்தபடியாகத் தென்னக இரயில்வேயினால் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருவது விழுப்புரம் இரயில் சந்திப்பு நிலையமாகும். இங்கிருந்து திருச்சிக்கு மெயின்லைன், காட்லைன் இரண்டும், சென்னைக்கு ஒன்றும், காட்பாடிக்கு ஒன்றும், புதுவைக்கு ஒன்றுமாக ஐந்து புகை வண்டிப் பாதைகள் செல்கின்றன. மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இந்தச் சந்திப்பு 24 மணிநேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இதுபோலவே பேருந்து நிலையமும் செயல்படுகிறது.
திண்டிவனம் :
விழுப்புரத்திற்கு அடுத்த பெரும் நகரம் இது. சிறந்த வணிகத்தலம். நெல் கொள்முதல் விற்பனையில் சிறந்து விளங்குகிறது. அரிசி ஆலைகள் பல இயங்கி வருகின்றன. புளியமரங்கள் நிறைந்த காரணத்தால் திண்டிவனம் என்று அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் இதன் பெயர் கிடங்கில். இவ்வூரை தலைநகராகக் கொண்டு ஓய்மாநாட்டு நல்லியக்கோடன் இப்பகுதியை ஆண்டான் என்று "சிறுபாணாற்றுப்படை" கூறுகிறது. இவனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்பவர் பாடினார். இவரும் இப்பகுதியைச் சேர்ந்த 'மரக் காணத்தை' சொந்தவூராகக் கொண்டவர் என்கின்றனர். நிலவளம் மிக்க இவ்வூர் பெரும்பாலும் வானம் பார்த்த பூமி. மணிலா, நெல் முக்கிய பயிர்களாகும்.
மரக்காணம் :
கடற்கரையோமாக உள்ள ஊர். இங்கு பழைய காலத்தில் துறைமுகம் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. தற்போது பெருமளவில் உப்பு விளைவிக்கப்படுகிறது.
கள்ளக் குறிச்சி :
கல்ராயன் மலையை அரணாகக் கொண்ட காடுகள் நிறைந்த வட்டம் கள்ளர்கள் நிறைந்த காட்டுப் பிரதேசமாக விளங்கியதால் 'கள்ளர் குறிச்சி' பின்னர் கள்ளக்குறிச்சியாக மருவியிருக்கலாம் என்கின்றனர். மற்ற வட்டத்தை விட இங்கு மக்கள் தொகை குறைவு. 18-ஆம் நூ ற்றாண்டில் முக்கியத்துவம் உள்ள ஊராக இருந்தது.
தியாகதுருகம் :
கள்ளக்குறிச்சிக்கு கிழக்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு உள்ள மலையில் நவாப்புக்கால் கோட்டையும், பீரங்கிகளும் காணப்படுகின்றது. மலைமீது மலையம்மன் என்ற சமணர்களுடைய கோயில் உள்ளது.மலையின் அடிவாரத்தில் உள்ள குளதின் அருகில் செல்லி அம்மன் கோயில் காணப்படுகிறது. ஆசிரியர் சக்திவேலன் வசிக்கும் ஊரும் இதுதான்.
ரிஷிவந்தியம் :
கள்ளக்குறிச்சிக்கு வடகிழக்கே 18 கி.மீ தொலைவிலுள்ளது. இங்குள்ள உமையொரு பாகரின் கோயிலில் தட்டினால் இசை எழுப்பும் தூண்கள் உள்ளன. இங்கே உள்ள ஒரு யாளிச் சிலையின் திறந்த வாய்க்குள் ஒரு கல் உருண்டை உள்ளது. பந்து போன்ற அவ்வுருண்டையை நம் கைவிரலால் எப்பக்கம் வேண்டுமானாலும் உருட்டலாம். ஆனால் வெளியை எடுக்க முடியாத சிறந்த சிற்ப வேலைப்பாடாகும். இக்கோயில் திருமலை நாயக்கர் சிலை இருக்கிறது.
மேல் மலைனுர் |
இங்கு மீனவர்கள் குலதெய்வமான அங்காளம்மன் ஆலயம் உள்ளது. மாசி மாதத்தில் 'மசானக் கொள்ளை' பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பிராமணியின் பங்கேப்பு விச்சித்திரமாக இருக்கும்.
சிங்கவரம் :
செஞ்சிக்கு 2 மைல்கள் வடக்கில் உள்ளது. தேசிங்குராஜனால் வணங்கப்பட்ட 24அடி நீளம் உள்ள ரங்க நாதர், ஆதிசேசன்மேல் படுத்திருப்பது போல் அமைந்துள்ளது. தலை சற்று திரும்பி இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விழுப்புரம் - Viluppuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - விழுப்புரம், உள்ள, இங்கு, உள்ளது, நிறைந்த, tamilnadu, தமிழக, மாவட்டங்கள், சிறந்த, தமிழ்நாட்டுத், தகவல்கள், காலத்தில், குறிச்சி, என்கின்றனர், கோயில், | , மலைனுர், மேல், நெல், கள்ளக்குறிச்சிக்கு, சிறு, முக்கிய, information, districts, viluppuram, இவ்வூர், வனஸ்பதி, மக்கள், ஒன்றும், சந்திப்பு, வருகிறது, திண்டிவனம்