விழுப்புரம் - தமிழக மாவட்டங்கள்
திருப்புறவார் பனங்காட்டூர் :
இறைவன் : பனங்காட்டீச்சுரர். இறைவி: புறவம்மை. பனையபுரம் என வழங்கும் இவ்வூர் விழுப்புரத்தை அடுத்துள்ள முண்டியம்பாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் சித்திரைத் திங்கள் முதல்நாள் முதல் ஏழாம் நாள் வரை, நாள்தோறும் காலையில் கதிரவன் கதிர்கள் முதலில் இறைவன் மேலும், பின்னர் இறைவி மேலும் விழுகின்றன.
திருவக்கரை :
திருவக்கரை |
கல்மரம் |
கல்மரம் :
'மரம் கல்லாலானதை' இங்கு பார்க்கலாம். இது பல இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
மயிலம் :
திண்டிவனத்திலிருந்து கிழக்கே புதுச்சேரி செல்லும் வழித்தடத்தில் 10 கி.மீ தொலைவில் உள்ளது. பரந்த மேட்டின் மேல் அமைந்துள்ள இவ்வாலயம், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் உள்ளது. பங்குனி உத்திரம் காவடி ஊர்வலம் பார்க்க வேண்டியது. இங்கு பல சாமியார்களின் சமாதிகள் உள்ளன.
சுற்றுலாத் தலங்கள் :
செஞ்சிக் கோட்டை :
செஞ்சிக் கோட்டை |
கல்ராயன்மலை :
திருக்கோவலூரிலிருந்து பேருந்து வசதி உண்டு. கல்ராயன் மலையில் 'மலையாளிகள்' என்ற மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கல்ராயன் மலைக்காடு வளமான காடுகளைக் கொண்டது. இங்கு மூங்கில், தேக்கு, கடுக்காய் மரங்கள் செறிவாகக் காணப்படுகின்றன. மலையின் மீது சில இடங்களில் பழத்தோட்டங்கள் உண்டு. இயற்கை அழகை காண்பதற்கு ஏராளமான இடங்கள் உண்டு. சுனைகள், பள்ளத் தாக்குகள், சிற்றருவிகள் உண்டு. இங்குச் சிறு விலங்குகளான மான், கீரி, பாம்பு, நரி, காட்டுப்பன்றி, மலைப்பாம்பு, கெளதாரி முதலியவற்றைப் பார்க்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விழுப்புரம் - Viluppuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, விழுப்புரம், இங்கு, தொலைவில், உண்டு, தமிழக, மாவட்டங்கள், tamilnadu, மேலும், இறைவன், தமிழ்நாட்டுத், தகவல்கள், முகமும், செஞ்சிக், கல்மரம், வனம், பார்க்கலாம், தேசிங்கு, கல்ராயன், | , ராஜன், இங்குள்ள, செஞ்சி, கோட்டை, வடக்கே, பனங்காட்டூர், information, districts, viluppuram, இறைவி, நிலையத்திலிருந்து, மூன்று, மேற்கே, புதுச்சேரி, திருவக்கரை, உருவம்